பேராசிரியர் சக்தி. சோமசுந்தரம் ஒரு மேடையில் குறிப்பிட்டார். “அம்மாவைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. அது என்ன தெரியுமா? அம்மாவைப் பற்றி முழுசா நமக்கு எதுவும் தெரியாது!” அழிவுகள் வரக் காத்திருக்கின்றன: அம்மா சமீப காலமாக அடிக்கடி வலியுறுத்தி வருகிறாள். “மன்றங்களில் முறையாக வழிபாடுகளை நடத்தச் சொல்லு!” இன்னொன்றும் சொல்லியதாகச் சொல்கிறார்கள். “யாரைக் காப்பாத்தறது! யாரை விடறதுன்னு தெரியலே! ஒரே குழப்பமா இருக்கு!” ஏதோ ஒரு விபரீதம் வர இருக்கிறது என்று குறிப்பாகத் தெரிகிறது. அது எந்த ரூபத்தில் வரப்போகிறது என்று தெரியவில்லை. கோவைக்கு வர இருந்த பூகம்பத்தை ஒரு ஆன்மிகப் பயணத்தின்போது அம்மா தடுத்து நிறுத்தினாள். அம்மா இருந்த மேடையில் சரிவு ஏற்பட்டது அதற்கு அடையாளம். தருமபுரி ஆன்மிகப் பயணத்தை ஒரு சாக்காக வைத்து அரூரில் நேரவிருந்த பூகம்பத்தைத் தடுத்தாள். சுனாமியை அதன் வேகத்தைக் குறைக்கவும், அழிவை மட்டுப்படுத்தவும் அதற்கு முன் மெரினா கடற்கரை சென்று நள்ளிரவில் பூஜை செய்துவிட்டு வந்தாள். பூம்புகாரில் பஞ்சபூத வேள்வி செய்ய வைத்துக் காவிரி டெல்டாவைப் பாதுகாத்தாள். “தானே” புயல் பற்றிக் கடலூர் மாவட்டத்துக்கு எச்சரிக்கை கொடுத்தும் இன்னின்ன தடுப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே சொல்லியும் அந்த மாவட்ட இயக்கப் பொறுப்பாளர்கள் கேட்கவில்லை. ஆனாலும் உயிர்ச்சேதம் இல்லாமல் பொருட்சேதம் என்ற அளவுக்குக் காப்பாற்றிக் கொடுத்தாள். அம்மா சொல்படி கேட்டு நடந்ததால் அன்று “தானே” புயலிலிருந்து சென்னை தப்பித்துக் கொண்டது. உலகம் நம்புகிறதோ இல்லையோ……. நமக்கு ஆன்மிக இயக்கத்திற்குத் தெரியும். இதையெல்லாம் எடுத்துச் சொல்ல யாரும் இல்லையே….. தப்பிக்க ஒரே வழி: அழிவுகள் வரக் காத்திருக்கின்றன! தப்பிக்க ஒரே வழி! உலகமெல்லாம் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்களிலும், சக்தி பீடங்களிலும் முறையான வழிபாடு நடக்க வேண்டும். நன்றாக நினைவில் வையுங்கள்: முறையான வழிபாடு! முறையான வழிபாடு! முறையான வழிபாடு!!!!! சக்தி ஒளி – ஜுலை, 2012 பக்கம் (10 – 13).

]]>