அப்படி என்றால் உங்கள் அருகில் இருக்கும் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்திற்கு வாரம் தோறும் சென்று வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள்.*

ஆம், பூவுலகில் உள்ளவர்கள் மட்டும் அல்லாமல் வேறு உயர்ந்த உலகங்களில் இருக்கும் ஆன்மாக்களுக்கு கூட கிடைக்காத பொக்கிஷம் தான் அன்னையின் வார வழிபாட்டு மன்றங்கள். இதை செவ்வாடை தொண்டர்கள் முழுமையாக உணராமல் இருப்பது தான் மிகவும் வேதனைக்குரிய விடயம். அப்படி உணர்ந்திருந்தால் உலகம் முழுவதும் உள்ள 6,000 வார வழிபாட்டு மன்றங்கள் இன்று 60,000 மன்றங்களாக ஆகி இருக்கும் அல்லவா? அன்னை உருவாக்கி உள்ள இந்த மன்றங்களில் நாம் எப்படி வழிபாடு செய்கிறோமோ அதே முறையில் தான் அன்னையின் 1008 புவனங்களிலும் வழிபாடு நடைபெறுகிறது என்ற தெய்வ ரகசியத்தை அன்னை முதன் முதலில் இப்பூவுலகில் உள்ள செவ்வாடைத் தொண்டர்களாகிய எங்களுக்கு தான் கூறினாள். எத்தகைய ஒரு வாய்ப்பை எமக்கு அன்னை இந்த கரம் உலகில் தந்துள்ளாள் என்பதை நாம் முழுமையாக உணர்ந்து செயல்பட வேண்டும்.

வாரம் தோறும் வார வழிபாட்டு மன்றம் சென்று வழிபடும் செவ்வாடை தொண்டன் ஒருவன் அடைய இருக்கும் உன்னதமான நிலையை இப்போது அவனால் உணர முடியாது. அவர்களின் ஆன்மா இவ்வுடலை விட்டு பிரிந்த பின்னர் தான் அதன் மகத்துவத்தை உணர முடியும். ஆனால் அப்போது உணர்ந்து என்ன பயன்? கிடைத்தற்கரிய வாய்ப்பை இப்போது தவற விட்டு விட்டு பின்னர் வருந்துவதன் அர்த்தம் என்ன?

வேதங்களில் கூறப்பட்ட ஆன்மிகத்தை, ஒரு சிலர் மட்டுமே அறிந்து வைத்திருந்த ஆன்மீகத்தை *பட்டி, தொட்டி எங்கும் பாமரனும் நெஞ்சை நிமிர்த்தி ஆன்மீகம் பேச வைத்த அவதார தெய்வம் பங்காரு தாயின்* மன விருப்பம் என்ன என்பதை உணர்ந்து செயல்பட வேண்டாமா? எத்தனை அருள்வாக்குகள்? எத்தனை உபதேசங்கள்? அம்மா தன் பொன்னுடலை வருத்தி எமக்கு தந்தாள். *ஆனாலும் மனித மனம் மாறவில்லையே.*

மன்றங்களின் மகிமை உணர்ந்து அங்கு வாரம் தோறும் சென்று வழிபாடு செய்து நாமும் அம்மாவின் மன விருப்பப்படி ஆன்ம முன்னேற்றம் பெற்று பிறவிப்பிணியில் இருந்து விடுபடுவது மட்டுமல்லாமல் உலகத்து மக்களையும் ஆன்மீக பாதையில் வழிநடத்தி செல்ல வேண்டாமா?

*இன்றே அம்மாவின் முன் இந்த சங்கல்பத்தை எடுப்போம். வாரம் தோறும் வார வழிபாட்டு மன்றம் செல்வோம். அன்னையின் உண்மைத் தொண்டர்களாவோம்