சுமார் 15 வருடங்களாக ஆதிபராசக்தி மன்றத்தில் சேர்ந்து வழிபட்டு வருகிறேன்.

பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் பக்தையை ஆனாலும் ஆரம்பத்தில் பங்காருஅம்மா அவர்கள் தான் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தினை நடத்தி வருபவர் தான் என்று எண்ணினேன் தவிர, “பங்காரு அம்மா தான் அன்னை ஆதிபராசக்தி, அன்னை ஆதிபராசக்தி தான் பங்காருஅம்மா ” என்ற எண்ணம் என் அறிவுக்கு எட்டவில்லை.

இத்தருணத்தில் தான் பல செய்தித்தாள்களில் சாமியார்கள் பற்றிப் பலவிதமான தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.

அப்போது ஒரு நாள் நான் கட்டிலில் படுத்துக் கொண்டு, சாமியார்கள் பற்றிய விமர்சனங்களை எண்ணிக் கொண்டிருந்தேன்.

எனது கட்டிலின் எதிரே போதும்
அன்னை ஆதிபராசக்தியின் படம் மாட்டியிருப்பேன். இவ்வாறு என்ன அலைகளில் மூழ்கி இருந்த போது… எதிரே மாட்டியிருந்த அன்னை ஆதிபராசக்தி யின் படத்தில் ஓர் ஒளி தோன்றியது.

பின் பங்காருஅம்மா அவர்கள் தோன்றிச் சிரித்த முகத்துடன், கையை மேலே தூக்கி ஆசி வழங்கியபடி இருந்தார்.

என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. இது கனவா? நனவா?
என இரு கண்களையும் கசக்கி விட்டு மறுபடியும் உற்று நோக்கினேன். அப்போது ”பங்காரு அம்மா தான் அன்னை ஆதிபராசக்தி. அன்னை ஆதிபராசக்தி தான் பங்காரு அம்மா!” என்று எனது அறிவிற்கு எட்டாத உண்மையை உணர்த்தினாள்.

இவ்வாறு 15 நிமிடங்கள் இதே போல் தெரிந்தது. அதன்பின் நான் ‘குருவடி சரணம்! திருவடி சரணம்!’ என்று கூறி வணங்கி எழுந்தேன்.

மற்ற சாமியார்கள் போல்தான் பங்காருஅம்மா அவர்கள் இருப்பாரோ என நான் தப்பாக எண்ணியபோதும் பரம்பொருள் அம்மா அவர்கள் என் முன் எழுந்தருளி, என் மீது கோபம் கொள்ளாமல் அருள் பாலித்தது அவர்களுடைய அன்பையும், கருணையையும் காட்டுகிறது.

என்னே! பங்காரு அம்மா அவர்களின் கருணை!

ஓம்சக்தி!
சக்தி தனலட்சுமி, எல்லீஸ் நகர், மதுரை.
பக்கம் 132 -133.
மலரும் நினைவுகள் என்னும் நூலிலிருந்து…..