ருக்குச் சொல்ல வேண்டுமோ, அவா்களுக்கெல்லாம் சொல்லி விடுங்கள் என்று டாக்டா்கள் கைவிரித்து விட்டார்க்ள்.

அந்த நள்ளிரவு நேரத்தில் அந்தப் பெண்மணியின் கணவா் எங்களுக்குத் தொலைபேசி மூலம் தகவல் சொன்னார். அப்போது, நான் என்னிடம் இருந்த மூலமந்திரம் எழுதிய ஒரு காகிதம், கொஞ்சம் கலச தீா்த்தம், அம்மாவின் சிறிய படம் ஒன்று எடுத்துக் கொண்டு அந்தப் பெண்மணி இருந்த மருத்துவமனைக்கு விரைந்தேன். அவள் கணவனிடம் கொடுத்து கலச தீர்த்தத்தை ஊட்டச் சென்னேன். தலை மாட்டில் அம்மாவின் படத்தை வைத்தேன். மூலமந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருங்கள்! என்று சொன்னேன். அவரும் அவ்வாறே ஜெபித்துக் கொண்டிருந்தார். அவா் படுகிற வேதனையைக் கண்டு மனம் தளரவில்லை. எனவே மறுநாள் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சென்று அந்தப் பெண்மணிக்காக வேண்டிக் கொள்ளப் புறப்பட்டேன். நான் போன நேரத்தில் கூட்டு வழிபாடு நடந்து கொண்டிருந்தது. மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அந்த சக்தி, நலம்பெற வேண்டும் என்று சங்கல்பம் வைத்து எல்லோருக்கும் கூட்டு வழிபாடு செய்தோம். எங்கள் வேண்டுதல் பலித்தது. அம்மா மனம் கனிந்தாள். அவளுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தாள். அவரது கணவா் எங்கள் மன்றத்தில் வந்து இத்தகவலைச் சொல்லி மகிழ்ந்தார். மன்றத்தார் எல்லோரும் சந்தோஷப்பட்டோம். கூட்டு வழிபாட்டின் பயனை அன்று உணா்ந்தோம். இப்போது கனடாவிலிருந்து குடும்பம் குடும்பமாக வந்து இருமுடி செலுத்தி வருகிறோம். அம்மாவுக்குப் பாதபூஜை செய்கிறோம். அம்மாவோடு பேசுகிறோம். அம்மாவுக்கு எங்கள் கனடா மன்றம் சார்பில் நன்றி! நன்றி! ஓம் சக்தி! சக்தி B. கமலா போனிபஸ், கனடா மருவூா் மகானின் 68வது அவதாரத்திருநாள் மலா்
]]>