பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் அற்புத மகிமை.

0
476

அண்ட சராசரங்களையும் தன்வசத்துள் வைத்துள்ள அகிலம் புகழும் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் திருவடி களுக்கு என்றென்றும் சமர்ப்பணம் என கூறிக் கொண்டு எனக்கு அளித்த அற்புதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கடந்த 17.11.2010ம் தேதி புதன்கிழமை நடுநிதி 12.30 மணியளவில் நல்ல தூக்கத்தில் இருந்தபோது என்னை யாரோ எழுப்புவது போன்ற பிரமையுடன் எழுந்து அதன் பின் பாத்ரூம் சென்று கால்களை கழுவிக்கொண்டு பூஜை அறைக்கு சென்று பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் மூலமந்திரம் சொல்லி வணங்கி விட்டுத் திருநீறு, குங்குமம் இட்டுக் கொண்டு தீர்த்தம் எடுத்து அருந்த முயற்சிக்கையில் எனக்கு இரத்த அழுத்தம் அதிகமாகி இடது
பக்கம் முழுவதும் செயல் இழந்துவிட்டது.
நான் கீழே விழும் தருவாயில் மனைவி,மகன் இருவரின் துணையுடன் வெளியில் வந்து அதன்பின் பக்கத்து வீட்டுக்காரர்கள் இருவரின் துணையுடன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்து பார்த்ததில் எனது சிறு மூளைக்குச் செல்லும் இரத்த குழாயில் டென்சன் பாதிப்பினால் இரத்தம் செல்வது அடைபட்டுவிட்டது தெரிய வந்தது.
ஆதலால் தலையிலிருந்து கால்வரை இடது பக்கம் முழுவதும் செயல்படாது என்று மருத்துவர் கூறிவிட்டார்.அத்துடன் உடனடியாக அங்குள்ள ICU வார்டில் சேர்த்து, ஐந்து நாட்கள் தங்கி தீவிரமாக சிகிச்சை செய்து , அதன்பின் பொதுவார்டில் நான்கு நாட்கள் வைத்து மருத்துவ சிகிச்சை செய்து என்னைத் தனியாக எழுந்து நடந்து செல்லும்படி கூறிக் குணப்படுத்திவிட்டார்.
மருத்துவமனையில் பொதுவார்டில் மற்றும் பொழுது இரவு அறை எண்ணைப் பார்கக முடியவில்லை. விடிந்து பார்க்கும் பொழுது அறை எண் 108 என்று இருந்தது. இதை நினைத்து பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் மந்திர எழுத்தே எனக்கு அமைந்துள்ளது என்று மிகவும் சந்தோஷம் அடைந்தேன்.
அத்தோடு இல்லாமல் அப்போது இருமுடிக் காலமாக இருந்தால் மருத்துவமனையில் பணியில் இருக்கும் சக்தி ஒருவர் சக்திமாலை அணிந்து இருந்தார். அவரே எனக்கு ஊசி, மாத்திரை மருந்து எல்லாம் கொடுத்து வந்தார். இதைப்பார்த்ததும் நம் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களே நேரிடையாக எனக்கு மருத்துவ சிகிச்சை செய்தது போல உணர்ந்தேன்.
எனது மனம் மிகவும் சந்தோஷம் அடைந்தாலும் மனதுக்குள் ஒரு பெரிய நெருடலான எண்ணமும் உண்டானது. இந்த வருடம் இருமுடி செலுத்த முடியாத சூழ்நிலை ஆகிவிடுமோ என்பதுதான் அது. ஆனால் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் என்னை கைவிட்டுவிடவில்லை.
எப்படியும் இந்த ஆண்டு இருமுடிப் பணி செய்யவில்லை என்றாலும் எனது இருமுடியை சித்தர் பீடத்தில் செலுத்தி விடுவது என்ற நிலையில் எனது நோயைப் பத்து நாட்களுக்கு முன்பே பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் சரிசெய்து விட்டார்கள். அது கண்டு மருத்துவரே ஆச்சரியப்பட்டார்.
அதன்பின் மருத்துவரிடம் கேட்டதில் பஸ்சில் செல்ல வேண்டாம், இரயில் வண்டியில் வேண்டுமானால் கூட்டிக் கொண்டு போங்கள் என்று கூறிவிட்டார். இதுவும் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் கருனையே என்று நினைத்து அதன்பின்(RN 34) ஹவுசிங்போர்டு மன்றம் சென்று 10.12.2010 அன்று சக்தி மாலை இருமுடி அணிந்து, 14.12.2010 அன்று இரவு இரயில் வண்டியில் சக்திகளுடன் புறப்பட்டு மறுநாள் காலை 15.12.2010 அன்று பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களுக்கு நன்றிக் காணிக்கையாக சித்தர் பீடத்தில் இருமுடி செலுத்தி வந்தேன்.
சித்தர் பீடத்தில் நோய்வாய்ப்பட்டவர் என்று என்று தெரிந்ததும் தனிவழியில் உள்ளே செல்ல அனுமதித்தனர். அன்னை ஆதிபராசக்தியின் கருவறைக்குள் செல்லும் போது சக்திகளின் துணையுடன் மிக சீக்கிரமாக அபிடேகம் செய்து அதன்பின் வெளியில் வந்து சேர்ந்தேன். மன்றத்தில் சென்று(மாடியில் உள்ளது) மாலை அணிவித்தது, இருமுடி கட்டியது, அதன் பின் மன்றம் சென்று இருமுடி எடுத்து இரயில் பயணம் செய்து சிரமப்படாமல் விரைவாக செலுத்தியது எல்லாமும் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் அற்புதத்தால் நடந்தது என்று தான் சொல்வேன்.
ஓம் சக்தி
சக்தி.S.இராஜேஸ்வரன், இராமநாதபுரம்.
பக்கம்:32-33.
சக்தி ஒளி, ஜூன் 2013.