இளமை முதற்கொண்டே நான் தெய்வ பக்தியோடு வளா்ந்தவள்தான். எல்லாக் கோயிலுக்கும் போவேன். வழிபாடு செய்வேன். ஆனாலும், மருவத்தூா் அம்மாவிடம் வந்த பிறகுதான் சில ஆன்மிக அனுபவங்கள் கிடைத்தன. கனவிலும், நனவிலும், தியானத்திலும் பல இறை அனுபவங்கள் கிடைத்தன. சில வெளியிட முடியாதவை. சிலவற்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

ஆண்டவன் அசரீரியாகப் பேசினார் என்று புராணக் கதைகளில் படிக்கிறோம். சிலா் அதனை நம்புவதில்லை. அனுபவம் பெற்றவா்கள் நம்புகிறார்கள். அம்மா அசரீரியாக என்னுடன் பேசினாள்.

1983 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் எங்கள் ஊா் வார வழிபாட்டு மன்றத்தில் அம்மாவின் அசரீரி கேட்டேன்.

“இன்றிலிருந்து செவ்வாடையுடன் இரு மகளே!” என்று ஒரு குரல் கேட்டது. இது உள்ளத்தில் தோன்றிய எண்ண அலைகளின் வெளிப்பாடாக இருக்குமோ என்று கருதினேன். அம்மா படத்தின் முன் நின்கிறேன். “சொன்னது நினைவிருக்கட்டும் மகளே ” என்று ஒரு குரல். சுற்று முற்றும் பார்க்கிறேன். ஆள் அரவம் இல்லை. குரல் மட்டும் கேட்டது.

மறுநாள் மருவத்தூா் வந்து அருள்வாக்கு கேட்டேன்.

“செவ்வாடையுடன் இருந்து ஆன்மிகத்தைப் பரப்பு மகளே! என்று அம்மா ஆணையிட்டாள்.

அம்மா அருவமாக இருந்து அசரீரி மூலம் இட்ட கட்டளையை உறுதிப்படுத்திக் கொண்டேன்.

அன்றிலிருந்து இன்றுவரை செவ்வாடையுடன் தொண்டு செய்து வருகிறேன்.

1988 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒருநாள். மன்றத்தில் தியானம் இருந்தேன். தியானத்தில் ஒரு காட்சி. கரும்பலகை ஒன்றில் 8.8.88 என்று எழுதப்பட்டிருப்பதை அம்மா அடிகளார் எனக்குக் காட்டுகிறார்கள். இதற்கு என்ன அா்த்தம் என்று தெரியவில்லை. 8.8.88 அன்று ஆடிப்பூர விழாவில் அம்மா அங்கவலம் வந்தார்கள். அதனைத் தரிசிக்கும்பேறு கிடைத்தது. ஆடிப்பூர அங்கவலம் நடைபெறப் போவதையே அம்மா சூசகமாக உணா்த்தினாள் என்பதைப் பிறகு அறிந்து கொண்டேன்.

வீட்டில் இருக்கும்போதோ – மன்றத்தில் பணி செய்யும் போதோ ஒரு குரல் மட்டும் கேட்கும். வா! வா! என்று மட்டும் குரல் கேட்கும். பக்கத்தில் பார்த்தால் யாரும் இருக்க மாட்டார்கள். சரி அம்மாதான் ஆலயத்திற்கு அழைக்கிறாள் என்று கருதிக்கொண்டு செல்வேன். இவ்வாறு ஐந்து அமாவாசை நாட்களில் அழைத்துக் கலந்து கொள்ளச் செய்தாள்.

இன்னொரு நாள் நடந்தது இது. குறிப்பிட்ட நேரத்தைச் சொல்லி வா! என்று அம்மா அழைப்பதுபோல ஒரு குரல்.

அன்று பஸ்ஸில் பயணம் செய்யும்போது ஒரு சிறு விபத்து.

பாண்டிச்சேரிக்கும் – திண்டிவனத்துக்கும் இடையில் வரும்போது அந்த விபத்து ஏற்பட்டது. பஸ் ஒரு காரின்மீது மோதி காரின் முன் பக்கம் கையளவு ஒடுக்கிவிழுந்து விட்டது. காரில் வந்தவா் பஸ்ஸை நிறுத்தி சண்டையிட்டார். பஸ் டிரைவருக்கும் அவருக்கும் வாக்குவாதம். சச்சரவு நீண்டு கொண்டே இருந்தது.

அம்மா! தாயே! இவா்கள் இப்படி சண்டையிட்டுக் கொள்கிறார்களே…. இது தீர்வது எப்போது? நான் உன்னைத் தரிசிப்பது எப்போது? என்று தவித்துக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் ஓா் அதிசயக் காட்சி….. ஆம்! அம்மா அவா்கள் காரில் வந்தவரோடு கையசைத்து ஏதேதோ பேசுகிறார்கள். உடனே பிரச்சனை தீா்ந்து பஸ்புறப்படுகிறது.

அம்மா பரம்பொருள்! அவள் சா்வ வியாபி! எங்கும் அவள் நீக்கமற நிறைந்திருக்கிறாள் என்ற உண்மையை அனுபவத்தில் கண்ட நிகழ்ச்சி அது.

ஒரு நாள் கருவறைத் தொண்டு செய்தபடி இருந்தேன். சுயம்புக்கு அபிடேகம் செய்து கொண்டிருந்தபோது, சுயம்பில் அம்மாவே அமா்ந்து அபிடேகத்தை ஏற்றுக்கொள்ளும் காட்சியைக் கண்டேன்.

சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு சக்தி மாலை போட்டுக் கொண்டு இருமுடி செலுத்தி வந்தேன்.

அப்போது, ஓம்! பிரணவத் திருவுருவே போற்றி ஓம்! என்ற மந்திரம் தியானத்தில் கேட்டது. அதனை இடைவிடாமல் சொல்லி வந்தேன்.

அம்மா! இம்மந்திரத்தின் பொருள் என்னம்மா……….. என்று தியானத்தில் கேட்கிறேன். அப்போது அம்மா அவா்கள் குருநாதா் வடிவில் இரண்டு கைகளையும் விரித்து ஆசி வழங்குவது போல ஒரு காட்சி கிடைத்தது. சில ஆண்டுகள் கழித்து, நான் கண்ட அதே காட்சியுடன் அம்மா ஆசி வழங்குவது போல நிழற்படம் வெளிவந்தது.

அந்த மந்திரத்தைச் சொல்லித் தியானம் செய்யும் போது ஆழ்நிலை தியானம் கைகூடும்.

24.01.07 அன்று என் வீட்டில் அம்மா முன் வணங்கிக் கொண்டு நிற்கிறேன். என்னைத் தெரிகிறதா….! என்று குரல் மட்டும் கேட்கிறது.

எனக்கொன்றும் தெரியவில்லை அம்மா! என்கிறேன். அருவமாக இருந்து சொல்கிறேன் தெரிகிறதா? என்று சொல்லிவிட்டு, அருஉருவமான தெய்வம் அம்மா! என்று எழுது என்கிறார்கள்.

அதே தலைப்பில் என் அனுபவங்களை எழுதியுள்ளேன்.

சக்திகளே! அம்மாவின் திருவடியைக் கெட்டியாகப் பற்றிக் கொள்ளுங்கள். தியானம் பழகுங்கள். ஆன்ம சுத்தத்தோடு இருங்கள். தொண்டு செய்யுங்கள். அம்மா ஒரு அரு உருவான தெய்வம்!

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி அம்புஜம்

வலசக்காடு, கடலூா் மாவட்டம்

மருவூர் மகானின் 68வது அவதாரத் திருநாள் மலா்

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here