“வெண்ணெயில் திரி போட்டுப் பற்ற வைத்தால் உடனே எரியாது. எண்ணெயில் திரிபோட்டுப் பற்ற வைத்தால் உடனே பற்றிக்கொள்ளும். வெண்ணெய் சூடுபட்டு உருகிய பிறகுதான் எரிய ஆரம்பிக்கும். உன்னிடம் படிந்துள்ள மன அழுக்குகள் நீங்கி மனம் தூய்மையடைந்து, அது மென்மையாக மாறும்போது தான் உனக்குள் இருக்கிற ஆன்ம ஜோதியை உணர முடியும்.

பாமரனுக்குத் தான் ஜோதி பக்குவம் தெரியும். ஆன்மாவையே ஜோதி வடிவமாகக் காணமுடியும்.

r

தீக்குச்சியிலும் சுவாலை! மெழுகுவர்த்தியிலும் சுவாலை! பெட்ரோல் எரியும்போதும் சுவாலை! எல்லாம் ஒன்றுதான்! எரிபொருள் தான் வித்தியாசம்!

பூமியிலிருந்து கிடைக்கும் பொருள்களெல்லாம் பூமிக்குள்ளேயே போய்ச்சேரும். உணவு, பெட்ரோல், எண்ணெய் எல்லாமே உங்களுக்குப் பூமியிலிருந்து தான் கிடைக்கின்றன.

பூமியைத் தோண்டிக்கொண்டே போனால் ஒரு நாள் உணவுப் பொருளுக்குக் கூடத் தட்டுப்பாடு வரும்.

பூமியின் மேல் மட்டத்தில் எண்ணெய்ப்பொருள் கிடைக்கிறது. படிப்படியாகக் கீழே போகப் போகக் கற்பாறை, தண்ணீர், எண்ணெய் என வேறு வேறு பொருள்கள் வருகின்றன.

அதுபோல ஆன்மிகத்திலும் நீங்கள் ஆழமாகப் போகப் போக அன்னதானம், தருமம், பிறருக்கு உதவுதல் போன்ற தருமசிந்தனைகள் மேலோங்கி வளரும். இவற்றையெல்லாம் செய்யச் செய்ய உன் ஆன்ம உணா்வு உயர்வடையும்.”

ஆன்ம வளர்ச்சி

“ஒரு மரம் பூமியில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் வோ்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சுகின்றது. பூமிக்கு மேலே உள்ள இலைகள் மூலம் காற்றைச் சுவாசிக்கின்றது. அதனால் அம்மரத்திற்கு வளர்ச்சி ஏற்படுகின்றது. அதுபோலவே, மனிதனின் உள்ளுணா்வும், வெளியுணா்வும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்போது தான் ஆன்ம வளா்ச்சி ஏற்படும்.”

உள்ளிருக்கும் ஆன்மாவுக்குப் பயப்படு!

“மின்சாரத்தைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்று பயப்படுகிறாய். நெருப்பைத் தொட்டால் சுடும் என்று பயப்படுகிறாய். இப்படியெல்லாம் வெளியுலகப் பொருள்களுக்குப் பயப்படுகிறாய். ஆனால் உன் உள்ளே இருக்கும் ஆன்மாவிற்குப் பயப்படமாட்டேன் என்கிறாய் !”

–    அன்னையின் அருள்வாக்கு –

நன்றி!

ஓம் சக்தி!

மருவூர் மகானின் 68வது அவதாரத்திருநாள் மலா்

   ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here