இருமுடிப் பையும், அதில் வைக்க வேண்டிய பொருள்களும்

0
521

இருமுடிப் பையின் முன்கட்டில்

தேங்காய்

கற்புரம்

மஞ்சள்

குங்குமம்

ஊதுபத்தி

எலுமிச்சம்பழம்

கதம்பப்பொடி அல்லது அபிஷேகத்துாள்

பன்னீா்

சந்தனம்

டைமண்ட் கல்கண்டு

சாம்பிராணி

மெழுகுவா்த்தி

நல்லெண்ணெய் அல்லது நெய்

ஆகிய பொருள்கள் சிறிய அளவிலும் ,

பின்கட்டில்

ஒரு கிலோ பச்சரிசியும், காணிக்கையும் வைத்து இருமுடி கட்ட வேண்டும்.

ஆடவா், மகளிர், சிறுவா், சிறுமியா், கைக்குழந்தை என நம் குடும்பத்தில் உள்ள அனைவரும் மேல்மருவத்துார் ஆலயம் கருவறையில் உள்ளே சென்று இந்த அபிஷேகப் பொருள்களைக் கொண்டு சுயம்பாக உள்ள அன்னைக்கு குடும்பமாக அபிஷேகம் செய்யும் பேறு நம் சித்தா் பீடத்தில் மட்டுமே கிடைக்கிறது.

லட்சக்கணக்கான பக்தா்களுக்கு செய்யப்படும் அன்னதானத்திற்கு நாம் எடுத்துச் செல்லும் அரிசி உதவுவதால் அன்னதானப் புண்ணியம் கிட்டுகிறது.

இதோடு கூட நாம் இருமுடியோடு செலுத்தும் காணிக்கை அறநிலையின் சார்பாக செய்யப்படும் பல்வேறு மருத்துவ, கல்வி, சமுதாயப் பணிகளுக்குப் பயன்படுவதால் அந்தப் புண்ணியமும் நமக்குக் கிட்டுகிறது.

நன்றி

(அன்னை அருளிய வேள்வி முறைகள் , பக்-480)

]]>