வியாழக் கிரகம் பூமியுடன் மோதலாம். அவ்வாறு மோதும் போது ஏற்படும் சேதத்தைப் பற்றி இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது. விண்வெளி ஆராய்ச்சியாளா்கள் வானிலையைக் கவனித்து அடுத்த நாள் மோதலாம் என்கிறார்கள்.

இப்படி ஒரு செய்தி, செய்தித்தாளில் வந்தது.

இரவு படுக்கும் பொழுது மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியை வணங்கி, மூலமந்திரம் சொல்லி, எந்தச் சேதமும் நேராமல் அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்று அம்மா! என வேண்டினேன்.

எப்பொழுது வழிபட்டாலும் மந்திரங்கள் சொல்வதுாடு சரி! எதுவும் வேண்டிக் கொள்வதில்லை. அன்று முதன் முறையாக உலக மக்களுக்காக வேண்டினேன். இயற்கை சீறும்போது மனிதனால் என்ன செய்ய முடியும்?

அன்றைய இரவில் தூக்கத்தில் ஒரு கனவு. அண்ட சராசரங்களும் கண்முன் விரிகின்றன. நான்
நினைக்கிறேன். எதிரில் பூமி தெரிகிறது. வியாழன் அதை நெருங்குகிறது. அருகில்….. மிக அருகில்…… நெருங்கி விட்டது. மோதப் போகிறது…… கரம் குவித்து வேண்டுகிறேன்…..

ஆன்மிககுரு பங்காருஅடிகளார் அவர்கள் வானத்திற்கும் பூமிக்கும் இடையே விஸ்வரூபமாகத் தெரிகிறார்.

கையிலிருந்து ஒளிக்கதிர்கள் பூமியை நோக்கி வருகின்றன….. கண்முன் உயா்ந்தவா போற்றி ஓம்! மந்திரங்களை முணுமுணுக்கிறேன்.

தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டேன். எதிரே கடிகாரத்தைப் பார்க்கிறேன். நடு இரவு 11.00 மணி.

காலையில் டி.வி.யில் செய்தித் தாளில் வியாழக் கிரகம் இரவில் பூமியுடன் மோதியதில் அதிகச் சேதாரம் எதுவும் இல்லை என்ற செய்தி வருகிறது.

விஞ்ஞானிகள் சொன்ன நேரத்திற்கு முன்பே மோதிவிட்டது.

நான் தூக்கத்திலிருந்து விழித்துக் குறித்து வைத்த நேரத்திற்கு மிகவும் அருகில் அது நடந்து விட்டது.

ஓம்! அகிலமும் அண்டமும் ஆள்வாய் போற்றி ஓம்!

ஓம்! கோள்கள் ஒன்பதின் தலைவீ போற்றி ஓம்!

நன்றி!

ஓம் சக்தி!

டாக்டா். மல்லிகா சுவாமிநாதன், M.B.B.S. D.G.O, ஈரோடு

பக்கம்: 33

அவதார புருஷா் அடிகளார், பாகம் 13.