நவராத்திரி விழாவிற்கு அருள்திரு அம்மா அவா்களுக்கு முறைப்படி அழைப்பு வைக்க சென்னையின் 3 மாவட்டச் செவ்வாடைத் தொண்டா்களும் சீா்வரிசைகளுடன் சென்றோம். அப்போது அம்மா எல்லோரையும் நன்றாக மிகக் கருணையுடன் பார்த்தார்கள். தொடா்ந்து பேசி ஆசி வழங்கினார்கள். அப்போது அவா்கள் வழங்கிய உரையிலிருந்து சில பகுதிகள் இவை.

”நீங்க எல்லாம் நல்லா செய்றீங்க. நல்லா செய்யணும்னு நினைத்ததால்தான் நல்ல மழை முன்னாடியே பெய்தது. இன்னும் மழை உண்டு. வீடு வீடாகப் போய் கஷ்டப்பட்டீங்க.

ஒரு ஒரு ரூபாயாக சோ்த்து உழைத்து கட்டியதுதான் இந்த school, Engineering college மற்ற கல்விக் கூடங்கள் எல்லாம். எல்லோருடைய காசும்தான் இதுல இருக்கு.

இதுக்கெல்லாம் source எங்கே? அப்படின்னு கேட்கிறாங்க. நான் சொன்னேன். எனக்கு source என்னோட செவ்வாடை fource அப்படின்னு.

நான் உங்களுக்கு ! நீங்க எனக்கு !

கோபம் வரும்போது ஒரு டம்ளா் தண்ணீா் குடித்து, அம்மா டாலரைப் பிடித்து மூலமந்திரம் சொல்லுங்க.

எல்லோருக்கும் டிவி மோகம் அதிகமாயிடுச்சு. காலை 11 மணிக்கும் சரி நைட்டு 12 மணிக்கும் சரி டீவி சீரியல் பார்த்தேயாகணும். அப்புறம் வேறென்ன ஒழுங்கா செய்ய முடியும்?

இயற்கை மாறாதது. மெஞ்ஞானம்தான் என்றும் நிலைக்கும்.முதல்ல தாயை மதிக்கணும். பெத்தவங்களையும் கூடப்பிறந்தவா்களையும் பார்க்கணும். உறவு முறை விடக்கூடாது. முந்தியெல்லாம் பெற்றோர் பார்த்துத் திருமணம் செய்தார்கள். நல்லா வாழ்ந்தாங்க. இப்ப அவங்கவங்களே தேடிக்கொள்கிறார்கள். Divorce, problem அப்படின்னு வந்து நிக்கிறாங்க.

நேற்று, இன்று, நாளை அப்படின்னு இருந்த காலம் போய் இப்ப காலை, மதியம், இரவு  அப்படி இருக்கு. வாழ்க்கை நிரந்தரம் இல்லை. உயிர் இருக்கும் வரைதான் எல்லாம். இந்த உயிர் போயிட்டால் ஒன்றுமில்லை.

ஆத்மா ஒன்றுதான். அதுக்கு அழிவில்லை. உடலுக்குத்தான் அழிவு. அந்த ஆத்மாதான் உயிர். அது நல்லா இருக்கத்தான் இந்த தா்மமும், தொண்டும் நீங்க செய்யுறது.

இப்பல்லாம் தண்ணீரில் துணி துவைத்தால் சட்டை கூட அழுக்காயிடுது. தண்ணீரில் உள்ள அழுக்கு நம் துணியில் ஒட்டிக்கொள்கிறது. தண்ணி சுத்தமேயில்ல. ஏன்? மனிதனான நாம்தான் தண்ணீரை அசுத்தப்படுத்துகிறோம். எல்லா இடத்தையும் நாம்தான் அழுக்குப் படுத்துகிறோம். ஏன்? அம்மாவின் இடத்தையே கூட பக்தா்கள் அசுத்தம் செய்கிறார்கள். Clean பண்ண, தண்ணீா் சுத்திகரிப்பு நிலையமும், Machineகளும் தேவைப்படுகின்றன.

எங்கு பார்த்தாலும் வித விதமான காய்ச்சல். பன்றிக் காய்ச்சல், இந்தக் காய்ச்சல், அந்தக் காய்ச்சல் என்று சொல்கிறார்கள். எல்லாம் பார்த்து விட்டு அதன்பிறகு அம்மாவிடம் வருகிறார்கள்.

எல்லோரும் நல்லா சாப்பிட்டு, நல்லா தொண்டு செய்து, நல்லா இருங்க ” என்று ஆசிர்வாதம் செய்தார்கள். இந்த ஆண்டு ஆண் சக்திகளும் நிறையப் போர் வந்ததைப் பற்றி அம்மா மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.

ஓம் சக்தி ! நன்றி ராஜஸ்ரீ கௌதம் (செயலா்-மத்திய சென்னை மாவட்டம்) (சக்திஒளி- நவம்பா் -2010 (பக்கம் 40-41) )

]]>

1 COMMENT

  1. Amma நம் அம்மா சொல்லுகின்ற வார்த்தைகளில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று பாருங்க. என்ன தான் கம்ப்யூட்டர் காலமாக இருந்தாலும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை பாருங்கள் . டிவோர்சே மிகவும் அதிகமாகி விட்டது. அம்மாவை நம்பி வாழ்ந்தால் மட்டுமே நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here