அம்மா, அம்மா என்று வினாடிக்கொரு முறை நினைத்து வழிபடுகிறோமே – அந்த அன்னை ஆதிபராசக்தி எங்கே இருக்கிறாள்?  எந்தெந்த வடிவங்களில் இருக்கிறாள்? அந்த சக்தி தெய்வத்தின் நிதர்சனமான ” திவ்ய ” தரிசனம் எல்லோருக்கும் கிடைக்குமா? அந்தத் தரிசனம் எப்போது கிடைக்கும் ?- என்று மனிதமனம் சிந்தனை வலையைப் பின்னிய நேரத்தில் 10 பக்க கட்டுரை இயல்பாகக் கிடைத்தது.

மச்ச புராணத்தில் 108 சக்தித்தலங்களில் 108 வித , விதமான பெயர்களோடு வித, விதமான வெவ்வெறு வடிவங்களில் துடிப்போடு ஆதிபராசக்தி துலங்கி அருள் பாலிக்கிறாள் என்று நூல்களில் படித்து அறிகிறோம். அதில் 72- வது தலமான “சித்தவனம் -“ என்பது தான் “மேல்மருவத்தூர்”  என்று ஆன்மிக அறிஞர்கள் கூறுகிறார்கள்.

“அன்னை இல்லாத இடம் ஏது?  அவள் தூணிலும் இருக்கிறாள் துரும்பிலும் இருக்கிறாள்!!”  என்று படிக்காத பாமரன் பட் டென்று கூறிவிடுகிறான்.

எதையுமே ஆராய்ச்சி செய்து பார்க்கும் படித்த மேதாவிகள் தான் புராணங்களிலும், தத்துவங்களிலும் அன்னையைத் தேடுகிறார்கள்!

எது எப்படி இருப்பினும், பராசக்தியை தேடுகின்ற பக்தனின் முயற்சிகள்  எல்லாமே பராசக்தியால் அங்கீகரிக்கப்பட்டவை தான்!

சரி, அம்மா, எங்கே இருக்கிறாள்?

மதுரையில் – மீனாட்சி

காஞ்சியில் – காமாட்சி

காசியில் – (விசாலாட்சி அன்னபூரணி)

நெல்லையில் – காந்திமதி

மீனாட்சிபுரத்தில் -ஸ்ரீசியாளா (நெல்லை தேவி

கன்னியாகுமரியில் – கன்னியாகுமரி அம்மன்

முப்பந்தலில் – இசக்கி அம்மன்

மண்டைக்காட்டில்- பகவதி

வண்ணாரப் பேட்டையில் (நெல்லை) – பேராச்சி அம்மன்

தெய்வசெயல்புரத்தில் (தூத்துக்குடி) – -ஸ்ரீராஜராஜேஸ்வரி

நயினார் கோவிலில்-ஸ்ரீ செளந்திர நாயகி

ஆரல்வாய் மொழியில் – இசக்கி அம்மன்

நயினார் குளத்தில் (நெல்லை) – பிட்டப்பரத்தி அம்மன்

காயா மொழியில்- முப்புராதி அம்மன்

நங்கைநல்லூரில்- ஸ்ரீ ராஜ ராஜேவரி

திரு ஈங்கோய் மலையில் – ஸ்ரீ லலிதாம்பிகை

ஏரலில்- குரங்கணி அம்மன்

படைவீட்டில் – ரேணுகாம்பாள்

தென்காசியில்- உலகம்மை

ஸ்ரீவில்லிப்புத்தூரில்- ஆண்டாள்

சிவகாசியில் – பத்ரகாளி அம்மன்

கோவில் பட்டியில் – செண்பக வல்லி அம்மன்

சாத்தூரில் – இருக்கன்குடி மாரியம்மன்

விருதுநகரில் – (முத்துமாரி அம்மன், வெயிலுகந்த அம்ம)

அருப்புக் கோட்டையில்- முத்துமாரி அம்மன்

இராமநாத புரத்தில்- பர்வதவர்த்தனி அம்மன்

பரமக்குடியில்- முத்தால அம்மன்

காரைகுடியில்- கொப்புடைய அம்மன்

மடப்புரத்தில் – காளி

சங்கரன் கோவிலில் – கோமதி அம்மன்

தாயமங்கலத்தில்- முத்துமாரி அம்மன்

வீரபாண்டியில் – கெளமாரி அம்மன்

நந்தத்தில் -மாரியம்மன்

சோழவந்தானில்- ஸ்ரீ ஜனக மாரியம்மன்

திண்டுக்கல்லில்- கோட்டை மாரியம்மன்

சேலத்தில்- அன்னதான மாரியம்மன்

பெங்களூரில் – அன்னம்மா

சாக் கோட்டையில் – அம்பாள்

திருவாடானையில் – ஸ்ரீ சிநேகவல்லி அம்மன்

புத்தூரில் -ஸ்ரீ  திரெளபதி அம்மன்

சிக்கலில் – ஸ்ரீ தேவசேனை

சிதம்பரத்தில் – சிவகாமசுந்தரி

திருக்கடவூரில் – அபிராமி

திருச்சானூரில் – பத்மாவதி தாயார்

அலர்மேலுமங்கா புரத்தில் -அலமேலுமங்கா

திருப்பூரில் – (பட்டத்தளர்ச்சி அம்மன், ஓடைக்காடு பத்ரகாளி அம்மன்)

பல்லடத்தில்- பொங்காளி அம்மன்

அவினாசியில்- கருவலூர் மாரியம்மன்

சத்திய மங்கலத்தில்- பண்ணாரி அம்மன்

பொள்ளாச்சியில் – சூலக்கல் மாரியம்மன்

ஈரோட்டில் – சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன்

கோவையில் – கோணியம்மன் தண்டு மாரியம்மன், செளடாம்பிகை அம்மன்

பேரூரில் – பச்சைநாயகி அம்மன்

மேட்டுப் பாளையத்தில்- வனபத்ர காளியம்மன்

ஊட்டியில் – காளி – மாரி

திருச்சியில் -சமயபுரம் மாரியம்மன்

புதுக்கோட்டையில் -ஸ்ரீ மாதா புவனேஸ்வரி

கன்னிவாட்யில் – ராஜ காளி அம்மன்

தஞ்சையில் – முத்து மாரியம்மன், பங்காரு காமாட்சி அம்மன்.

புன்னை நல்லூரில் – முத்துமாரி அம்மன்

பெரிய பாளையத்தில் – பெரிய பாளையத் அம்மன்

மேல் மலையனூரில் – அங்காள பரமேஸ்வரி

ராசிபுரத்தில் சேலம் – சுமங்கலி அம்மன்

திருவண்ணா மலையில் – உண்ணாமலை அம்மை

திருவானைக்காவில் – அகிலாண்டேவரி

வேளாங்கண்ணியில்- ஆரோக்கிய மாதா

தொட்டியங் குளத்தில் – மாரியம்மன்

செந்தூரில் – சந்தன மாரியம்மன்

மணப்பாறையில் -முத்து மாரியம்மன்

சிறுவாச்சூரில் – மதுர காளியம்மன்

செங்கையில் – (மணபாத்தம்மன் நாகாத்தம்மன்)

பெருங்கரையில் – சதுரங்க நாயகி

பட்டுக் கோட்டையில் – காளியம்மன்

நாட்டரசன் கோட்டையில் – அம்மன்

ஆத்தூரில் – சோமசுந்தரி அம்மன்

வேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்) – தையல் நாயகி அம்மன்

நாகப்பட்டினத்தில் -ஸ்ரீ நீலாயதாட்சி அம்மன்

திருக்குற்றாலத்தில் – ஸ்ரீ குழல்வாய் மொழி அம்மன்

திருச்சி, குளித்தலை மேட்டு மகாதான புரத்தில் – அம்மன்

திருவிடை மருதூரில் –  ஸ்ரீ மூகாம்பிகை

கங்கை கொண்டானில் – ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன்

உறையூரில் – வெக்காளி அம்மன்

மாயவரத்தில் – ஸ்ரீ அபயாம்பிகை அம்மன்

பாபநாசத்தில் நெல்லை –  உலகாம்பிகை

திருவொற்றியூரில் -ஸ்ரீ வடிவுடையம்மன்

கும்ப கோணத்தில்- ஸ்ரீ மங்களாம்பிகை

திருக்கருகாவூரில் (தஞ்சை ) -ஸ்ரீ கர்ப்பரட்சகாம்பிகை (கருகாத்த )அம்மன்

திருவையாறு தலத்தில் – ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி

மயிலாடு துறையில் -( ஸ்ரீ அஷ்டாத சபுஜ மகாலஷ்மி துர்க்கா தேவி)

சென்னையில் – (மயிலை கற்ப காம்பாள், கோல விழி பத்ரகாளி அம்மன், முண்டக கண்ணியம்மன் முப்பத்தம்மன், ரேணுகா பரமேஸ்வரி அம்மன்)

திருவேற்காட்டில் – கருமாரி அம்மன்

மாங்காட்டில் – காமாட்சி அம்மன்

மைசூரில் – சாமுண்டீஸ்வரி

கொல்லூரில் – மூகாம்பிகை

சோற்றானிக் கரையில் – பகவதி

கொடுங்கல்லூரில் – பகவதி

காம்புழாவில் – பகவதி

காளஹஸ்தியில் – ஸ்ரீ ஞான பிரஸன்னாம்பிகை

விஜயவாடாவில் – கனக துர்க்கா

கல்கத்தாவில்-  காளி

சிருங்கேரியில் – சாரதாம்பாள்

தங்க வயலில் – கங்கையம்மன்

மங்களூரில் – மங்களாம்பிகை

குஜராத்தில் – ஸ்ரீ சந்தோஷி மாதா

மலேசியாவில் – மகாமாரியம்மன்

சிங்கப்பூரில் – வீரிமா காளியம்மன்

சபரிமலையில் – ஸ்ரீ மாளிகைபுரத்து மஞ்சள் மாதா

– என்று உலகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அன்னை ஆதிபராசக்தி மேல்மருவத்தூரில் “சுயம்பு”  உருவில் கொலுவிருந்து, அருள்திரு அடிகளார் தேகத்தில் தங்கி, அவருடைய ஆன்மாவில் ஜக்கியமாகி, “பேசும்”  தெய்வமாகவும் “நடமாடும்”  தெய்வமாகவும் இருந்து அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறாள்.

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் இருக்கின்றன! எல்லா ஆலயங்களிலும் புனிதனும், சக்தியும் இருக்கத் தான் செய்கின்றன!

ஆனால் மேல்மருவத்தூர் ஆலயம் மற்ற ஆலயங்களிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது! அதை மருவத்தூர் மண்ணை மிதித்து, மருவத்தூர் அன்னையை தொழுவார்கள் மனப்பூர்வமாக உணர்ந்துகொள்கிறார்கள்.

1. குருவிற்கு முக்கியத்துவம் அளிக்கும் சக்தி தலம் மேல்மருவத்தூர்!

2. அன்னையின் உரு, அருள்திரு அடிகளார் அவர்களின் அருள் காட்டுதலில் – ஆன்மீகத் தொண்டுகள் செய்து வரும் இலட்சக்கணக்கான  ஆடவர்- மகளிர் சக்தி தொண்டர்களை கொண்டது மேல்மருவத்தூர்!

3. ஆகம விதிகளுக்கு அப்பாற்பட்டு “அன்னையின் அருள்வாக்கு விதிகளுக்கு மட்டும்”  உட்பட்ட அருள் சித்தர் பீடம் மேல்மருவத்தூர்!

4. ஆதிபராசக்திக்கு விரதமிருந்து, சக்திமாலை அணிந்து சக்தி இருமுடி செலுத்தும் சக்தி தலம் மேல்மருவத்தூர்!

5. அன்னையின் அருள்வாக்குப் படி எல்லா காரியங்களும் நடைபெறுவதால் – “தெய்வீக நிர்வாகம்”  நடக்கும் சக்தி தலம், மேல்மருவத்தூர்!

6. சமுதாயத் தொண்டுகளுக்கும், கல்வி மருத்துவ பண்பாடு அறத் தொண்டுகளுக்கும் தமிழகத்தில் முதன்மையான ஆலயம், மேல் மருவத்தூர்!

7. ஜாதி, மத, இன வேறுபாடில்லாமல், ஏழை- பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல் “ஒரே தாய்!!  ஒரே குலம் !!” என்ற ஒரே  சிந்தனையுடன் “செந்நிற” ஆடை அணிந்து எல்லோரும் ஆன்மீகப் பணிகளைச் சமமாக செய்ய வாய்ப்புகள் தரும் சக்திதலம், மேல்மருவத்தூர்!

8. ‘சமுதாயத்திலும், ஆன்மிகத்திலும்,  பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்!”  என்று வாயளவில் பேசாமல், செயல் அளவில் பெண்களுக்கு எல்லாவற்றிலும் (வழிபாட்டு பூசைகளில், கேள்வி பூசைகளில், அமைப்பு , நிர்வாகத்தில்) அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் சக்தி தலம் , மேல்மருவத்தூர்!

9. வித்தியாசமான எளிய பூஜை, திருஷ்டி முறைகளும், வேள்வி முறைகளும் கொண்டு, “சப்தகன்னிமார்களுக்கு ” சந்நிதியும், ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை முதலியவற்றைமாய்க்கும் அதர்வண பத்ரகாளி சந்நிதியும் அமைந்த சக்திதலம், மேல்மருவத்தூர்!

10. 1800 -க்கு மேற்பட்ட ஓம் சக்தி மன்றங்களின் வாயிலாக வழிபாடும், சமுதாயத் தொண்டும் செய்து, அதை நிர்வகித்து வரும் தலைமை சித்தர்பீடம், மேல்மருவத்தூர்!

11. “உலகமெல்லாம் சக்தி நெறி ஓங்க வேண்டும். ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!”  என்ற உயர்ந்த இலட்சியத்திற்கு – தனது வியர்வைத் துளிகளால் அபிடேகம் செய்து வரும் அருள்திரு. அடிகளார்  அவர்களால் அகிலம் முழுமைக்கும் ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்பட்டு வரும் அற்புத சக்தி தலம், மேல்மருவத்தூர்!

இத்தனை சிறப்பு அம்சங்கள் மேல்மருவத்தூரில் இருப்பதால் தான் “தொண்டு” -என்பது இங்கே தவிர்க்க முடியாததாகிவிடுகிறது!

சரி, மருவத்தூரில் அம்மா எங்கே இருக்கிறாள்!

மருவத்தூரில் ‘அம்மா’  ஒவ்வொரு மண் துகளிலும் இருக்கிறாள்!

மருவத்தூரில் வீசுகின்ற காற்றில் ‘அம்மா’  கலந்திருக்கிறாள்!  மருவத்தூர் மண்ணிற்கு மூலாதார சக்தியாக இருக்கும் அருள் திரு. அடிகளார் அவர்களின் தேகத்தில் ‘அம்மா’  இருக்கிறாள்!  அடிகளாரின் ஆன்மாவில் ‘அம்மா’  இருக்கிறாள் !அடிகளாரின் ஆன்மாவில் ‘அம்மா’  இருக்கிறாள்! அடிகளாரின் குரலில் ‘அம்மா’ இருக்கிறாள்! அடிகளாரின் பார்வையில் ‘அம்மா’ இருக்கிறாள்! அடிகளாரின் செய்கையில் ஒவ்வொன்றிலும் ‘அம்மா இருக்கிறாள்!

மொத்தத்தில் – அடிகளாரே அம்மாவாக இருக்கிறார்! அம்மாவே அடிகளாராக இருக்கிறாள்!

அந்த “அடிகளாருக்குள் வாழும் அம்மா” -வின் தரிசனம் நமக்கு எப்போது கிடைக்கும்?

“அடிகளார் பார்வை படுமாறு நின்று கொள்ளுங்கள்!” – என்று அம்மா அருள்வாக்கில் சொன்னதை நம்பி… “அம்மா”  ஆலயத்தைச் சுற்றி வரும் போது, நாமெல்லாம் முண்டியடித்துக் கொண்டு நின்றால்….

எல்லோருக்குமா ‘அம்மா’  பார்வை கிடைத்து விடுகிறது?  ஒரு சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கிறது. ஏன் அப்படி?

அன்னை கூட பாரபட்சம் காட்டுகிறாளோ?

சத்தியமாக இல்லை!

அம்மாவையும் குருவையும் மனதில் பூஜித்தபடி இடைவிடாமல் “தொண்டுகள்”  செய்யும் பக்தர்களுக்கே அம்மா முதலிடம் கொடுக்கிறாள்!

அன்னையின் தொண்டுகள் ஆற்றிவரும் தொண்டர்கள் ஒவ்வொரு வினாடியும் “அம்மாவை”  ஒரு வகையில் தரிசித்து தான் வருகிறார்கள்!

அது எப்படி?

1. கருவறையில் மட்டும் “அம்மா”  இல்லை!  கழிவறையை சுத்தம் செய்யும் போது கூட தொண்டன் அருகே அம்மா அங்கே இருக்கிறாள்!

2. “குரு தரிசனம்” செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் செய்து கொண்டிருந்த பணியைப் பாதியில் விட்டு விட்டு ஒடினால்.. குரு காணிக்கை கொடுத்தாலும் கிடைக்காதே “அம்மா”  தரிசனம்?

3. “அம்மாவின் அங்கப்பிரதட்சணத்தை பார்க்க வேண்டும்”-  என்று செய்து கொண்டிருந்த பணிகளை அப்படியே போடு விட்டு ஓடியவர்கள் அம்மாவின் அங்கப்பிரதட்சணத்தைப் பார்க்க முடியவில்லை! ஆனால் “பணி நடக்கின்ற இடத்தில் அம்மா கண்டிப்பாக இருப்பாள்” என்று நம்பி பணி செய்தவர்களுக்கு – கனவில் அங்கப்பிரதட்சணத்தை அன்னை காட்டியது உண்டு!

4. தொண்டர்களின் ஒரு சிலர் 24 மணி நேரமும் அன்னையை நினைத்த படி மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் தங்கள் குடும்ப கடமைகளை செய்து வருவார்கள் இவர்கள் கூட உண்மையான சக்தி தொண்டர்கள் தான்!  இவர்கள் தாங்கள் செய்கின்ற ‘கடமையில் ‘அம்மாவை தரிசிப்பவர்கள்!

5. சொந்த ஊரில் இருக்கும் போது, நம் எல்லோருக்குமே அன்னையின் பணிகள் செய்ய ஆயிரம் வாய்ப்புகள் இருக்கின்றன!

*மன்றக் கூட்டு வழிபாட்டில் கலந்து கொள்வது.

*மன்றத்தின் வாயிலாக சமுதாயப் பணிகள் செய்து அன்னையின்  புகழினைப் பரப்புவது.

*வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அன்னதானம் , ஆடைதானம் செய்து , ஏழை எளியவர்களின் மனம் குளிர வைப்பது.

*ஏழை எளியவர்களுக்கு சக்திமாலை அணிவித்து மருவத்தூர் அழைத்து வருவது

* மாவட்டப் பிரச்சாரக்குழு செய்கின்ற பெரிய சமுதாயப் பணிகளில் கலந்து கொண்டு, தன்னால் முடிந்த பணிகளை செய்வது.

இந்த அரிய வாய்ப்புகளையெல்லாம் விட்டு விட்டு மருவத்தூர் வரும் போது மட்டும் – ஆலயத்தைச் சுற்றிக் கிடக்கும் நாலைந்து குப்பைகளைப் பொறுக்கி விட்டால் “அம்மா”  வை பார்த்து விடலாம் என்று நினைத்தால்… “அம்மா ” தரிசனம் எப்படி கிடைக்கும்?

5. எந்த வித பணியும் செய்யாமல், மாதத்திற்கு ஒரு முறை மருவத்தூர் வந்து அம்மாவை “தரிசிப்பவர்கள்”  இருக்கிறார்கள். வருடம் முழுவதும் அம்மா பணிகளை தங்கள் சொந்த ஊரில் ‘ உடல் நோக ‘ செய்து விட்டு, வருடத்திற்கு ஒரு முறை மட்டும் இருமுடி ஏந்தி வந்து அச்சரப் பாக்கம் எல்லையைத் தொடுகின்ற பாமர ஜனங்களும் இருக்கிறார்கள்!  அந்த அப்பாவி ஜனங்களுக்கு தரிசனம் கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் அம்மா, இருமுடி செலுத்தியவர்கள் எல்லோரையும் ‘அடிகளார் அலுவலகத்திற்கு ‘ வரச் செய்து ‘ அருள் தரிசனம்’ கொடுக்கிறாள்!

உண்மைக்கே பணி செய்து, நொந்து போய் வந்தவர்களுக்கு மட்டும் – அந்த அருள்பார்வை “நல்ல டானிக்”  மாதிரி!

மருவத்தூர் அன்னை ‘தொண்டிற்கு’  அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாள்.

அருள்திரு. அடிகளார் அவர்கள் எவ்வளவு பெரிய ஜனக்கூட்டத்திலும் எதுவும் பேசுவதில்லை! இலட்சக்கணக்கான சக்தி தொண்டர்களை வழி நடத்தும் நமது ஆன்மீக குருவால்- தனது கொள்கைகளை, இலட்சியங்களை உலக மக்களுக்கு “பேசாமல் ” எப்படி தெரிவிக்க முடிகிறது?

சக்தி தொண்டர்கள் செய்யும் தொண்டுகள் மூலம் தான் செவ்வாடைத் தொண்டர்களின் நோக்கங்கள் அன்னையால் மக்களுக்குத் தெரிவிக்கப்படுகின்றன!

எனவே-

நாம் செய்கின்ற “தொண்டுகளில் தான்”  அன்னை இருக்கிறாள்! என்ற உறுதியான முடிவுக்கு வருவோம்!

நாம் செய்கின்ற ‘ஆலயத் தொண்டுகள்’  அன்னையைச் சேரும் போது “அம்மா தரிசனம் ” நமக்கு கிடைக்கின்றது!

நாம் செய்கின்ற ‘சமுதாயத் தொண்டுகள்’  ஏழை மக்களிடம் போய் சேரும் போதும் “அம்மா தரிசனம் ” நமக்கு கிடைக்கின்றது!

அம்மா எங்கே இருக்கிறாள்?

அம்மா, நாம் செய்யும் தொண்டுகளில் இருக்கிறாள்!

தொண்டுகள் செய்வோம்!

அன்னையை தரிசிப்போம்!!

தரிசித்து, வேண்டுகின்ற வரங்கள் யாவும் பெறுவோம்!!

ஓம் சக்தி

நன்றி

சக்தி ஒளி 1991 ஏப்ரல்

பக்கம் 40- 47.

]]>

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here