“தான தருமங்கள் வாயிலாகத் தான் நாட்டில் செழிப்பு பெருக்கும். தான தருமங்கள் மூலமாகத் தான் இன்றைய கொந்தளிப்புகளைத் தணிக்க முடியும்.” என்பது அன்னையின் அருள்வாக்கு

“இன்றைக்கு இருப்பவன் இருட்டிலேயே கிடக்கிறான். வெளிச்சத்துக்கு வர மாட்டேன் என்கிறான். இந்த நிலை அவனுக்கே ஆபத்து என்று தெரியாமல் இருக்கிறான்.பல ஆபத்துகள் அவனுக்குச் சூழ்ந்திருக்கின்றன. அவன் தருமம் செய்தால் தான் வெளிச்சத்துக்கு வர முடியும். இல்லாமற்போனால் அவனுக்குத் தான் அழிவு.

பக்கத்து வீட்டுக்காரன் பசியோடு இருந்தால் இவன் நிம்மதியோடு இருக்க முடியாது. இவன் நட்டு வைத்த தேங்காயில் கை வைப்பான்; மாங்காயில் கை வைப்பான். அவன் திருட வருகிறானே என்று புலம்பாதே!

நீயே பக்கத்து வீட்டுக்காரன் தோட்டத்தில் தென்னங்கன்றை வைத்துக் கொடு; மாங்கன்றை வைத்துக் கொடு. அப்படிச் செய்தால் உன் வீட்டுத் தேங்காயைத் திருட அவன் வர மாட்டான். மாங்காய் திருட வரமாட்டான்.

அவன் வீட்டில் கன்றை நட்டு வைத்துவிட்டு வா!  தண்ணீர் ஊற்றச் சொல். அதன் பிறகு அவனே பாதுகாத்துப் பயனடைவான். உனக்கும் திருட்டுப் பயமில்லை; அவனுக்கும் பொறாமை வர வழியில்லை. அதற்காகத் தான் தரும சிந்தனை வர வேண்டும் என்கிறேன். இருக்கப்பட்டவர்களைத் தருமம் செய்யச் சொல்கிறேன். இறுக்கிப் பிடிக்காதே!  என்கிறேன். இளைஞர் அணியையும் இப்படிப்பட்ட நல்ல காரியங்களில் பழகச் சொல்கிறேன். இப்படி நாம் அன்பால் தான் வளரணும்!  உழைப்பால் தான் உயரணும் !” என்பது ஆன்மிக குரு அடிகளார் உபதேசம் .

இன்றைய பிரச்சனைகள் ஏன்?

“இன்று உழைப்பு குறைந்து விட்டது. சோம்பறித்தனம் அதிகமாகி விட்டது. அதனால் செலவினங்களும் அதிகமாகி விட்டன. எல்லோரும் குறுக்கு வழியில் முன்னேற ஆசைப்படுகிறார்கள். அதை ஒட்டியே இன்றைய பிரச்சனைகள் அதிகமாகி உள்ளன.” – என்பது ஆன்மிக குரு அடிகளார் கூறும் கருத்து.

அவரவர் பாவ புண்ணியக் கணக்குகளை வைத்துத் தான் அன்னை ஆதிபராசக்தியின் கருமச்சட்டம் இன்ப, துன்ப அனுபவங்களை வழங்குகிறது.

பிறவியை அறுத்துக் கொண்டு முக்தியடைய நாட்டமில்லாத மக்கள் புண்ணியம் செய்து தான் உலகியற் பலன்களைப் பெற முடியும். அந்தப் புண்ணிய செயல்கள் நாடு முழுதும் பரவ வேண்டும் என்றாள் அன்னை

வார வழிபாட்டு மன்றங்கள் பஜனை மடங்களாக இருக்கக் கூடாது. தொண்டு நிலையங்களாகவும் ஆதல் வேண்டும் என்பது அன்னையின் திருவுள்ளக் குறிப்பு. அதே சமயம் மற்றவர்களைச் சோம்பேறிகள் ஆக்கக் கூடாது என்றும் எச்சரிக்கை செய்கிறாள்.

உழைத்துப் பிழைக்க விரும்புகிறவர்கட்கு உபகரணங்கள் வாங்கிக் கொடு என்கிறாள்.

எனவே, நம் சித்தர் பீட விழாக்களிலும், அடிகளார் ஆன்மிகப் பயணங்களிலும், மன்ற விழாக்களிலும், ஆன்மிக மாநாடுகளிலும் பின்வரும் தர்மங்கள் செய்ய வற்புறுத்தப்படுகின்றன.

அவையாவன

1.  ஏழைகட்கு இலவசத் திருமணம் நடத்தி வைப்பது.

2. ஸ்பிரெயர் வழங்குதல்.

3.  மூன்று சக்கர சைக்கிள் ஊன முற்றோர்க்கு வழங்குதல்

4. சைக்கிள் ரிக்சா வாங்கிக் கொடுத்தல்.

5. தையல் எந்திரம் வழங்குதல்

6. பசுமாடுகள் வாங்கிக் கொடுத்தல்.

7. உழவு மாடுகள் வாங்கிக் கொடுத்தல்.

8. சலவைப் பெட்டிகள் வழங்குதல்.

9. நாவிதர்க்கு தொழிற்கருவிகள்.

10. நாதஸ்வர கருவிகள்

11. கருமாரத் தொழிலாளர்கட்கு கருவிகள்.

12. பொற்கொல்லர்களுக்குக் கருவிகள்.

13. தச்சு வேலைத் தொழிலாளர்க்குக் கருவிகள்.

14. கட்டிடத் தொழிலாளிக்குக் கருவிகள்.

15. எடைபோடும் கருவி.

16. அளவு மீட்டர்.

17. தள்ளு வண்டி.

18. நெசவுக் கருவி

19. பாய் நெய்யும் கருவிகள்

20. ஊனமுற்றோர்க்கு ஊன்றுகோல்

21. விவசாயக் கருவிகள் ஏர், கலப்பை

22. கல்லுடைக்கும் கருவி

23. இட்டலிக் கொப்பரை

24. டீ பாய்லர் செட்

25. மின் தொழிலாளர்க்குரிய கருவிகள்.

26. மெக்கானிக் டூல் கிட்

27. பிளம்பர் டூல் ( plumber’s tools)

28. போட்டோ பிரேம் கருவி

29. சைக்கிள் ரிப்பேர் டூல்ஸ்

30. ஏழை மாணவ மாணவியர்க்கு சைக்கிள்

31. ஏர், கலப்பை கருவிகள்

32. மிதியடி தைக்கும் கருவிகள்

33. காது கேட்கும் கருவி

34. செம்படவர்க்கு மீன்வலை

35. மண்பாண்டத் தொழிலாளர்க்கு கருவிகள்

36. பூமி தானம்

37. அறுவைச் சிகிச்சை உதவி

38. பள்ளிக்குத் தேவையான கருவிகள் வழங்குதல்

39. உலக உருண்டை, தேசப்படம்

40. சுவர்க்கடிகாரம்

41. தண்ணீர் ரம்

42. கண்பார்வை குறைவானவர்க்கு மூக்குக் கண்ணாடிகள்

43. வசதியற்ற குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, பிஸ்கெட்

44. ஏழைப் பெண்களுக்கு பிளாஸ் டிக் குடம்

45. ஏழை ஓதுவார்க்குக் கருவிகள்

46. மேளம்

47. மரமேறும் தொழிலாளர்க்குக் கருவிகள்

48. பம்பை, உடுக்கை, சிலம்பு

49. ஆடைதானம், ஆடவர், மகளிர், சிறுவர், சிறுமியர்கட்கு

50.  செம்படவர்க்குப் பெரிய மீன் வலை

அவ்வப்போது கிடைக்கிற நிதியாதாரங்கட்கு ஏற்ப இவை விழாக்களின் போதும், ஆன்மிக மாநாடுகளின் போதும் வழங்கப்படுகின்றன.

“இருப்பவனிடமிருந்து வாங்கி இல்லாதவனுக்கு கொடு ! அதனால் கொடுப்பவனுக்கும் பலன் உண்டு கருவியாக இருக்கிற உனக்கும் பலன் உண்டு ” என்பது அன்னையின் அருள்வாக்கு.

ஓம் சக்தி

நன்றி

சக்தி ஒளி 1991ஆகஸ்ட்

பக்கம் 2- 5.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here