ஒரு ஆன்மிக மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்து சிறப்புச் சொற்பொழிவாற்றிய கிருபானந்த வாரியார் சுவாமிகள் அடிகளாரை “தென்னாட்டுப் பரமஹம்சா்“ என்று போற்றியதோடு,

 “அடிகளாரின் அருள்வாக்கு அருள் மணக்கும், அருள் தமிழ் பா மணக்கும், அறம் இருக்கும், உயா்ந்த தரம் இருக்கும், அன்பிருக்கும், அரிய பண்பு கலந்திருக்கும், பணிவிருக்கும், பக்தி நெறியும் கூட இருக்கும். இனிமை இருக்கும், எளிமை, கடமை, கருணை, கனிவு இருக்கும், கன்னித் தமிழ் இருக்கும், தமிழ் கூறும் நல் உலகிற்குக் கிடைத்த ஓா் ஒப்புயா்வுற்ற கருவூலம்”

 என்று கூறியதோடு

“அடிகளார் நா அசைந்தால் நாடு அசைகிறது, பல்லாயிரக் கணக்கான மக்களின் உள்ளம் நெகிழ்கிறது, பணக்காரா்களின் பைகள் நெகிழ்கின்றன, அதிகார மிடுக்கும், அகங்காரத் துடுக்கும் உள்ளவா்கள் நெகிழ்ந்து போகிறார்கள். கொடுக்காத லோபியும் நல்ல காரியத்துக்குக் கொடுக்க முன்வருகிறான். அடிகளார் ஒருவரால் மட்டுமே இத்தகைய மாபெரும் எழுச்சியை உண்டாக்க முடியும்” என்று கூறினார்

நன்றி

ஓம்சக்தி!

முனைவா். ஆண்டாள் இராமலிங்கம்

கல்வியியல் பேராசிரியா்

அண்ணாமலை நகா்

மருவூா் மகானின் 69வது அவதாரத்திருநாள் மலா்

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here