பாகம் – 5

5. விதியும் மதியும்

இந்த ஊரில் – இந்தத் தாய் தகப்பனார்க்குப் பிறக்க வேண்டும் என்று எவரும் தீர்மானம் செய்து கொண்டு வந்து பிறப்பதில்லை. என்றைக்கு இந்த உலகத்தை விட்டுப் புறப்படப் போகிறோம் என்பதும் நிச்சயம் இல்லை. பிறந்தோம், வாழ்கிறோம், மடியப் போகின்றோம், வாழ்கின்ற நாட்களில் எத்தனை போராட்டங்கள்! எத்தனை எத்தனை இன்ப வாய்ப்புகள்பிறந்தோம், வாழ்கிறோம், மடியப் போகின்றோம், வாழ்கின்ற நாட்களில் எத்தனை போராட்டங்கள்! மனிதனுடைய பிறப்பும் இறப்பும், வாழ்வும் பெரிய புதிராக இருக்கின்றனபிறந்தோம், வாழ்கிறோம், மடியப் போகின்றோம், வாழ்கின்ற நாட்களில் எத்தனை போராட்டங்கள்! ஏதோ ஓர் விதிக்குட்பட்டே வாழ்க்கை அமைகின்றதுபிறந்தோம், வாழ்கிறோம், மடியப் போகின்றோம், வாழ்கின்ற நாட்களில் எத்தனை போராட்டங்கள்; இன்ப – துன்பங்கட்குக் காரணம் விதி என்கின்றார்கள்.

தலைவிதி – ஊழ்வினைக் கோட்பாடு இவற்றில் ஒரு காலத்தில் அவனுக்கு நம்பிக்கை இல்லை. அம்மாவிடம் அடைக்கலமாக வந்து சேர்ந்த பிறகு அவன் பெற்ற பாடங்கள் பல! அதற்கு முன்பெல்லாம் விதி ஊழ்வினை இவை பற்றி நண்பர்களோடு பேசும்போதும் உரையாடும் போதும் அவையெல்லாம் சுயநலம் மிக்க சமயவாதிகள் சொல்லி வைத்த கற்பனை வாதம் என்றே சொல்வது அவள் வழக்கம்.

முற்பிறப்பில் செய்த பாவங்களும் புண்ணியங்களும் மறு பிறப்பிலும் தொடர்வது எவ்வாறு? கண்ணுக்குத் தெரியாத அந்த வினைகள் அவற்றுக்கு உரியவனை எப்படி வந்து பற்றுகின்றன? என்பதெல்லாம் புதிராக இருக்கின்றன! நாலடியார் பாடல் ஒன்று இதற்கு விளக்கல் சொல்கின்றது.

“மந்தையில் பல மாடுகள் உள்ளன் எல்லாம் பசுமாடுகளே! ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் இருக்கின்றது. இளமையான கன்றுக்குட்டியை அந்த மந்தையில் விட்டால் ஆயிரம் பசுமாடுகள் இருந்தாலும் தன் தாயைச் சென்று பற்றிக்கொள்கின்றது அல்லவா? அது போலவே முன்னைப் பழவினைகளும் அவற்றுக்கு உரியவனைச் சென்று பற்றிக் கொள்கின்றன.

“பல்லாயுள் உய்த்து விடினும் குழக்கன்று வல்லதாம் தாய்நாடிக் கோடலை” என்று ஓர் உவமையின் வாயிலாக விளக்குகின்றது.

ஊழ்வினையின் ஆற்றலை அவன் அம்மாவின் கோயிலுக்கு வந்துதான் அனுபவத்தில் புரிந்து கொண்டான். நம்முடைய துன்பங்கட்கு எல்லாம் காரணம் நமது முற்பிறவியில் செய்த தீவினைகள் என்றால் நாம் முற்பிறவியில் எங்கே பிறந்தோம்? எப்படி இருந்தோம்? என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான். அம்மாவிடமே இது குறித்து முறையிட்டான். “தாயே நான் முற்பிறப்பில் என்ன தவறு செய்தேன்! எனக்கு ஏன் இப்படிப்பட்ட தொல்லைகளும் துன்பங்களும் வருகின்றன? என்னுடைய முற்பிறவி பற்றிச் சொல்ல வேண்டும்” என்று கேட்டான்.

அம்மா சொன்னாள்:

“மகனே! அதனை நானாகச் சொல்வது கூடாது; தியானத்தில் உட்கார்ந்து பழகு! உன் உள்ளுணர்விலிருந்து அதனை உனக்கு உணர்த்துகின்றேன். நீயாகவே தெரிந்து கொள்வாய்” – என்றான். சரி! சரி! அம்மாவே வெளிப்படையாகச் சொல்ல முடியாத பாவங்களை நாம் செய்திருக்கின்றோமோ என்னவோ அதனால்தான் இப்படி நழுவிக் கொள்கின்றாள் என்று நினைத்தான். தியானமும் செய்து பார்த்தாள் மனம் ஒருமுகப்படவில்லை.

ஒரு காலத்தில் விதி – ஊழ் இவை பற்றிக் கேலி பேசியது உண்டு. கோவலன் கொல்லப்பட்டதற்கு அவனுடைய முற்பிறப்பில் செய்த பாலம் என்று சிலம்பு பேசுகின்றது. அப்படியானால் கோவலனுக்கு வாழ்க்கைப்பட்டு – அல்லல் பட்ட கண்ணகி செய்த பாவம் என்ன? கோவலன், கண்ணகி ஆகிய இருவர் தம் பெற்றோர்களும் செய்த பாவம் என்ன? என்றெல்லாம் கேலி பேசியதுண்டு.

எல்லாமே அவரவர் தலைவிதி என்று சோம்பிக்கிடந்தால் மனிதன் முன்னேற முடியாது. இந்த அளவுக்கு சமுதாயம் முன்னேறியிருக்க முடியாது என்று அவன் பகுத்தறிவு கேலி பேசியதுண்டு. விதியை வெல்ல முடியாது என்றவர்களே விதியை மதியால் வெல்லலாம் என்றார்கள். அப்படிச் சொன்னவர்கள் விதிவழிதான் மதி போகும் என்றும் சொல்லியுள்ளார்கள். இவை பற்றிய குழப்பங்களையெல்லாம் தெளிவுபடுத்திக்கொள்ள முயன்ற போது எல்லாம் அம்மா “தியானத்தில் அமர்ந்து பழகு! உன் ஐயம் எல்லாம் தெளியும். உன் உள்ளிருந்து பதில் தருகின்றேன்” என்றாள். தியானத்தில் அமர்ந்தால், கொஞ்ச நேரத்துக்கெல்லாம் தலையைப் பிய்த்து கொள்வது போல் இருந்தது. உடனே எழுந்து ஓடி வந்து விடலாம் போல் தோன்றியது.

நம்முடை மனத்தையே நம்மால் அடக்க முடியவில்லை; நம்முடைய அறிவே நமக்குக் கட்டுப்படவில்லை. அப்படி இருக்கப் பெரிய பொருளாக அறிவுக்கு எட்டாததாக இருக்கின்ற பரம்பொருளைப் பற்றியும் – அப்பொருளின் நோக்கத்தையும் – பிறவி இரகசியங்களையும் அறிவது என்பது எவ்வளவு பெரிய காரியம் என்பது புரிந்தது. நமக்குத் தியானமும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம் பேசாமல் கோயிலுக்கு வந்து அம்மாவைக் கும்பிட்டு விட்டுச் சென்றால் போதும்! நம் துன்பங்களும் துயரங்களும் குறைந்தால் போதும் என்ற பக்குவம் ஏற்பட்டுவிட்டது. பக்தியின் மூலமாகவும் – அம்மாவின் கோயிலுக்குத் தொண்டு செய்வதன் மூலமாகவும் அவள் அருளைப் பெறுகின்ற எளிய வழிகள் இருக்கும்போது தியானமும் வேண்டாம். யோகமும் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டான்.

விதிப்படி அனுபவிக்க வேண்டிய துன்பங்களிலிருந்தும் – துயரங்களில் இருந்தும் அன்னை சிலரை அழிந்து போகாமல் காப்பாற்றி இருக்கின்றாள். அது ஆரம்ப காலத் தொண்டர்கள் பலருக்குத் தெரியும். அம்மா, ஆலயக் குழுவினருக்கு அருள்வாக்குச் சொல்லிய நேரத்தில் “இன்னும் சில தினங்களில் இந்த ஆலயத்தைச் சேர்ந்த தொண்டன் ஒருவனது விதி முடியப்போகிறது; என்றாலும் அது குறித்துக் கவலைப்பட வேண்டாம்” என்றாள். விதி முடியப் போகிறது என்றால் யாருடைய உயிரோ போகப் போகிறது என்றல்லவா பொருள்? அவராக இருக்குமோ? இவராக இருக்குமோ என்றெல்லாம் தொண்டர்கள் எல்லாம் யார் யாரையோ நினைத்து ஏங்கிப் பரிதாபப் பட்டுக் கொண்டனர். யாரைக் குறித்து அம்மா அவ்வாறு குறிப்பிட்டாள் என்பது அவனக்கும் மற்றவர்கட்கும் பிற்பாடுதான் புரிந்தது.

அம்மாவிடம் ஈடுபாடு கொண்ட கிருத்துவ மதத்தைச் சேர்ந்த அன்பர் ஒருவர். செய்யூர் எனும் ஊரில் ஓமியோபதி மருத்துவம் செய்து வாழ்பவர். அம்மாவின் கோயிலில் தொண்டு செய்யும் காரணத்தாலேயே கிருத்துவ சமயத்தைச் சார்ந்த உறவினர்களும் – நண்பர்களும் அவரைப் புறக்கணித்தனர். அவருக்கு இருதய நோய் உண்டு! இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்து கொண்வர். அவருக்கு ஒருநாள் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு விட்டது! மயங்கி வீழ்ந்தார். நிலைமை மோசமாக ஆகிவிட்டது. அவருடைய மனைவியாரும் அம்மாவிடம் பக்தி கொண்டவர். கணவரை வீட்டிலே அப்படியே விட்டுவிட்டு அழுதபடியே மருவத்தூருக்கு வந்து சேர்ந்தார். அன்று அன்னையின் அருள்வாக்கு இருந்த நாள். ஓடிவந்து, “தாயே எனக்கு மாங்கல்யப் பிச்சை கொடு என் கணவரைக் காப்பாற்றிக் கொடு” என்று அழுது புலம்பி முறையிட்டார். அந்த அம்மையாரைப் பார்த்து அம்மா சொன்னாள்.

“மகனே! நீ இருக்கும் நிலையில் மற்றவர்களாக இருந்தால் நேராக மருத்துவமனைக்கு ஓடியிருப்பார்கள். என்னையே நம்பி உன் கணவனை அப்படியே விட்டுவிட்டு நேராகத் தாயிடம் வந்து விட்டாய்! கவலை வேண்டாம் காப்பாற்றித் தருகிறேன்” என்று சொல்லித் திருநீறும், எலுமிச்சம் பழமும் மந்தரித்துக் கொடுத்து அம்மா அனுப்பினாள். வியக்கத்தக்க முறையில் அந்தக் கிருத்துவத் தொண்டர் உயிர் பிழைத்தார். இன்றும் அம்மாவிடம் கொண்ட நன்றி உணர்ச்சியாலும் பக்தியாலும் அம்மா கோயிலுக்கு முடிந்த போதெல்லாம் வந்து தொண்டு செய்கின்றார். இந்த நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்துத்தான் அவன் எழுதிய திருப்பள்ளி எழுச்சிப் பாடலில் பின்வருமாறு பாடினாள்.

செய்யூரில் வாழுமொரு சீருடைய தொண்டனவன் விதிநாள் முடிந்த போது உய்யவழி காணாமல் அவள்மனைவி அழுதோடி நின்காலில் வந்து வீழ்ந்தான். தையலவன் தாலிக்கும் தொண்டனவன் பக்திக்கும் உவந்துநாள் நீட்டித் தந்தாய்! வெய்யவினை தீர்க்கமேல் மருவூரில் குடிகொண்ட மயிலே! உன் விழிகள் திறவாய்!

மார்கண்டேயன் விதி பதினாறு ஆண்டுகள் வாழவேண்டும் என்பது! அவன் பரம்பொருளைப் பக்தியோடு பற்றிக்கொண்ட காரணத்தால் – அந்த மதி மார்க்கண்டேயனுக்கும் இருந்ததால் ஆயுள் நீட்டிக்கப் பெற்று வாழந்தான் என்பது புரணம்!

செய்யூர் அன்பரின் விதி முடியப் போகின்றது என்பது அன்னை முன்னரே தெரிந்து வைத்துத்தான் சொன்னாள். அதற்கு ஏற்ப உயிர் போகும் நிலையிலும் கணவனை அப்படியே விட்டுவிட்டு மருவத்தூருக்கு அவர் மனைவி நம்பிக்கையோடு ஓடி வந்தார்களே அந்தப் பக்திக்கும், அந்த அன்பரின் தொண்டுக்கும் உவந்த தாய் அன்பரின் வாழ்நாளை நீட்டித் தந்தாள்! மார்க்கண்டேயன் வரலாறு புராணத்தில் உள்ளது! செய்யூர் அன்பரின் நிகழ்ச்சி மருவத்தூரில் நடந்த வரலாற்று நிகழ்ச்சி.

பரம்பொருளைப் பற்றிக் கொண்டு நம்பிக்கையுடன் சரணமடைகின்ற மதி ஒருவனுக்கு இருந்துவிட்டால் விதியையும் வெல்லலாம். பக்தியுடனும் நம்பிக்கையுடனும், சரணாகதி அடைந்து பராசக்தியை வசப்படுத்திக் கொள்வதை விட்டுவிட்டு அவரைக் காப்பாற்றிய பராசக்தி இவரை ஏன் காப்பாற்றவில்லை என்று கேட்பது மடமை! கசிந்துருகும் பக்தியாலும் இதய நெகிழ்ச்சியாலும் பெற வேண்டிய அன்னையின் கருணையை வாதாடிப் பெற இயலாது; ஈட்டம் பேசிப் பெற இயலாது. அன்னையின் மனம் கனிய வேண்டும் அதற்கேற்றவாறு நாம் காட்டும் பக்தி இருக்க வேண்டும். நமது மனமும் உருகுவதாக இருக்க வேண்டும்.

பரம்பொருளைச் சரணாகதி அடைந்தவர்கள் அறிவுக்கு முதன்மை கொடுப்பதில்லை; அது எப்படி நடக்கும்? இது எப்படி நடக்கும் என்று யோசிப்பதில்லை. அறிவுக்கு முதன்மை கொடுத்துச் சிந்திக்க முற்படும் போதுதான் ‘‘நம்பிக்கை” ஆட்டம் கொடுக்கின்றது! எனவே தான் சமயங்கள் எல்லாம் கடவுளிடம் நம்பிக்கை வை! என்று நம்பிக்கையை வலியுறுத்துகின்றன. எதனால் இந்தத் துன்பம் வந்தது? ஏன் நமக்கு மட்டும் இந்தத் துன்பம்? என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்து மேலும் மனச்சுமையைப் பெருக்கிக்கொள்ளாமல் தெய்வத்தைத் சரணடைந்து துன்பங்களை நீக்கிக் கொள்ளலாம் என்பது பெரியவர்கள் கண்ட அனுபவம்!

“தனக்குவமை இல்லாதான் தான்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது” என்கிறார் வள்ளுவர்.

இராவணன் அழிய வேண்டும் என்பது அவன் விதி. இதனை மையமாக வைத்துக் காவியம் பாடியவன் அதற்கான பின்னணிகளையும் அமைக்கின்றான். இராமனுக்கு முடிசூட்டு விழா என்றதுமே எல்லோரும் களித்துக் கூத்தாடுகின்ற அயோத்தியில் கூனியின் வாயிலாக விதி தொழில் புரிகின்றது. கைகேயி வாயிலாக அது வடிவம் பெறுகின்றது. சூர்ப்பனகை வாயிலாக அது முற்றுகிறது; மாரிசன் வாயிலாக பொன்மான் உருவில் வேடமிட்டு வருகிறது. அனுமன் வாயிலாகத் துணை புரிகிறது. இராவண வதம் நிகழ்கின்றது. இப்படி ஒவ்nடிவாருவர் வாழ்க்கையிலும் விதி பின்னிய பின்னல் இருக்கின்றது. ஆகவே, விதியை வெல்ல வேண்டுமானால் விதியால் வரும் துன்பங்களிலிருந்து விடுபட வேண்டுமானால் கடவுளைச் சார்வது தான் மதியுடைமை! அதனால் தானோ என்னவோ விதியை மதியால் வெல்லலாம் என்று கூறினார்கள்.

-தொடரும்

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 8 (1982) பக்கம்: 17-21

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here