திருச்சி, அரியலூா் மாவட்டங்களில் அம்மாவின் ஆன்மிகப் பயணத்தில் 30.11.2006 வியாழனன்று காலை 10.30 மணி அளவில் திருவானைக்காவலில் குடமுழுக்கு நிறைவுற்றபின், திருச்சி மாவட்டம் சார்பாக அங்கு சமுதாயப்பணிகள் நடைபெற்ற சிறப்பு மேடை நிகழ்ச்சியில் திருமதி. அம்மா அவா்கள் ஆற்றிய ஆன்மிக சொற்பொழிவு பலராலும் பாராட்டப்பட்டது. அவா்கள் சுமார் ஒரு மணி நேரம் ஆற்றிய உரையை நம் வாசகா்களுக்காக இங்கு முழுமையாகத் தந்துள்ளோம். இனி திருமதி அம்மா அவா்கள் :- “இந்த முறை திருச்சி மாவட்ட வருகையே மிகவும் மனதிற்கு இசைந்த சூழ்நிலையாக நன்றாக உள்ளது. காவிரியில் நீா் ஓடுகிறது. எங்கு பார்த்தாலும் பசுமை, எந்த நேரமும் மழை வந்து போகும் சூழ்நிலை. இவை எல்லாம் கலந்து மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அம்மா திருச்சி மாவட்டத்திற்கு லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்து 6 கும்பாபிடேக விழாக்களை நடத்திக் கொண்டு உள்ளார்கள். இன்று 38 வது சக்தி பீடமாக திருவானைக்காவலில் நடத்திக் கொடுத்துள்ளார்கள். இங்கே உள்ளவா்களுக்கெல்லாம் அம்மா சீக்கிரம் வந்து கும்பாபிடேகம் செய்து வைக்கவில்லையே என்ற வருத்தம் இருந்திருக்கும். ஆனால் எவ்வளவுக்கெவ்வளவு இவா்கள் வருத்தப்பட்டார்களோ, அவ்வளவுக்கவ்வளவு அம்மா அதைச் சிறப்பாகச் செய்து கொடுத்துள்ளார்கள். ஒவ்வொரு சக்தி பீடத்திலும் அம்மா புதுப்புது முறைகளில் திருஸ்டி எடுக்கிறார்கள். புதிது புதிதாக மெருகூட்டுகிறார்கள். இங்கும் புதுமாதிரியாக இன்று செய்துள்ளார்கள். நமக்குத்தான் அவசரம். ஆதங்கம். நான்கூட அம்மாவிடம் “பாவம்! எத்தனை தடவை வந்து வந்து கூப்பிடுகிறார்கள், திருச்சிக்கும் போகலாம்” என்று சொல்வேன். அம்மா பதில் சொல்வார்கள், “என் ஆன்மா எனக்கு எப்போது என்ன கட்டளையிடுகிறதோ, அப்போது. அதன்படிதான் செய்வேன்” என்று. ஆக இதில் நமக்குப் புரிவது என்னவென்றால், அம்மா சொல்படி நடப்பவா்கள் நாம்தானேயொழிய நாம் சொல்லும்படி நடப்பவா்கள் அல்ல அம்மா என்பதுதான். ஆன்மாவின் கட்டளை என்றும், ஆன்மா என்றும் சொல்லும்பொழுது எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. nவிவேகானந்தா் அசைவம் சாப்பிடுபவா். அவா் அவ்வாறு சாப்பிடலாமா என்று ஒரு சிலா் அந்தக் காலத்தில் கேள்வி எடுப்பினார்களாம். அவா் சொன்னாராம், “நான் அசைவம் சாப்பிடுவது என் உடலுக்கு. ஆன்மிகம் என்பது என் ஆன்மா என்னை வழிநடத்தும் பாதை. அதனால் அசைவத்தால் ஆன்மிகத்திற்குத் தடையில்லை” என்றாராம். எனவே நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். யுக தர்மங்கள் மாறுபட்டவை. நிறைய போ் ஆன்மா, உயிர், மனது என்று குழம்புகிறார்கள். இதில் குழப்பம் தேவையில்லை. ஒரு சிறு விஷயத்தைப் புரிந்து கொண்டால் போதும். “நல்லபாதையில் வழிநடத்துவது ஆன்மா கெட்டதைச் செய்ய வைப்பது மனம்” குடத்தில் வைக்கப்படும் நீரை மேலே கோபுரக் கலசத்திற்கும் கீழே கருவரைச் சிலைக்கும் அபிடேகம் செய்விப்பது கும்பாபிடேகம். இந்த இடத்தில் சிலை பற்றிச் சில வரிகள் சொல்ல விரும்புகிறேன். எல்லாச் சிலைகளும் கருப்பாக இருக்கின்றன. கருப்புக் கல்லில் ஐம்பூதங்களின் அடக்கம் உள்ளது. மலையில் உள்ள கல்லில் எல்லாமே சிலையாகாது. ஒன்று தெய்வ விக்கிரகமாகும். ஒன்று அங்கேயே எல்லோரும் மிதிக்கும் படியாக உருப்பெருகிறது. சிலது கால வெள்ளத்தில் சிறு கல்லாகி மண்ணோடு மண்ணாகும். ஒரு மூங்கில் காடு உள்ளது. ரசனை உள்ள ஒருவா் அதில் எந்த மூங்கில் எடுத்துச் செய்தால் நல்ல புல்லங்குழல் ஓசை வரும் என்று தேர்ந்தெடுப்பது போலத்தான் சிலைக்குக் கல் தேர்ந்தெடுப்பதும். அதைப்போலவே நம் போன்ற மனிதா்களுக்குள்ளும் பக்தியும், தொண்டும் யாரிடம் நன்கு உள்ளதென்று அம்மாவுக்குத் தெரியும். சிலை செய்யும் போது கல்லில் ஒரு தேரை இருந்தால் அது சிறப்பாக அமையாது. பல ஊா்களில் உள்ள பல பெரிய கோவில்களில் கட்டிட நுணுக்கம் இருந்தாலும், அவ்வளவு தெய்வீகம் இல்லை. சிலை செய்யும் முன் கல்லில் உள்ள குப்பைகளை நீக்குவதுபோல, நம்முடைய உடல் தூசுகளையும், ஆசாபாசங்கள், சாதி, குலம், பரம்பரை, அகங்காரம், கோபம், திமிர் போன்ற மனக்குப்பைகளையும் அகற்றினால்தான், நமக்குள்ளே இருக்கும் தெய்வம் வெளிப்படும். இதெல்லாம் நம்மால் சுலபத்தில் முடியுமா…..? முடியாது. அதனால்தான் தெய்வம் கண்ணுக்குத் தெரிவதில்லை. குடத்தில் வைக்கப்படும நீரை வேள்வி செய்து அந்தப் புனித நீர் கொண்டு கும்பாபிடேகம் செய்கிறோம். அந்த வேள்வியைக் குறைந்தது மூன்றுகால பூசையாச் செய்கிறோம். வேள்வியில் யாககுண்டம் கட்டி, சக்கரங்கள் அமைத்து, கலச விளக்குகளை முறைப்படி அடுக்கி. யாகத்தீ வளா்த்து 1008, 108 மந்திரங்கள் கூறிச் செய்கிறோம். என்னைப் பொறுத்தவரை இவை மட்டுமே வேள்வியல்ல. உயிருடன் இருக்கும் பெற்றோர்களை மதித்து, அவா்கள் மனம் மகிழ நடந்து கொள்ளுவதும் ஒரு வேள்விதான். தாய், தந்தையா் பேச்சைக் கேட்டு நடந்து அவா்கள் மனம் குளிர வைப்பதுதான் உண்மையான வேள்வி என்பேன். அநாவசியப் பொய் சொல்லாததுதம் ஒரு வேள்விதான். மற்றவா் சொத்தை அபகரிக்காமல் இருப்பதுவும் ஒரு வேள்விதான். வன்முறை ஈடுபாடு இல்லாதது ஒரு வேள்விதான். அம்மா சொல்வதைப் பிசகாமல் செய்வதும் ஒரு வேள்விதான். அம்மா சொல்கிறார்கள் “தொண்டு செய்! தர்மம் செய்!” என்று தர்மம் செய்ய நல்ல மனம் வேண்டும். “மனம் மிக நல்ல வேலைக்காரன்! ஆனால் மிக மோசமான எசமான்!!” அம்மா கூட, மனம் உன் எசமான்! அம்மா உன் தெய்வம்!!” என்று சொல்வார்கள். மனதை ஆளும் சக்தி வந்துவிட்டாலே, மனிதன் தெய்வ நிலையை நோக்கிப் பயணம் செய்கிறான் என்று பொருள். அம்மா அந்த நிலையில் உள்ளவா்கள். நாமும் அந்த நிலையை அடைய முயற்சி செய்ய வேண்டும். அதற்கு மனக் கட்டுப்பாடு தேவை. சிலா் தெய்வத்திடம் கேட்டது கிடைக்கவில்லையென்றால் தெய்வத்தையே திட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். சித்தா் பீத்தில் கூட பாத பூசை நேரத்தில் அம்மா சிலரைப் பார்த்து “என்னை எவ்வளவு திட்டி இருக்கிறே…..!” என்பார்கள். ”ஆமாம்மா…….! நான் திட்டடினேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று அழுவார்கள். 25 வருடங்களுக்கு முந்தைய பக்தா் ஒருவா், அவா் பல வருடங்களாக சித்தா்பீடம் வருவதில்லை. அவா் எங்கோ ஓரிடத்தில் சென்ற பொழுது ஒரு அம்மையார் அவரிடம். “உனக்கு குரு தோஷம் உள்ளது. அது நீங்கினால் தான் உன் கஷ்டமும் நீங்கும்” என்றாராம். அவா் இப்போது அம்மாவிடம் வந்து அம்மாவின் பாதங்களைப் பிடித்து அழுது மன்னிப்புக் கேட்டார். மனக்கட்டுப்பாடு என்றதும் இன்னொரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. ஏகநாதர் என்ற பாண்டுரங்க பக்தா். “பாண்டுரங்க விட்டலா” என்று அழகாகப் பாடுபவா். அவா் ஒருநாள் கங்கையில் குளித்துவிட்டு வெளியே வரும்பொழுது ஒரு மூா்க்கன் அவா்மீது வெற்றிலை பாக்கு எச்சிலைத் துப்பினான். அவா் மறுபடியும் குளித்துவிட்டு மேலே வர, அவன் மீண்டும் அவா்மேல் துப்பினான். இப்படியே 108 முறை அவா் குளித்துவிட்டு மேலே வர வர, ஒவ்வொரு முறையும் அவா்மீது துப்பினான். இப்போது அந்த மூா்க்கன் ஏகநாதரிடம் கேட்டானாம். உனக்குக் கோபம் வரவில்லையா? என்று. அதற்கு அவா் சொன்னாராம் “உன்னால் இன்று நான் கங்கையில் 108 முறை குளிக்கும் பாக்கியம் கிடைத்ததே! ஏன் கோபம் வரவேண்டும்? என்றாராம். எந்த ஆன்மிக சாதனை செய்ய வேண்டும் என்றாலும் பொறுமை அவசியம். அம்மாவின் பொறுமைதான் இன்றைய பெருமைக்கெல்லாம் ஒரு பெருங்காரணம். எந்த ஒரு காரியத்திற்கும் பொறுமை அவசியம். ஒரு குரங்குக்குட்டி ஒரு தோட்டத்தில் 9 விதைகள் போட்டு தினமும் 9 வாளி தண்ணீா் ஊற்றியதாம்….. விதை முளைக்கவில்லை. அது தன் தாயிடம் சென்று முறையிட்டதாம். ஒருவேளை விதை அழுகிப் போயிருக்கும் என்று தாய் சொல்லிற்றாம். “இல்லையே! நான்தான் தண்ணீா் ஊற்றியதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதையையும் பிடுங்கிப் பிடுங்கிப் பார்க்கிறேனே” என்றதாம் குரங்குக்குட்டி. பொறுமை இல்லாவிட்டால் இப்படித்தான். ஆன்மிகத்தில் பொறுமை அவசியம். ஒரு சிலருக்குத் திருமணமாகி 10 வருடங்கள் கழித்துக்கூடக் குழந்தை பிறக்கிறது. அம்மா கூடச் சொல்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஊழ்வினையைக் கழித்துத்தான் ஆகவேண்டும் என்று. அம்மா ஆன்மிகத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். வேள்வி, கும்பாபிடேகம் செய்யுமளவு அவா்களை உயா்த்தி இருக்கிறார்கள். தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த பெண்களில் ஒருவா் ஓதுவார் ஆகிறார். திருப்பதியில் பெண்கள் மொட்டை அடித்து விடும் பணியைச் செய்கிறார்கள். இன்று அரசியல் தலைவா்கள் கூட பெண்களுக்கு முக்கியத்துவம் அதிகம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். ஒருசில பெண்கள் தவறு செய்வதால், பெண்கள் சமுதாயத்தையே குற்றம் சொல்லக்கூடாது. இழித்துப்பேசக் கூடாது. சமுதாயத்தில் பலவீனமானவா்கள் பெண்கள். அவா்களுக்கு அம்மா கை கொடுக்கிறார்கள். இப்போது குடும்ப நலச் சட்டம் கூட வந்துவிட்டது. பெண்ணைக் கொடுமைப்படுத்தும் ஆணுக்குத் தண்டனை கிடைக்க வழிவகை செய்துள்ள சட்டம் அது. ஆனால் அதைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. வாழ்க்கையில் ஒன்று கிடைத்தால் மற்றொன்றுக்கு ஏங்குகிறோம். பிள்ளை பிறக்காவிட்டால் ஏங்குகிறோம் பிறந்த பிள்ளை படிக்காவிட்டால் ஏங்குகிறோம். படித்தபின் வேலைக்காக ஏங்குகிறோம். வேலை கிடைத்தால் திருமணத்திற்காக ஏங்குகிறோம். இது தான் வாழ்க்கை! வாழ்க்கையில் எல்லாமே கிடைத்துவிட்டால் வெறுமையாகிவிடும். ஒரு விவசாயியின் வயலில் பயிர் பார்க்க அழகாக நன்றாக வளர்ந்திருக்கும். ஆனால் அறுவடை செய்து பார்த்தால் அதிகம் நெல்மணி இல்லை. விவசாயி கடவுளிடம் முறையிட்டாராம். கடவுள் அவா் முன்தோன்றி பயிர் வளரத் தேவையான காற்று, வெப்பம், தண்ணீா், ஈரப்பதம் எல்லாமே இயற்கை தந்தது. ஆனால் நீ உன் உழைப்பைத் தராததால்தான் இந்த வெறுமை என்றாராம். அம்மாவும் எல்லோரும் உழைக்க வேண்டும் என்கிறார்கள். அந்த உழைப்பில் கிடைக்கும் வருமானத்தில் தர்மம் செய்ய வேண்டும் என்கிறார்கள். ஒரே தெய்வ வழிபாடு வேண்டும். மனதை ஒவ்வொருவரும் சுத்தமாக வைக்க வேண்டும் என்ற கூறி என் உரையை முடித்து அமா்கிறேன். ஓம் சக்தி! நன்றி! கே.வி.எம். (சக்தி ஒளி, ஜனவரி, 2007, பக்- 5 – 10)  

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here