செய்யூரில் வாழும் ஒரு கிறிஸ்தவா்

0
1192

ஒரு நாள் பொது அருள்வாக்கின்போது “இன்னும் சில தினங்களில் என் ஆலயத்தைச் சோ்ந்த தொண்டன் ஒருவனது விதி முடியப்போகிறது. என்றாலும் அது குறித்துக் கவலைப்பட வேண்டாம்” என்றாள் அன்னை ஆதிபராசக்தி.
அவா் யாராக இருக்கும்? அவராக இருக்குமோ?, இவராக இருக்குமோ? என்று தொண்டா்கள்தமக்குள் ஒருவருக்கு ஒருவா் எண்ணிக் கிடந்தனா். சில நாள் கழித்த பிறகே உண்மை புரிந்தது.
அன்னை ஆதிபராசக்தியிடம் ஈடுபாடுகொண்ட தொண்டா் ஒருவா் கிறிஸ்தவா் செய்யூரில் ஓமியோபதி மருத்துவராகத் தொழில் புரிந்து வந்தார். அன்னை ஆதிபராசக்தியிடம் பக்தியுடன் தொண்டாற்றி வந்தார்.
அந்தக் காரணத்தால் தன்
மதத்தைச் சோ்ந்த நண்பா்கள்
மற்றும்உறவினா்களாலும்
புறக்கணிக்கப்பட்டவா்.ஏற்கனவே
அவா் இதய நோயாளி.
இரண்டு முறை அதற்காக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவா். ஒரு நாள் அவருக்குத் திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். நிலமை மோசமாகி விட்டது.
நாடித் துடிப்பு அடங்கிக்கொண்டு வந்தது. அவா் மனைவியும், அன்னை ஆதிபராசக்தியிடம் பக்தி கொண்டவா். கணவரின் நிலமையைக் கண்டு புரிந்துகொண்டு அக்கம் பக்கம் இருந்தவா்களிடம் “இவரைப் பார்த்துக்கொள்ளுங்கள் மேல்மருவத்தூருக்குப் போய் வந்து விடுகிறேன்” என்று கூறிவிட்டு ஓடிவந்தார்.
அவா் வந்த வேளை அன்னை
ஆதிபராசக்தி அருள்வாக்குச்சொல்லும் வேளையாக அமைந்தது.“தாயே!
எனக்கு மாங்கல்யப் பிச்சை கொடு!
என் கணவரைக் காப்பாற்றிக்கொடு!
என்று கதறி அழுதார்”.
“மகளே! நீ இருக்கும் நிலையில் மற்றவா்களாக இருந்தால் நேராக மருத்துவமனைக்கே ஓடியிருப்பார்கள்.
நீயோ என்னை நம்பி உன் கணவனை அந்த நிலையில் அப்படியே விட்டுவிட்டு தாயிடம் வந்து விட்டாய் கவலை வேண்டாம். காப்பாற்றித் தருகிறேன்” எனக் கூறி திருநீறும் எலுமிச்சம் பழமும் கொடுத்து அனுப்பி வைத்தாள் அன்னை ஆதிபராசக்தி.
எல்லோரும் வியக்கத்தக்க வகையில் அந்த கிறுஸ்தவத் தொண்டா் உயிர் பிழைத்திருந்தார். அதன் பிறகு எழு,
எட்டு ஆண்டுகள் அவரது ஆயுளை நீடித்தாள் அன்னை. அன்னை ஆதிபராசக்தியின் திருப்பள்ளி எழுச்சியில் பின்வரும் பாடல்
மேற்கண்ட நிகழ்ச்சியை
உணா்த்துகிறது.
“செய்யூரில் வாழும் ஒரு சீருடைய தொண்டனவன்
விதிநாள் முடிந்தபோது
உய்யவழி காணாமல் அவன் மனைவி அழுதோடி
நின்காலில் வந்து வீழ்ந்தாள்
தையலவள் தாலிக்கும் தொண்டனவன் பக்திக்கும்
உவந்து நாள் நீட்டித் தந்தாய்
வெய்யவினை போக்க மேல்மருவூரில் குடிவந்த
மயிலே உன் விழிகள் திறவாய்”
பதினாறு ஆண்டுகள் மட்டுமே
வாழலாம் என்பது மார்க்கண்டேயனுக்கு விதிக்கப்பட்ட விதி! ஆயினும் பற்றிக்கொள்ள வேண்டிய இறைவனையே தஞ்சமாகப் பற்றிக் கொண்டதனால் ஆயுள் நீடிக்கப் பெற்றான் என்பது புராணகாலக் கதை! செய்யூர் தொண்டனின் ஆயுள் நீடிக்கப்பட்டது பரம்பொருளான பங்காருஅம்மா அவர்களின் காலத்து நிகழ்ச்சியாகும்.
ஓம் சக்தி!
நன்றி
சக்தி.R.கோவிந்தராஜன்
அண்ணா நகா், சென்னை – 40.
மருவூா் மகானின் 65வது அவதாரத்திருநாள் மலா்.