எங்கள் திண்டுக்கல் மாவட்டத்தின் மேற்கே கடைசியில் இருக்கும் மலை ஐவர் மலை.ஆயிரக் கணக்கான முனிவர்களும், தவசிகளும் தவமும் யோகமும் புரிந்து, சித்தி பெற்ற இடமாக வணங்கப்படும் மலை அது.

வல்ல நாட்டுச் சித்தர் என்பவர் அங்கே அடிக்கடி வந்து பிரார்த்தனையும், ஜோதி வழிபாடும் செய்து விட்டுப் போவதை அடியேன் பார்த்திருக்கிறேன்.

1979 ஆம் ஆண்டு பெரியசாமி சுவாமிகள் என்று அழைக்கப்பட்ட சித்தர் ஒருவர் இங்கே சமாதி அடைந்தார். பல ஆண்டுகள் இந்த மலையில் தங்கியிருந்து தவம் புரிந்து வந்தவர் அவர்.

அந்தச் சித்தர் சமாதியில் தொண்டு புரிந்து வருபவர் பாலு சாமிகள் என்பவர்.அவர் நைட்டிக பிரம்மச்சாரி.அவரும் ஓர் அம்மன் உபாசகர் தான்.பல ஆண்டுகளாக அவருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாங்கள் இருவரும் மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருப்போம். தியானம்,தவம்,யோகம்,சித்தர்கள்,ஞானிகள்,ஆண்மிகம் தொடர்பான விக்ஷயங்கள் பற்றி எங்கள் பேச்சு அமையும்.

அந்த ஐவர் மலைக்கு நான் இரவு நேரங்களில் தியானம் செய்யப் போவது உண்டு. பாலுசாமி அவர்கள் எனக்குப் பல வகையிலும் உதவி புரிவார்.ஒரே ஒரு விக்ஷயத்தில் மட்டும் எனக்கும் அவருக்கும் கருத்து வேருபாடு உண்டு. பாலுசாமி கண்டித்தது

அடியேன் தியானத்தில் அமர்வதற்கு முன்பாக நம் ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் திருவுருவப் படத்திற்கு அர்ச்சனை செய்து விட்டுத்தான் தியானத்தில் அமர்வேன். அப்படிச் செய்கின்ற போது இரண்டு மூன்று மணி நேரம் வரை கூட எனக்குத் தியானம் கைக்கூடி வரும். இது அடியேன் சொந்த அனுபவம்.இதனைக் கண்டு பாலுசாமி அவர்கள் கண்டிப்பார்.

“சாதாரண மனிதர் படத்தை வைத்து எதற்காக அர்ச்சனை செய்கிறீர்கள்? இது உங்கள் ஆன்ம முன்னேற்றத்திற்கு ஏற்றத்தல்ல. நீங்கள் கும்பிடும் அடிகளார் பெரிய பெரிய பணக்காரர்களோடும் பெரிய பெரிய அரசியல் தலைவர்களோடும் தொடர்பு வைத்துள்ளார். ஆன்மிகம் வளர்க்கும் அடிகளார்க்கு நிறுவனங்கள் எதற்கு? பெரிய பெரிய கட்டிடங்களும் நிறுவனங்களும் அமைத்து வருகிறாரே? இதெல்லாம் ஆன்மிகம் வளர்க்கும் ஒருவர்க்கு தேவதானா?

எங்கே பணம், நிறுவணம், நிர்வாகம் என்று வருகிறதோ அங்கே ஆன்மிகம் இருக்காது. இதெல்லாம் புரியாமல் வீணாக ஒருவரைக் குருநாதர் என்றும் கல்கி அவதாரம் என்றும் கலியுக அவதாரம் என்றும் தாங்கள் விளம்பிக் கொண்டு இருப்பது ஆண்மிகத்திற்கு முரண்பட்டது. நீங்கள் அன்னை ஆதிபராசக்தியை மட்டும் தியானம் பண்ணி வாருங்கள் என்று என்னை வற்புறுத்துவார். என்னைக் குழப்புவார்.

நான் எனக்குத் தெரிந்த அளவில் அவருடைய வாதங்களுக்கு மறுமொழிகள் சொல்வேன்.அடிகளார் மகிமையைப் பற்றி பல எடுத்துக் காட்டுகள் தந்து விளக்குவேன்.ஆனாலும் அவர் ஏற்று கொள்ள மாட்டார்.

“ஒன்று செய்யுங்கள் ! நீங்கள் மருவத்தூருக்கு ஒருமுறை சென்று அடிகளாரை நேரில் தரிசித்துவிட்டு வாருங்கள்.அப்போதாவது அடிகளார் யார் என்று உங்களுக்குப் புரியும். எதையும் அனுபவமாகப் பெற்றால் தவிர, உண்மையை அறிந்து கொள்ள முடியாது” என்பேன்.

அடிகளாரை அவர் குறைத்து மதிப்பிட்டுச் சொல்வது எனக்குப் பிடிக்கவில்லை.எனவே , அடியேன் மூன்று மாத காலம் வரை அவரைச் சந்திப்பதை நிறுத்தி விட்டேன்.

நன்றி சக்தி.இசைமணி செல்வராஜ் சக்தி ஒளி பக்கம் -9 nஏப்ரல் 2009  ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here