? “ஆன்மா வளரவும், அறிவு வளரவும் வேண்டியே, பற்று என்ற ஒன்றும் வேண்டியிருக்கிறது.” ? “எரிகிற கொள் ளிக் கட்டையைத் தண்ணீரால் அணைத்த பிறகும், சற்று நேரத்திற்குச் சூடு இருந்தபடியே இருக்கும். நீங்கள் என்ன தான் ஆன்மிகத்தில் ஈடுபட்டிருந்தாலும், உள்ளத்தில் ஆசைகள் இருக்கும் வரை, துன்பமும் தொடர்ந்து இருக்கும் “ ? “உள்ளே ஆன்மாவும், உள்ளத்தே உணர்வும் இருக்கிறவரை, ஆசைகள் ஒழிவதில்லை” ? உயிரும் ஆன்மாவும் சேர்ந்த உடல் என ஒன்று இருந்தால் தான், உலகத்தில் வாழ்க்கை என்ற விளையாட்டை விளையாட முடியும் “ ? “உங்கள் உள்ளத்தில் இருக்கும் ஆசைகளை, ஆன்மா அழிக்க வேண்டும் – ஆனால் இப்போதோ ஆசைகள், ஆன்மாவை அழிக்கின்றன.” ? “உங்கள் ஆசைக்கும் எல்லையில்லை; உங்கள் வாழ்விற்கும் எல்லையில்லை. எல்லை வருத்துக் கொண்டு வாழ்வதில்லை.” ? ” எதிலும் அளவோடு இருந்தால் நல்லது; எந்தக் காரணத்தைக் கொண்டும் அதிகமாக ஆசைப்படக் கூடாது – “ ? “மழை அதிகமாகப் பெய்தால், அழிவு தான் ஏற்படும்; அளவுக்கு மீறினால் அழிவு தான் ஏற்படும்.” ? பொருளைப் படைத்தால் மட்டும் போதாது; காப்பாற்றவும் வேண்டும்” ? “உணவு, உடை, இருப்பிடம் என இவை இருந்தாலே போதும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.” ? ” உழைத்துப் பிழைப்பதற்கு, ஆன்மா வழி செய்து கொடுத்தால், அதுவே போதும் என்று இருக்க வேண்டும்.” – மேலே கண்டவை அன்னையின் அருள்வாக்குகள் .]]>