? அபிராமி பட்டருக்காக, அமாவாசையை பெளர்ணமியாக மாற்றினாள். குளக்கரையில் நின்று அழுத ஞானசம்பந்தருக்கு, ஞானப்பால் ஊட்டினாள். ? ஊமையாகப் பிறந்த குமரகுருபரனுக்குத் திருச்செந்தூர் முருகனிடம் சொல்லிப் பேசும் சக்தியைத் தரச் செய்து, “மீனாட்சி அம்மைப் பிள்ளைத்தமிழ்” – பாடச் செய்து, ஓடோடி வந்து முத்துமாலையைப் பரிசளித்தாள். அந்தக் குமர குருபரர், காசியில் மொகாலய மன்னரிடம் பேசுவதற்காக அம்பிகையைத் தியானித்து “சகலகலாவல்லி மாலையைப் பாடிய போது, மொகலாய மொழியைப் புரிந்து, பேசும் சக்தியை அருளினாள் .  பிறவி பிலேயே ஊமையாக இருந்த மூகனைப் பேச வைத்துக் கவிஞன் ஆக்கினாள். அந்தக் கவிஞனைக் கொண்டு “மூக பஞ்ச சதி” ! என 500 சுலோகங்களைப் பாட வைத்தாள்  மூடனாக இருந்த வரதன் என்பவனை, கவி காளமேகமாக மாற்றினாள். ஆடுகள் மேய்த்து வந்த இடையன் ஒருவனைக் கவி காளிதாசனாக ஆக்கினாள். – இவையெல்லாம் வரலாற்று உண்மைகள். இப்போது, தற்காலத்தில் அன்னையின் கருணையை பற்றித் கொள்ள வேண்டுமா ….? மேல்மருவத்தூர் தொடர்பான நூல்களைப் படியுங்கள் …! அவளிடம் பொங்கித் ததும்புகின்ற தாய்மை உணர்வு தெரியும்! 1008 போற்றி மலர்கள் விளக்க உரை நூல் பக்கம் – 263 + 264 + 265]]>