1. உன் கருமவினை தீருவதற்கு இங்கு வரும்போதெல்லாம் தேங்காய், பழம், பூ, அர்ச்சனைத் தட்டு வாங்கி வந்து அர்ச்சனை செய்து பிரசாதமாக எடுத்துச்செல்! 2. தினசரி ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரமாவது என்னை வழிபாடு செய்! என் மந்திரங்களைத் தொடர்ந்து படித்து வா! 3. மன்றங்களுக்குச் செல்லும்போது முழுச் செவ்வாடையில் சென்று வா! சட்டை ஒரு நிறம், வேட்டி ஒருநிறத்திலும் இருக்கும்படி செல்லாதே! 4. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் மகளிர் கட்டாயமாகச் செவ்வாடையில் இருப்பது நல்லது! வியாழன், ஞாயிறு நாட்களில் ஆடவர் கட்டாயமாகச் செவ்வாடையில் இருப்பது நல்லது. (வேலைக்குச் செல்பவர்கள் இந்தத் தினங்களில் வீட்டிலிருக்கும் போதாவது செவ்வாடையில் இருப்பது நல்லது) 5. செவ்வாடைத் தொண்டன் ஒவ்வொருவன் வீட்டிலும் சக்திஒளி, சக்திமாலை இருப்பது நல்லது. 6. நீ வாழ வேண்டி வழிபாடு செய்கிறாய். அதற்காகவே மன்றங்களில் வழிபாடு. 7. மன்றங்களுக்குச் சென்று செவ்வாடையில் அர்ச்சனை செய்தால் மட்டுமே உனக்குப் பயன்கிடைக்கும். 8. மருவத்தூரில் நடைபெறும் விழாக்களில் தவறாமல் கலந்து கொள். ஆண்டிற்கு ஒருமுறையாவது உன் குருவிற்குப் பாதபூசை செய்துகொள். இவை செவ்வாடைத் தொண்டனுக்கு உரியன.

]]>