ஜ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் அனுபவம்

0
508

தமிழக அரசில் பணியாற்றிய ஜ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் கொஞ்சம் கூடக் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அரசுப் பணி நிமித்தமாகவோ, நண்பர்கள், அதிகாரிகள் ஆகியோருக்குத் துணையாகவோ, எந்தக் கோயிலுக்குப் போகவேண்யிருந்தாலும் அங்கே தரப்படுகின்ற பிரசாதத்தைக் கீழே எறிந்துவிட்டு வந்து விடுவார். 

ஒரு முறை அமைச்சர் ஒருவர் மேல்மருவத்துார் சித்தர்பீடம் வந்தார். அதிகாரி என்ற முறையில் அவரும் அமைச்சரோடு வரவேண்டியிருந்தது. கருவறையில் எல்லோருக்கும் குங்குமப் பிரசாதம் அளிக்கப்பட்டது. அவருக்கும் அளிக்கப்பட்டது. வெளியே வந்த அவர் அந்தப் பிரசாதப் பொட்டலத்தை வீசி எறிய வேண்டிச்  சுற்றும் முற்றும் பார்த்தார். பின் தரையில் உதறினார். பொட்டலம் கீழே விழாமல், உள்ளங்கையில் ஏதோ ஒன்று நெருடிக்கொண்ருப்பது போல இருந்தது. என்ன என்று பார்த்தார்! ஒரு சின்னஞ் சிறிய சுண்டெலி! அதனை உதறி உதறிப் பார்த்தார். அதுவோ கீழே விழாதபடி உள்ளங்கையை கெட்டியாகப் பற்றிக் கொண்டிருந்தது. கையை மூடினார். இப்போது சுண்டெலி இல்லை. பிரசாதப் பொட்டலம் இருப்பது போல உணர்வு. கையைத் திறந்தால்…..சுண்டெலி! கையை மூடினால் பிரசாதப் பொட்டலம். திறந்து பார்த்தால் சுண்டெலி! ஆச்சரியப்பட்டு நின்ற அவர் என்ன செய்வது என்று புரியாமல் குழம்பித்தவித்தார். இந்த நிலையில் மந்திரி மேடைக்குப் போய்விட்டார். வாங்க சார் என்று அழைத்தார் ஒருவர். 

வேறு வழியின்றி மூடியிருந்த கைகளிலிருந்த அன்னையின் குங்குமப் பிரசாதத்தை அப்படியே கால் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு மேடையை நோக்கி விரைந்தார். 

இத்தனை காலமாகக் கோவில்களில் வாங்கிய பிரசாதப் பொட்டலங்களை அலட்சியமாக வீசி எறிந்தேன் அல்லவா?
அப்படி இங்கே எறிய முடியாதபடி இந்த அம்மா என் தலைக்கணத்தைக் குறைத்துவிட்டாள் என்று தன் நண்பர் ஒருவரிடம் சொல்லி மகிழ்ந்தார் அவர்.