மந்திர விளக்கம் – 3

பாகம் – 3

“ஓம் உலக நாயகியே போற்றி ஓம்” “ஓம் உறவுக்கும் உறவானவளே போற்றி ஓம்”

என்ற இரண்டும் 3வது 4வது மந்திரங்களாகும்.

இங்கு உலகம் என்ற சொல் நாம் வாழும் இந்தப் பூவுலகத்தை மட்டும் குறிப்பதாகக் கொள்ளக்கூடாது. சூரிய மண்டலத்திலுள்ள நாம் வாழும் இந்தச் சிறிய உலகம் போல் எத்தனையோ உலகங்கள் வான வெளியில் உண்டு. பால் வெளி (MILKY WAY) என்ற பகுதியில் ஓர் ஓரத்தில் இருப்பது சூரிய மண்டலம், மஅந்த மண்டலத்தின் ஒரு பகுதியில் இருப்பது நாம் வாழும் இந்தப் பூவுலக்கம், சூரியன் பூசனிக்காய் என்றால் நம்முடைய பூவுலகம் குடுகு அளவாகும். இவை இரண்டும் உள்ள பால்வெளியைப் போல் எத்தனையோ அண்டங்கள் உள்ளன விண்வெளியில்.

இவற்றை எல்லாம் படைத்தது யார்? இவற்றை விண்வெளியில் உலவ விட்டது யார்? இந்த அண்டத்திலுள்ள எல்லாக் கோள்களும் தம்மைத் தாமே சுற்றிக்கொண்டும் மத்தியில் உள்ள பெரிய ஓர் உருண்டையைச் சுற்றிக் கொண்டும் வருகின்றன. கோடி, கோடிக் கணக்கான இவை விண்வெளியில் சுழன்று வரும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதாமல் எவ்வாறு ஓர் ஒழுங்கு முறைக்குக் கட்டுப்பட்டு வருகின்றனர் சென்னை போன்ற நகரங்களில் வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதை அன்றாடம் காண்கிறோம். ஆனால் விண்வெளியில் கோடிக்கணக்கான உலகங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாகச் சுழன்று கொண்டு சுற்றி வருகின்றனவே! இதுவரை ஒரு விபத்துக்கூட ஏற்பட்டதில்லை! இது எவ்வாறு முடிகிறது? இவை அனைத்தையும் படைத்தவள் அன்னையே! ஸ்ருஷ்டிகர்த்ரி (267) என்று லலிதா சகஸ்ரம் இதனைக் கூறுகிறது. படைக்கும் தொழிலைச் செய்பவர் நான்முகன் என்று அழைக்கப்படும் பிரம்மா அல்லவா? அப்படி இருக்க அன்னை படைக்கிறாள் என்று கூறலாமா? என்ற வினாவிற்கு விடை கூறுவது போல லலிதா 268வது மந்திரம் ஒரு பெரிய உண்மையைக் கூறுகிறது. பிரமன் வடிவத்தில் அதிட்டித்து தின்று படைப்புத் தொழிலை அவன் செய்யுமாறு செய்பவளும் இவளே என்பதை பரம்ஹரூபா (268) என்று கூறுகிறது.

இதேபோலக் காத்தல் தொழிலைச் செய்யும் திருமாலும், அழித்தல் தொழிலைச் செய்யும் ருத்திரனும், மறைத்தல் தொழிலை (திரோதான சக்தி) செய்யும் எஸ்வானும் அனுக்கிரகத்தைச் செய்யும் சதாசிவனும் அன்னையின் வெவ்வேறு தோற்றங்களேயாகும் என்பதை கோப்த்ரி (256) கோவிந்த ரூபிணி (267) ஸம்ஹாசிணி (268) ருத்ர ரூபா (269) திரோதன – கரி (270) ஈச்வரி (271) ஸதா – சிவா (272) அதுக்ரஹ – தா (273) (லலிதம்) என்ற மந்திரங்கள் மூலம் அறியலாம்.

படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல், அருளல் என்ற ஐந்து செயல்களையும் பஞ்ச சருத்யம் என்று கூறுவார்கள். இவை அனைத்தையும் செய்பவள் அன்னை ஒருத்தியே ஆகலான் மூன்றாவது மந்திரம் “ஓம் உலக நாயகியோ!” என்று விளக்குகிறது. இதே கருத்தை லலிதா சகஸ்ரத்தின் இரண்டாவது மந்திரம் ஸ்ரீ மஹாராஜ்ஞீ (2) என்று கூறுகிறது. சக்ரவர்த்தினி என்றால் அவன் விருப்பப்படிதான் அனைத்தும் நடக்கும் என்பதை முன் காட்டிய மந்திரங்கள் நிரூபிக்கின்றன.

இனி நான்காவதாக உள்ள மந்திரம் “உறவுக்கும் உறவானவன்” என்பதாகும். உலகில் உயிர்தன் உடம்புடன் பிறப்பெடுத்துவிட்டால் பல்வேறு உறவுகள் ஏற்பட்டே தீரும். மனிதர்கள் அறிவு விளக்கம் பெற்றவர்கள் ஆதலின் தாய், தந்தை உடன் பிறந்தார் சுற்றத்தார் என உறவு நீண்டு செல்கிறது. விலங்குகளுக்கு பகுத்தறியும் அறிவு இன்மையால் இத்தனை உறவுகளும் அறியப்படுவதில்லை. ஆனாலும் கொடிய வனவிலங்குகளிலிருந்து விலங்கினமும், மனிதனும் அறியும் ஒரே உறவு தாய்தான். பகுத்தறிவு படைத்த மனிதன்கூடத் தன் தந்தை யார் என்று அறிந்து கொள்ளத் தாயின் உறவினையே நாட வேண்டி உளது. தாயின் மூலமாகத்தான் மற்ற உறவுகளை மனிதன் அறிய முடிகிறது.

“தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை” என்பது ஆன்றோர் வாக்கு. இதனாலேயே நம் நாட்டுச் சமயச் சான்றோர் அனைவரும் இறைவன் என்று ஆண்பாலில் குறிக்கப்படும். பொருளை “தாய்” என்றே கூறிப் போயினர். “பால் நினைந்தூட்டும் தாயினும்” என்றும், “தரதாய் முவேலு உலகுக்கும் தாயே!” என்றும், திருவாசகம் பேசுகிறது. லலிதாசகஸ்ரம் அன்னைக்குரிய பலகோடிப் பெயர்களுள் ஒன்றைத் தேர்தெடுத்து முதலாவதாகக் கூற வேண்டும் என்றும் குறிப்பினால் ஸ்ரீமா (1) என்றுதான் தொடங்குகிறது. பிறரைப் பொறுத்தமட்டில் எவ்வளவு நெருங்கின. உறவினராக இருப்பினும் நமக்கு எது வேண்டும் என்பதை அவர்களாகவே அறிய முடியாது. தாமாகக் கேட்ட பொழுதுதான் அவர்கள் அதைத் காணலாமா வேண்டாமா என்று யோசித்து ஒருவேளை தந்தாலும் தருவார்கள். ஆனால் நமக்கு என்ன வேண்டும் என்பதைக் கூற முடியாத குழவிப் பருவத்தில் கூட நம் தேவைகளை அறிந்து சிறிதும் மனவெறுப்பில்லாமல் தருபவள் தாய் ஒருத்தி தானே! நாம் பிடிவாதத்தாலோ அறியாமையாலோ துன்பம் இழைக்க நேர்ந்தால் எத்தனை உறவினர் அதைத் தாங்கிக் கொண்டு சும்மா இருப்பார்கள்? ஒருவேளை தாங்கிக் கொண்டாலும் நம்மிடம் அன்பு காட்டுவார்களா? ஆனால் தாய் நாம் இழைக்கும் அத்தனைத் துன்பங்களையும் தாங்கிக் கொண்டு எல்லையற்ற அன்பை நம்மீது சொரிகின்றவள் அல்லவா?

உறவு என்ற சொல் உறுதல் என்ற தொழிற் பெயரின் அடியாகப் பிறந்தது. உறுதல் என்றால் சென்று அடைதல் என்பது பொருளாகும். அன்னையை உறவு என்று கூறுவதால் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் மாட்டுக் கொண்ட பரம கருணையினால் அவளே விரும்பி நம்மிடம் வந்து தங்கியுள்ளாள் என்ற குறிப்புப் பொருளும் அடங்கியுள்ளது.

உறவுக்கும் உறவாளவன் என்றால் உறவுகள் என்று கூறப்படுகின்ற அனைவருக்கும் அப்பாற்பட்ட உறவாக உள்ள தாய் ஆவாள் அன்னை என்பதே இதன் பொருளாகும்.

இனி 5 வதாக உள்ளது ‘ஓம் உள்ளமலர் உவந்தவளே…! என்பதாகும். அன்பர்களின் மனத்தைத்’ தாமரை மலர் என்று உருவகிப்பது எல்லா மொழிகளிலும் உள்ள ஒன்றாகும். உள்ளத்தாமரை என்று தமிழிலும் “ஹ்ருதய கமலம்” என்று வட மொழியிலும் கூறுவதுண்டு. மனிதனின் இதயமே இறைவன் உறைவிடம் என்று கூறுவதில் ஆழமான பொருளும் உண்டு. மனிதனுக்கு அறிவு, உணர்வு என்ற இரண்டும் உண்டு. அறிவு தொழிற்படும் இடம் மூளை. அது பொருளை ஆராய்ந்து பகுத்துக்கொண்டே செல்வது. எனவே அறிவினால் இறைவனைக் காண முடியாது. இதன் எதிராக உணர்வுகள் தோன்றும் இடம் இருதயம். பக்தி உணர்வில் படுபவன் இறைவனாதலின், அவனை அடியவர்களின் இருதய கமலத்தில் இருப்பவன் என்று நம் முன்னோர் கூறினார்.

“மலர்மிசை ஏகினான்” என்று திருவள்ளுவரும் “வருந்தாவகை என் மனத் தாமரையினில் வந்து புகுந்தாள்” என்று அபிராமி அந்தாதியும் பேசுவதைக் காணலாம் உள்ளமலர் என்பது இதய தாமரையாகும். அடியவர்களின் இதய தாமரையில் வந்து தங்குவதற்கு அன்னை மகிழ்கிறாள். என்ற கருத்தையே இந்த மந்திரம் கூறுகிறது. இதே கருத்தை, பக்தர்களின் மனமாகிற மானஸஸரஸ் என்ற தாடகத்தில் நீந்துபவன் அன்னை என்ற பொருளில் பக்த – மாதஸ- ஹம்ஸிகா (372) என்றும் அடியவர்களின் இதயத்திலுள்ள இருளைப் போக்குவதில் ஒளிக்கதிர் அடர்ந்த சூரியர்கள் போன்றவள் என்ற பொருளில் பக்த – ஹார்த – தாமோ – பேத – பானுமத் – பானு ஸந்ததி (404) என்றும் பக்தனின் மனமாகிய மயிலைக் கூத்தாடச் செய்யும் கார்மேகமாக உள்ளவன் என்ற பொருளில்பக்த – சித் – கேகி – கநாகநா (746) என்றும் லலிதா சகஸ்ரம் பேசுகிறது. அடியவர்களின் உள்ளமாகிய தாமரையில் தானே விரும்பி உவந்து வந்து தங்குபவள் என்பதே 5-வது மந்திரம்.

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 9 (1982) பக்கம்: 14-16

]]>