குருவே தெய்வம்!

“தொண்டின் மூலம் வருங்கால சந்ததிகளை சீராக்கவே உனக்கு பொறுப்புகளை தந்தேன் படிக்கல்லாக இரு தடைக்கல்லாக இருக்காதே மகனே! என் வழியில் நின்று என் சமுதாயத்தை என்னிடம் அழைத்து வா மகனே! குருவின் திருவடி பரம் பொருளின் திருவடி ஆதலால் ‘குருவின் திருவடி தரிசனம் பாவ விமோசனம்‘ என்பதை
எடுத்து சொல் பகட்டிற்காக செவ்வாடை உடுக்கதே உண்மையான குரு பக்தியோடு செவ்வாடை அணிந்து தொண்டு செய்து வா மகனே!

அன்னையின் அருள்வாக்கு

ஆன்மாவை சிதறவிடாமல் அன்பை வெளிப்படுத்துங்கள் அப்போது உன்னிடம் நெஞ்சடைப்பும் வராது. இரத்தகொதிப்பும் வராது. கல்வெட்டில் பொறிக்கும் செய்தி கூட அழிந்துவிடும் ஆனால் நீ என்வழியில் நின்று செய்யும் தொண்டும் வழிபாடும் தர்மமும் தியானமும் என்றும் உன்னை காக்கும்.

பட்டி தொட்டி யெங்கும் ஆன்மிகத்தை வளர்ப்பதற்காகவே மன்றங்களைத் தந்தேன் கூடவே வேதம் படித்தவர்கள் செய்து வந்த வேள்வி முறைகளை எழிதாக்கி பாமரனும் கலசவிளக்கு வேள்வி பூசை செய்யும் வாய்ப்பையும் கொடுத்துள்ளேன். பயன்படுத்திக்கொள் மகனே! செவ்வாடை அணிந்து அர்ச்சனை செய் செவ்வாடை அணிந்து மன்ற வழிபாட்டில் கலந்து கொள் தொண்டு செய் அதுதான் உனக்கு பாதுகாப்பும் எனக்கு பிடித்தமானதும்

அன்னையின் அருள்வாக்கு

ஏவல் பில்லி சூனியம் என்று அங்கும் இங்கும் அலைந்து காசை கரியாக்குவதற்காக நீ என்னிடம் வரவில்லை வேள்விக்குழுவின் உதவியுடன் ஒரு ஓம் சக்தி கொடியை வீட்டு வாசல்படியில் கட்டி வையடா மகனே! எந்த தீயசக்தியும் உன்னிடம் வர அஞ்சும் இங்கு நடை பெறும் விழாக்களில் கலந்து கொண்டு தொண்டு செய் அப்போது பாலகன் பார்வை உன்மீது படும் அந்த பார்வைக்கு தீயசக்திகளை அழிக்கும் தன்மை உண்டு.

உன்னை பாதுகாத்து கொள்ளத்தான் இந்த செவ்வாடையும். டாலரும் அணியச் சொன்னேன் எனக்காக அல்ல. நீ வாழ வேண்டி வழிபாடு செய்கின்றாய் அதற்காக இந்த வார வழிபாட்டு மன்றம் எனக்காக வழிபாடு செய்யவில்லை நீ உனக்காகவும் உன் ஊழ்வினை தீரவும் தான் வழிபாடு செய்கின்றாய்.

உங்களிற்கு ஆன்மீகக் கல்வியை போதிக்க நானே ஆன்மீக குரு அடிகளாராக வந்திருக்கிறேன் என்பதை உணர்ந்து செயல்படு அன்னை ஆதிபராசக்தி கூறுகின்ற வார்த்தைகளை அலட்சியம் செய்யாதீர்கள்.

ஓம் சக்தி

அன்னையின் அருள்வாக்கு.