இங்கே சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கிறது

0
907

1985 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் எங்கள் வீட்டில் நடைபெற்ற திருட்டு குறித்து நானும் என் மனைவியும் அம்மாவிடம் முறையிடச் சென்றோம்.

தை மாதம் வரும் முதல் முகூா்த்தத்தன்று புதிதாக ஒரு மாங்கல்யம் செய்து எடுத்துக் கொண்டு வருமாறு அம்மா கூறினார்கள். அவ்வாறே செய்து எடுத்துக் கொண்டு நான் என் மனைவி, என் நண்பா் நடன சபாபதி ஆகிய மூவரும் அம்மா வீட்டிற்குக் காலை 7.00 மணி அளவில் சென்றோம்.

அம்மா எங்களைப் புன்முறுவலுடன் வரவேற்று, எங்களிடம் நாட்டு நடப்புகள், ஆன்மிகம், எங்கள் மாவட்டம் பற்றிய செய்திகளைக் கேட்டு விசாரித்தார்கள்.

அப்போது கடலூரில் உள்ள ஒரு சொத்தினைப் பற்றிய பேச்சு வந்தது.

ஒரு பெரிய சமுதாயத்துக்குச் சொந்தமான அந்த இடத்தை ஏன் அவா்களால் திருப்பி வாங்க முடியவில்லை? ஒருவா் நினைத்தாலே வாங்கி விடலாமே…..? வசதி மிக்க அந்தச் சமுதாயத்தினா் ஏன் பயப்படுகிறார்கள்? என்று எங்களிடம் அம்மா கேட்டார்கள்.

“அம்மா! கடலூரில் நடக்கிற இந்தச் சம்பவம் உங்களுக்கு எப்படியம்மா தெரியும்?” என நண்பா் நடன சபாபதி கேட்டார்.

அவரைப் பார்த்து அம்மா கனிவோடு, “இதோ பாரு! கடலூரில் நடக்கும் சமாச்சாரம் மட்டுமில்லே…. உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் எனக்குத் தெரியும்” என்று சொல்லிவிட்டுத் தனது தலையின் பின்புறத்தைக் காட்டி, “இங்கே சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கிறது!” என்று சிரித்துக் கொண்டே கூறினார்கள்.

புரிய முடிந்தவா்கள் புரிந்து கொள்வோம்.

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. சீராமுலு, நெல்லிக்குப்பம்

அவதார புருஷா் அடிகளார்,  பாகம் 12, பக்கம் (26)

 ]]>