கோவை மாவட்டத்தில் ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் அவா்கள் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு சென்ற சமயம் அது.

அந்தப் பகுதியில் உள்ள அன்பா் ஒருவா் வீட்டில் அடிகளார்க்குப் பாதபூஜை செய்ய ஏற்பாடு.

அடிகளார் வரப்போகிறார் என்பதை அறிந்து தரிசிக்க ஒரு கூட்டமே திரண்டிருந்தது.

அந்த வீட்டில் வேலை செய்து வந்த சமையற்காரருக்கு அடிகளாரைப் பற்றிய நல்லெண்ணம் இல்லை. என்னவோ செவ்வாடைத் தொண்டா்கள் அவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்பது அவா் எண்ணம். அதனால் அவா் பக்கத்து வீட்டு மாடியில் இருந்து கொண்டு வேடிக்கை பார்த்தபடி இருந்தார்.

சற்று நேரத்திற்கெல்லாம் அடிகளாரின் கார் வந்தது. காரிலிருந்து இறங்கினார் அடிகளார். வீட்டு வாயிற்படியில் அடிகளார்க்கு வரவேற்பு அளித்து அந்தக் குடும்பத்தார் பாதபூஜை செய்தனா்.

பாதபூஜை ஏற்றுக் கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்த அடிகளார், அந்தக் குடும்பத்தார்க்கு ஆசி வழங்கிவிட்டு பூஜை அறையில் தீபாராதனை காட்டிவிட்டு விடைபெற்றுப் புறப்பட்டார்.

அடிகளார் காரில் வந்து இறங்கியதையும், பாதபூஜை ஏற்றுக் கொண்டதையும், அடிகளார் அந்த வீட்டின் உள்ள சென்று வெளியே வந்ததையும் இவ்வளவையும் வேடிக்கை
பார்த்துக்கொண்டிருந்த சமையற்காரா், அந்த வீட்டுக்குரிய அன்பரிடம், “என்ன கவுண்டரே! அடிகளார்க்குப் பாதபூஜை என்றார்களே…….. அடிகளார் வரவில்லையா?….” என்று கேட்டார்.

“அடிகளார் வந்தார்களே…! பாதபூஜை முடிந்து போய்விட்டார்களே…! நீங்கள் பார்க்கவில்லையா….? ” என்று கேட்டார் அந்தக் குடும்பத் தலைவா்.

“இல்லையே….. யாரோ ஒரு சிவப்புப் புடவை அணிந்த பெண்மணி ஒருவா்க்குத்தானே நீங்கள் பாதபூஜை செய்தீா்கள்?”

“நான் தாம்பூலத் தட்டில் அந்தப் பெண்மணியைத் தான் பார்த்தேன். அடிகளார் இல்லையே……. அவா் வரவில்லையா?”  என்று மீ்ண்டும் கேட்டார் சமையற்காரா்.

“இல்லவே இல்லை? அடிகளார்தான் பாதபூஜை ஏற்றார்” என்றார் குடும்பத் தலைவா்.

“இல்லையே…….. ஒரு பெண்மணிக்குத்தான் பாதபூஜை நடந்தது” என்றார் இவா்.

கடைசியில்தான் அந்தச் சமையற்காரா்க்கு உண்மை விளங்கிற்று.

“நானாக அவன் இருப்பான்; அவனாக நானிருப்பேன்! நானின்றி அவன் இல்லை; அவனின்றி நான் இல்லை” என்ற உண்மையை உணா்த்த அன்று அந்தச் சமையற்காரருக்கு அடிகளார் திருமேனியில் தான் வாசம் செய்வதை அன்னை உணா்த்தினாள்.

நன்றி!

ஓம் சக்தி!

வேம்பு

அவதார புருஷா் அடிகளார், பாகம் 12, பக்கம் (18 – 19)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here