குழந்தையாகிய உனக்கு எதை எப்போது தர வேண்டும் என்று தாயிக்கு தெரியும், தாயின் கையைப் பற்றிக் கொண்டு செல்லும் குழந்தைக்கு எதைப் பற்றியும் கவலையில்லை ,அவள் தம்,, பாதம் பணிந்து நாம் அவள் வழி செல்வோம் ,அவள் நம்மை கரைசேர்ப்பாள் உன்னால் முடிந்த அளவு புண்ணிய காரியங்களையே செய்து கொண்டு வா, மனத்தாலும் வாயாலும், உடம்பாலும் நல்லனவே நினை, நல்லனவே பேசு, நல்லனவே செய் ,அப்படி செய்தால் படிப்படியாக நீ ஆன்மமுன்னேற்றம் பெறுவாய், அன்பால் தான் உயிர் வளர்ச்சியும் உலக வளர்ச்சியும் அமைகின்றன, எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டும்படி எல்லா மதங்களும் சொல்கின்றன.

அந்த அன்புணர்ச்சி மனித மாயைகளில் வற்றாமல் சுரப்பதற்கான ஒரு செயலே அன்னதானம், உலகப் பொருள்கள் உயிர்கள் அனைத்திலும் உள்ளொளியாக நிற்கிறது இந்த ஆன்மா ஆகும், இது அணுவுக்கு அணுவானது அண்டத்திற்கு அண்டமானது நூலறிவாலும் நுண்ணீய தர்க்கங்களாலும் இதை உணர்தல் இயலாது, உருகி நிற்பவர் உள்ளத்தில் ஒளியாய் இது உள்ளது, நம் அகத்தில் உறையும் ஆன்மாவும் புறத்தில் விளங்கும் பிரமமும் ஒன்று என்பதை உணர்வதே உயர்ந்த ஞானமாகும், பக்திதான் உலகிலேயே சிறந்தது வாழ்வில் ஆன்மீகமும் அதைச் சார்ந்த அருளும் தான் ஆதாரம் அதன் படி நாம் நடக்க வேண்டும், நாம் சுகம் பெற வேண்டி ஐம்புலன்களின் வாயலாக மனதை வெளிப் பொருட்களின் மீது திருப்புகிறோம், நாம் நித்திய சுகம் பெற வேண்டி தியானம் என்பதின் வாயிலாக ஐயம்புலன்களை அடக்கிவைத்து உள்முகமாக அவள் நம் மனத்தைத் திருப்புகிறாள்,

? ஓம் நிம்மதி தருவாய் போற்றி ஓம்?

நீ வர வேண்டிய இடத்திற்கு வந்து விட்டாய் இனி உனக்கு உன் குடும்பத்திற்கும் நான் பொறுப்பு மகனே -அன்னையின் அருள்வாக்கு,