என்ன தவம் செய்தனை? கண்ணனை ஈன்றெடுக்கத் தேவகியும், வளர்துப் பாராட்ட யசோதாவும் என்ன தவம் செய்தார்களோ! அதை ஒத்த அல்லது அதற்கும் மேலான தவம் செய்திருக்க வேண்டும் நம்மை உய்விக்க உலகத்தைக் காப்பாற்ற அன்னையின், ஆதிபராசக்தியின் அவதாரமாய் வீற்றிருக்கும் “அம்மா” என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் “பங்காரு அடிகளாரை” ஈன்றெடுக்க அவரது பெற்றோர்கள் எழுபது ஆண்டுகளுக்கு முன் நடந்த அதிசய நிகழ்வு இது. அதனால் இன்று நாம் தெய்வத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இது பலருக்குப் புரிவதில்லை. இம்மாதிரியான மடத்தனம் இன்று நேற்றல்ல இராமாயண யுகத்தில் இராமனை தெய்வமாக அறிந்தது சிலரே. கண்ணகியின் காலத்திலும் இதுவே.  அறிந்தவா் வாழ்ந்தனா். அறியாதவா் மாண்டனா். நாமாவது இருக்கும் தெய்வத்தோடு இருக்கின்றோம் என்ற உயா்ந்த நிலையில் வாழ்வோம். “இறந்த பின் எடுத்துச் செல்ல என்ன இருக்கிறது? கொடுத்துச்செல்ல கண்கள் இருக்கிறது.” என்று ஒரு கவிஞா் பாடினார். தானத்தில் சிறந்த ஒன்று அன்னதானம். மற்றது கண் தானம். கண்ணொளி திட்டத்தையும் அன்னதானத்தையும் அம்மா இன்றளவும் செய்வனவே செய்து வருகிறார்கள். இதனால் மருவூா் சுற்றியுள்ள ஏழை எளிய மற்றக் கிராமப் புற மக்கள் மட்டும் இல்லாமல் இலட்சக் கணக்கான பிற மாநில மக்களும், பயனடைந்துள்ளார்கள். இது புரிந்தா கவிஞா் சொன்னது. “இருக்கும்பொழுது இனிமையாகப் பேசு. இறந்தபின்னும் கூடும் உன் மவுசு” இதுவும் அம்மாவின் தாரக மந்திரம் தான். அம்மாவின் தொண்டா்களைப் பார்த்தாலே நமக்குப் புரியும். 2012ல் உலகம் அழியுமா? இன்று பலா் கேட்கும் கேள்வி. சில வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் சென்னைக்கு அருகே பூகம்பம் ஏற்பட்டு ஒருசில வினாடிகள் நகரம் குலுங்கியது. அதற்கு அடுத்தநாள் அம்மாவைச் சந்திக்கும் பாக்கியம் ஏற்பட்டது. பூகம்பம் பற்றி நானே கேட்டபொழுது அதற்கு அம்மா “என் கட்டை விரலால் பூமியை நன்றாக அழுத்தி அதன் வீரியத்தை என் மேல் ஏற்றுக்கொண்டேன்” என்று இயல்பாகச் சொன்னார்களே தவிர நான் தான் உங்களைக் காப்பாற்றினேன் என்று ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. இது தான் அம்மாவின் குணம். ஆதலால் பிறந்த 2010 மகிழ்ச்சியோடு இரு. பிறக்காத 2012 ஐப் பற்றி கவலையை விடு” ஒரு தாய் தான் பெற்ற குழந்தைக்கு முதல் முதலில் மழலைப் பருவத்தில் “அம்மா சொல்லு, அம்மா சொல்லு” என்று சொல்லிக் கொடுப்பார். சில நாட்கள் கழித்து அந்தக் குழந்தை மழலை மொழியில் “அம்மா என்று கூப்பிடும். உடனே இந்தத் தாய் பெரிதும் உவகை அடைந்து எல்லோரிடமும் “என்னை அம்மா என்று கூப்பிட்டது” என்று சொல்லிச் சொல்லி மகிழ்வாள். தான் அம்மா என்று அந்தக் குழந்தைக்கு சொல்லிக்கொடுத்ததை மறந்து அதே போல் தான் நம் அம்மாவும் எல்லாவற்றையும் நம்மைச் செய்ய வைத்துவிட்டு அம்மா அருளால் செய்த நம்மை அம்மாவே மனம் மகிழ்ந்து பாராட்டுவார்கள். ஆதலால் இன்று வாழக் கற்றுக்கொள்வோம். நாளை நன்றாகவே விடியும். அம்மா இருக்கப் பயம் ஏன்? ஆகையால் அம்மாவே நீவிர், “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம் ஆண்டுகள்” எங்களுக்கும், எங்களுக்கும் சந்ததிக்கும் துணையாக இருந்து இன்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் எங்களை வழிநடத்திச் சென்று இந்தப் பிறவிப் பெருங்கடலை நீந்திச் செல்ல “சக்தியை” அளிக்க உங்கள் பாதார விந்தத்தை அடிபணிகின்றோம்.

குருவடி சரணம்! திருவடி சரணம்!

நன்றி

சக்தி.சி.வி. ஆனந்த பத்மநாபன் இயக்குனா், புதுச்சேரி, தொலைக்காட்சி நிலையம் மருவூா் மகானின் 70வது அவதாரத்திருநாள் மலா்  ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here