அவருடைய மனைவி – அம்மா பக்தர்
அவருக்கு 12 வயதில் ஒரு பையன்
அவனுக்கு இதயத்தில் ஓட்டை – எந்த மருத்துவமும் பலன் அளிக்கவில்லை,
அவர் மனைவி அம்மாவிடம் பாத பூஜைக்கு
வாங்க என்று கணவரை கூப்பிடுகிறார் –

அதுல எனக்கு நம்பிக்கை இல்லை
நான் கோவிலுக்கு வந்தேன் என்றால் சாமி கும்பிட மாட்டேன் என்கிறார்,
அவர்மனைவி ஒரு வழியாக மேல்மருவத்தூர் வந்து பாத பூஜையில் – அம்மாவின் பாதத்தை பிடித்து – என் மகனை காப்பாற்று தாயே என்று கதறிஅழுதார்,

அம்மாவும் பிள்ளையும் அம்மாவின் பாதத்தை பிடிக்க — தி.க.காரர் மட்டும் – தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் இரண்டு கையையும் விட்டுக் கொண்டு -நிமிர்ந்து நின்றார்
அம்மா சொன்னாள் – உன் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இல்லை – சார் நிற்கிறாரே அவருடைய இதயத்தில் தான் ஓட்டை – என்று சொல்லி உத்தரவு என்றாள்,

கோவில் விட்டு வெளியே வந்து
தி.க.காரர் அவர் மனைவியை – சரியான பேச்சு வசப்பாடி விட்டார்,
அடிகளார் பொய் சொல்கிறார் – குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை – எனக்கு இதயத்தில் ஓட்டை என்று மாத்தி சொல்கிறார், அதற்குத்தான் நான் சாமி கும்புடுவதே இல்லை என்றார்.

ஒரு வாரம் கழித்து தி.க காரர்க்கு உடல் நிலை சரியில்லை – மருத்துவரிடம் அழைத்து கொண்டுபார்த்தார்கள்
Dr முழுமையாக பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு இதயத்தில் ஒட்டை உள்ளது ,நோய் கணிப்பு உறுதியாக சொல்லிவிட்டார்கள்,

தன்னுடைய மகனையும் பரிசோதித்து பார்த்தார்கள், பையனுக்கு இதயத்தில் ஓட்டை இல்லை – அது நார்மல்,

தி.க காரர்க்கு மருவத்தூராள் ஞாபகம் வந்து அடுத்த நாளே மேல்மருவத்தூர் வந்து பாத பூசையில் முழு சரணாகதியாக கும்பிட்டு அழுதார்,

அம்மா தயைக் கொண்டு எழுந்திருமகனே _ உனக்கு உயிர் பிச்சை கொடுக்கப்பட்டது,
பயப்படாதே அடிக்கடி அம்மாவிடம்வா விதியை மாற்றி அமைக்கிறேன் உத்தரவு என்றாள் – ஓம் சக்தி