எல்லாம் அறிந்த *”அருட்திரு அம்மா அவர்கள் சொன்னார்கள், குடும்பத்துடன் வருடாவருடம் இருமுடி சுமந்து வரவேண்டும்”*
************************

*”என் மகனைக் காப்பாற்றிய தாய்!!”*
************************************

எனது மூத்த மகன் பள்ளி சென்றுவிட்டு வரும்போது ஒருநாள் திடீரென உடம்பு முழுவதும் தடிப்பு, தடிப்பாகவும் காய்ச்சலாகவும், வயிற்று வலியோடும் பள்ளியிலிருந்து வந்தான் திடீரென வாந்தி எடுக்க ஆரம்பித்துவிட்டான்.

அன்று காலையிலிருந்து சாப்பிடவும் இல்லை ஆனால் வாந்தி மட்டும் நிற்காமல் வந்து கொண்டிருந்தது. கால்டம்ளர் தண்ணீர் கொடுத்தால் லிட்டர் கணக்கில் வாந்தி எடுப்பான்.

டாக்டரிடம் காட்டியதில் உடலில் உள்ள தடிப்பும் காய்ச்சலும் குணமானது. ஆனால் வாந்தியை நிறுத்த முடியவில்லை.

நண்பரிடம் பணம் கடனாகப் பெற்று சிறப்பு மருத்துவரிடம் காட்டியபோது இரத்தப்பரிசோதனை செய்யச் சொல்லி அந்த ரிப்போர்ட்டைப் பார்த்ததில் *இவனுக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று கூறினார். HB viral infection வந்துவிட்டது.*

*இதற்கு மருந்து இன்றுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை* என்றார்.

டாக்டரின் காலைப்பிடித்து அழுது என் மகனைக் காப்பாற்றுமாறு கெஞ்சினேன். அவர் என் நேரத்தை வீண்டிக்காதே! உன் மகனை அழைத்துச்செல் என்று கோபமாகக் கூறிவிட்டார். பிறகு நகையை விற்று மருத்துவமனைக்கு கட்டவேண்டிய தொகையைக் கட்டி என் மகனைக் கூட்டிவந்தேன்.

என. மகனைப் பார்க்கும்போதெல்லாம் கண்ணீர் வரும். அவனைப் பார்த்து பார்த்து அழுதேன். சில நேரங்களில் அவனைக் கட்டிப்பிடித்து இந்தப் பாவம் செய்தவனுக்குப் போய் மகனாகப் பிறந்துவிட்டாயே என்று அழுதேன்.

கோவில்கோவிலாகச் சென்று அவன் பெயருக்கு அர்ச்சனை செய்து விபூதி குங்குமத்தை அவன் நெற்றியில் இட்டு என் மகனைக் காப்பாற்று கடவுளே என்று வேண்டுவேன்.

ஒருநாள் எனது உறவினர் (அக்காமுறை ) எங்கள் வீட்டிற்கு வந்தார் . என்னைப்பார்த்து என்னடா! இவ்வளவு சோகமாகவும், முகச்சவரம் செய்யாமலும் இருக்கிறாய்? என்ன ஆச்சு? இவன் ஏன் இப்படிப் படுத்திருக்கிறான் என்னாச்சு? என்றார். என் மனைவி விளக்கமாகக் கூறினார். அவர் சரி!

*”அழுகாதே, கவலைப்படாதே”*
———————————-

அழுகாதே! கவலைப்படாதே! நான் ஒன்று சொன்னால் நம்பிக்கையோடு செய்வாயா ? என்றார். நானும் நம்புகிறேன் அக்க என்றேன்.அவர், அம்மாவை நம்பு! அந்த

*”அருள்திரு அடிகளார் அவர்களை நம்பிக்கையோடு வேண்டிக்கொள்!”* அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்என்று கூறி ஆறுதல் சொன்னார்.

டாக்டர் என்ன கடவுளா? கெடு விதிப்பதற்கு….அவரைப் படைத்தவளே இந்த அம்மாதான்! எனவே கவலைப்படாதே!

*”மருவத்தூர் மருத்துவச்சி”*
——————————-

இந்த மருத்துவருக்கும் மேலாக மேல்மருவத்தூர். மருத்துவர் இருக்கிறாள்.நீ அம்மாவை வேண்டிக்கொள். நீ மருவத்தூர் சென்று அம்மாவிற்கு பாதபூஜை செய்! என்றார்.

*அம்மாவின் அருளால்..*
—————————–
*என் கஷ்டத்தைப் பொருட்படுத்தாது என் மகன் பிழைக்க வேண்டும் என்ற வேகத்தில் கடனை வாங்கிக்கொண்டு மிகுந்த நம்பிக்கையோடு மருவத்தூர் சென்றுஅம்மாவிற்குப் பாதபூஜை செய்தேன்.*

அழுதுகொண்டே அம்மாவைப் பார்த்தேன்.என்னால் பேச முடியவில்லை.

*”கவலைப்படாதே…”*
——————————

அம்மா கருணையுடன்,
*கவலைப்படாதே! உன் மகன் வயிற்றில் வரக்கூடாத கொடிய நோய் வந்திருப்பதாகச் சொல்வார்கள்.அந்த நோயைக் குணப்படுத்துகிறேன்.நீ என்ன செய்வாய்?* என அம்மா கேட்டார்கள்.

நானோ பயந்து கொண்டே இப்போது இருக்கும் சூழலில்அம்மா ஏதாவது செய்யச் சொன்னால் என்ன செய்வது என பயந்துகொண்டே தலையை ஆட்டினேன்.

எல்லாம் அறிந்த அம்மா சொன்னார்கள், சரி ஒன்றுமில்லை *குடும்பத்துடன் வருடாவருடம் இருமுடி சுமந்து வரவேண்டும்* என்றார்கள்.

*அம்மா பாதம் வணங்கி வீடு வந்து சேந்தோம். சில நாட்களில்என் மகன் சிறிது சிறிதாக சாப்பிட ஆரம்பித்தான். கால் டம்ளர் தண்ணீர் குடித்தால் வாந்தி எடுத்தவன் கொஞ்சம் உணவு சாப்பிட ஆரம்பித்தான்.* அப்போதே அம்மாவிற்கு நன்றி கூறினோம். இது உண்மை.

அதன்பிறகு *தைப்பூச விழாவிற்கு அம்மா கூறியது போல குடும்பத்துடன் வந்து நன்றியுடன் இருமுடி செலுத்தினோம்.* அன்று முதல் இன்றுவரை தினமும் அம்மாவிற்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

*அதன்பிறகு எந்தத் தொந்தரவும் வராமல் எங்களை அம்மா காப்பாற்றிக் கொண்டிருக்கிறாள்.*

அவன் ஏழாம் வகுப்பு பிடிக்கும் போது , இவன் பிழைக்கமாட்டான்; இவனைக் கூட்டிச்செல்! என்று பெரிய மருத்துவ நிபுணர் கூறினார்.

ஆனால் நம் *”மருவத்தூர் மருத்துவர் அருள்திரு அம்மா அவர்களின் கண் பார்வை பட்டதுமே வந்த நோய் பட்டுப்போய் விட்டது”*.

இப்போது அவனுக்கு வயது 21 . M.B.A., படித்துக்கொண்டிருக்கிறான்.

அவன் M.B.A. படிப்பதற்கும் அனைத்து கல்லூரிகளிலும் 7 லட்சம் 8 லட்சம் டொனேஷன் என பயமுறுத்தினார்கள்.

நான் படும் கஷ்டத்தில் என்னால் முடியாது தம்பி! நீ எங்காவது வேலைக்குச் செல் என்று கூறினேன். அவன் படிக்கவேண்டும் என்ற ஆவலில் இருந்தான்.

*அம்மாவிடம் போய் கேட்டோம்.அன்று அம்மா மௌனம். படிக்க வை! பணத்திற்கு நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சைகையில் கூறினார்கள். நாங்களும் அம்மாவின் மேல் பாரத்தைப் போட்டு இருந்துவிட்டோம்*.

பிறகு அவனாக சீனியர் நண்பர்கள் மூலம் விசாரித்து டெல்லிக்கு அருகில் உள்ள டெகராடூனில் சென்ட்ரல் போர்டு கல்லூரியில் சேர்ந்துவிட்டான். தொகையும் மிகக் குறைவுதான்…இதுவும் அம்மாவின் செயல்தான்!

சக்திஒளி

]]>