ஒரு பெண்மணிக்கு மார்பகத்தில் புற்றுநோய் கட்டி

அவர் அன்னையின் பக்தர் மருத்துவரிடம் காண்பித்தபோது, ஒரு பெரிய ஆபரேசன் செய்ய வேண்டும் என்று கூறி விட்டார்.

இவர் அம்மாவிடம் கேட்டுவிட்டு செய்யலாம் என்று,இவரும்,இவரது கணவரும் அம்மாவுக்கு பாதபூஜை செய்தனர்.

அம்மா ஆபரேசன் பற்றி எதுவும் கூறாது,விளக்கு பூஜையில் கலந்து கொள்ளும்படி கூறிவிட்டார்கள்.

இவர்களுக்கு சப்பென்று ஆகிவிட்டது.அம்மா ஆபரேசன் பற்றி எதுவும் கூறவில்லையே என்று.அந்த பெண்மணி அம்மா கூறியபடி விளக்கு பூஜையில் கலந்து கொண்டார்கள்.

விளக்கு பூஜை முடிந்து எழுந்தவர்,திடீரென விளக்கின்மீதே விழுந்துவிட்டார்.

விளக்கின் கூர்மையான பகுதி அந்த பெண்மணியின் மார்பக கட்டி மீதே வெளியே பிடுங்க முடியாத அளவிற்கு ஆழமாக ஏறிவிட்டது.

உடனே அவரை ஆம்புலன்சில் ஏற்றி அம்மா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சிகிச்சை முடிந்து,விளக்கை எடுத்த டாக்டர் வெளியே வந்து,அவரது கணவரிடம் கண்கலங்க கூறினார்

“நாங்கள் ஆபரேசன் செய்தால் கூட அவரின் புற்றுக் கட்டியை நன்றாக அகற்றியிருக்க முடியாது.ஆனால் நாங்கள் விளக்கை பிடுங்கிய உடனேயே கட்டி வேரோடு வந்துவிட்டது.” என்று.மார்பகத்தில் கட்டி இருந்த இடத்தில் ஓட்டை பெரியதாக ஏற்பட்டு இருந்தது.

சிகிச்சைக்கு பின்னர்,அம்மாவின் ஆலயத்தில் விளக்கு பூஜையில் இவ்வாறு அசம்பாவிதம் நடந்துவிட்டதே என்று வருத்தத்தோடு அம்மாவிற்கு பாதபூஜை செய்யச் சென்றபோது,அம்மா கூறினார்களாம்

“உனக்கு எப்படி ஆபரேசன் செய்ய வேண்டும் எனக்குத்தான் தெரியும் மகளே.அதனால்தான் உன்னை விளக்குபூஜையில் கலந்துகொள்ளச் செய்து,விளக்கின் மீது விழும்படி செய்து கட்டியை வேரோடு அகற்றச் செய்தேன்.

கட்டி இருந்த ஓட்டையை வேள்வி சாம்பல் வைத்து 15 நாட்கள் அடைத்து வா.எல்லாம் சரியாகிவிடும்.” என்று.அந்த பெண்மணியும் அவ்வாறே செய்துவந்தார்.

15ஆவது நாள் கட்டி இருந்த இடத்திலிருந்து வறட்டி தட்டியதை போன்று தோல் விழுந்தது.

அதன்பிறகு கட்டி இருந்த வடுவே இல்லாதவாறு பழைய நிலையை அடைந்தார்.
ஓம் எல்லாம் நின்செயல் போற்றி போற்றி ஓம்.