சமுதாய மேம்பாட்டிற்காக…..

“ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மனிதசமுதாய மேம்பாட்டிற்காக பாடுபட வேண்டும். ஆன்மிகத்தால் தான் அமைதியும் கட்டுப்பாடும் இருக்கும். ஆன்மிக நெறி மூலமாக ஒவ்வொருவனும் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஆன்மிகத்தில் ஐம்புலன்களை அடக்கும் தன்மையும் கட்டுப்பாடும் தேவை.”

ஆதிபராசக்தி இயக்கத்தின் வழிபாடு…..

“பல்லாயிரம் ஆண்டுகளாகவே சக்திக்கும் சித்தா்களுக்கும், பஞ்சபூதங்களுக்கும் வழிபாடு உண்டு. சக்தியையும், சித்தா்களையும், பஞ்சபூதங்களையும் வழிபடுகின்ற வழிபாடு தான் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் வழிபாடு.”

அடிகளாரும், ஆன்மிக இயக்கமும்

“அடிகளார் இல்லறத் துறவியாக இருப்பது தான் இந்த ஆன்மிக இயக்கத்திற்கே சிறப்பு! இந்த ஆன்மிக இயக்கத்தில் நீங்கள் கணவன் மனைவியாக இருவரும் ஈடுபடுவது தான் மிகச்சிறப்பு!”

கட்டுப்பாடு தேவை!

“ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்திற்கு ஆன்மிக வழிதான் தேவை! அதற்குக் கட்டுப்பாடு அவசியமான தேவை!

ஆதிபராசக்தி இயக்கம் நல்லொழுக்கமுள்ள ஒரு இயக்கமாக இருக்க வேண்டும்.”

பெண்களுக்கு முக்கியத்துவம் உண்டு

“நாளைய உலகத்தில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்திற்கு பெருமை உண்டு. அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் உண்டு. இந்த இயக்கம் பெண்கள் இயக்கமாக மாறும்!”

எதற்காக ஆன்மிகம்?

“ஆன்மிக நெறியில் இயற்கை உண்டு. செயற்கை இல்லை. ஐம்புலன்களை அடக்கி பழகுவதற்கே ஆன்மிகம்!

ஐம்புலன்களை நீங்கள் கட்டுப்படுத்தினால் பஞ்சபூதங்களைக் கட்டுப்படுத்த முடியும்.”

அழுக்குள்ளவனும் வந்து சோ்வான்

“ஓடுகின்ற ஆற்றில் சாக்கடையும் வந்து கலக்கும். முதலில் அசுத்தமாகத்தான் இருக்கும். ஆற்று வெள்ளத்தின் ஓட்டத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று தெளிந்து போகும். அதுபோல இந்த ஆன்மிக வெள்ளத்தில் அழுக்குள்ளவனும் வந்து விழுவான். காலப்போக்கில் தெளிவடைவான். ஆன்மிகவாதியாக மாறுவான்.”

பட்டி தொட்டியெல்லாம்…………..

“பட்டி தொட்டியெல்லாம் பக்தி மயமாக்குவேன்”

உன்னைத் தேடி நதி வராது. நதியை நோக்கி நீ வரவேண்டும்.

“மகனே! அழுக்கு உடம்பிலும் உண்டு, மனத்திலும் உண்டு. உடல் அழுக்கைப் போக்கிக் கொள்ள நீதான்  நதியை நோக்கி வரவேண்டும். உன்னை நோக்கி நதி வராது. மன அழுக்கைப் போக்கிக்கொள்ள நீதான் ஆன்மிக இயக்கத்தை நோக்கி வரவேண்டும். உன்னை நோக்கி இயக்கம் வராது.” மன அழுக்கை போக்கி கொள்ள நீ தான் ஆன்மிக இயக்கத்தை நோக்கி வர வேண்டும். உன்னை நோக்கி இயக்கம் வராது.”

கலியுகத்தின் இயல்பு

“ஆன்மிகத்தை உலகமே எதிர்க்கும். அதுதான் கலியுகத்தின் இயல்பு! நீ உன் கடமைகளைச் செய்து கொண்டே போ! தோல்வி வரும் சோர்ந்து போகாதே! முடிவில் ஆன்மிகம் தான் வெல்லும்!”

பழுத்துதிர்வன உண்டு

“இந்த ஆன்மிக இயக்கத்தில் நிலையாய் இருக்கும்போது உதிர்வன உண்டு. பூவாய் இருக்கும் போது உதிர்வன உண்டு. பிஞ்சாகி உதிர்வன உண்டு. காயாகி உதிர்வன உண்டு. கனியாகி உதிர்வன உண்டு.”

தொண்டா்களுக்கு

“மற்றவா்களுக்குக் கொடுக்காமல் வாழ்வதே பாவம்! பகிர்ந்துண்ணும் பழக்கம் உங்களுக்கு வரவேண்டும்”

“ஏற்றத்தாழ்வு இல்லாமலும், தாழ்வு மனப்பான்மையில்லாமலும் நீங்கள் தொண்டு செய்ய வேண்டும்.”

“என் பணியை நீ செய்! உன் பணியை நான் பார்த்துக்கொள்வேன்!”

“முழுமையாக என்னைச் சரணடைந்து ஆன்மிகத்தொண்டு செய்பவன் குடும்பம் என் பொறுப்பில் வந்து விடுகிறது.”

“என்னையும் என் வழிமுறைகளையும் ஆராயாதே! உன் மூளைக்கு அவைகள் எட்டாது. நான் என்ன கட்டளையிடுகிறோனோ அதன்படி செய்”

“இயற்கையின் எந்த ரூபத்திலும் நான் ஆன்மிகம் வளா்ப்பேன். உனக்குக் கொடுக்கின்ற வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு ஆன்மிகத்தில் முன்னேறு.

“ஆதிபராசக்தி இயக்கத்தினால் ஏழ்மை, வறுமை ஒழிக்கப்பட்டு வருகின்றன.”

“செவ்வாடை என்றால் ஆன்மிகம்! ஆன்மிகம் என்றால் ஆதிபராசக்தி மன்றங்கள்! என்ற நிலைக்கு வருதல் வேண்டும். இம் மன்றங்கள் தமிழ் நாட்டையே மாற்ற வேண்டும்!

அரசியல் தொண்டும் ஆன்மிகத் தொண்டும்.

“நீ அரசியலில் தொண்டு செய்தால், அதன் தலைவன் உன்னைக் கறிவேப்பிலையாகப் பயன்படுத்திக் கொண்டு உன்னைத் தூக்கி எறிந்து விடும் நிலைமை உண்டு. தெய்வத்தை மையமாக வைத்து நீ ஆன்மிகத் தொண்டு செய்யும் போது அகங்காரம் குறைய வாய்ப்புண்டு. அதனால் ஆன்மிக முன்னேற்றம் பெற வாய்ப்புண்டு. தெய்வத்துக்கும் ஆன்மிகத்துக்கும் தொண்டு செய்பவனுக்கு ஐந்து தலைமுறைக்கு என் அருள் உண்டு. அந்த அருள் உன் பேரன் பேர்த்திகளுக்கும் சென்று பயன் தருவது.”

அழுக்குள்ளவனையும் ஏன் ஈா்க்கிறேன்?

“பாத்திரத்தில் பாசி படா்ந்துள்ளது என்பதற்காக பாத்திரத்தையே தூக்கி எறிய முடியுமா? அது போல தாயாகிய என்னிடம் வந்து சோ்கின்ற ஆன்மாக்களின் பாசியை நீக்க வேண்டியே அவா்களையம் ஈா்க்கிறேன். பாத்திரங்களை வீசி எறிய மாட்டேன் மகனே!”

நிலைத்த பயன்

இன்றைய விஞ்ஞானத்தாலும், மருத்துவத்தாலும் நிலைத்த பயன் கிடையாது. இயற்கையாலும், ஆன்மிகத்தாலும் நிலைத்த பயன் உண்டு.

அமைதிக்கு வழி

“நாளைய உலகம் ஆன்மிக உலகம்! ஆதிபராசக்தி உலகம்! ஆதிபராசக்தி யுகம் அரும்பத்தொடங்கி விட்டது. நாளைய உலகிற்கு ஆன்மிகமும் வேள்விகளும் முக்கியம்!”

நன்றி

ஓம்சக்தி

மருவூா் மகானின் 70வது அவதார திருநாள் மலா்

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here