சென்ற இதழில் மின்சத்தி உள்ள வரைதான் உயிர் உண்டு. உயிரில்லா உடலில் மின்சத்தி இல்லை அதாவது எந்தச் சத்தியும் இல்லை எனத் தெரிந்துக் கொண்டோம். மிகச் சிறிய அளவு மின் ஓட்டமுள்ள நமது உடம்பை மின்சத்தி எவ்வாறு பாதிக்கின்றது என்று விரிவாகவே பார்ப்போம்.

1790-ஆம் ஆண்டில் திருகால் வாளி என்ற விஞ்ஞானி ஓர் உண்மையை பராசத்தியின் அருளால் கண்டுபிடித்தான். உயிருள்ள ஒரு தவளையின் கால் தசையை எடுத்து அத்தசையில் மின்கலத்தின் இரண்டு முனைகளிலிருந்து வரும் கம்பிகளைப் பொறுத்தி மின்னோட்டம் ஏற்படுத்தியவுடன் அத்தசை மிக விரைவில் சுருங்கிற்று என்பதுதான்! அதேபோல் உயிர் உள்ள எந்த விலங்கினங்களின் அல்லது மனிதனின் தசைகளில் மின்சத்தி பாய்ச்சப்பட்டால் தசைகள் சுருங்கின. எனவே ஒரு மின்விபத்தில் மின்சத்தி நமது உடல் மூலம் பாயும் போது பல பாகத்திலுமுள்ள தசைகள் அதிவிரைவில் சுருங்கிவிடுகின்றன. சுவாச கோசங்களும் சுருங்கிவிடுகின்றன. அதனால் நான் மின் அதிர்ச்சியினால் மயக்கமுற்றவர்களுக்குச் சில நிமிடங்களுக்குள் செயற்கைச் சுவாச முறையினால் உயிர் கொடுக்க முடிகின்றது.

தசைகளுள் சுவாச கோசங்களும் சுருக்கமடைவதோடு நிற்பதில்லை. மின் அதிர்ச்சி இருதயத்தையும் பாதிக்கின்றது. இருதயத் தசைகள் சுருங்கிப் பின் பிரிவதால் இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டம் நடைபெறுமாறு செய்கின்றது என்பதை யாவரும் அறிவோம். மின்சத்தி பாயும் போது இருதயத் தசைகளைச் சுருங்கச் செய்கின்றது. ஆனால் இருதய துடிப்பு உடன் நின்று விடுவதில்லை. சில விநாடிகள் இருதயம் பெரும் போர் தொடுத்துப் பார்க்கின்றது. மின் அதிர்ச்சியினால் சுருக்கமடைவராத் தவிர்த்து விரிவடையப் பலமாக முயல்கின்றது. ஆனால் மின்சத்தி மீண்டும் மீண்டும் அத்தசையைச் சுருங்கச் செய்கின்றது. சில வினாடிகளில் சுவாசம் நிற்பதாலும் இரத்த ஓட்டம் நின்று போவதாலும் இருதயம் தோற்றுப் போய் விடுகின்றது. இருதயம் தானாகச் சுருங்கும் போது மின்சத்தி விரைவாகச் செயல்பட உதவுகின்றது. ஆனால் விரிவடைய முயற்சிக்கும்போது பலமாக அதனைத் தடுத்துவிடுகிறது.

மின் அதிர்ச்சியினால் நரம்புகள், இரத்தக் குழாய்கள், மூளை முதலியன உடனே பாதிக்கப்படுகின்றன. நரம்பின் நார்கள் எரிக்கப்படுகின்றன. உயிர் அணுக்கள் (cell) சேதப்படுத்தப்படுகின்றன. மூளையின் பாகங்கள் பாதிக்கப்படுகின்றன. மூளையின் எந்தப் பாகங்கள் உடலின் எந்தப் பாகங்களை கட்டுப்படுத்துகின்றனவோ அப்பாகங்களும் பாதிக்கப்பட்டுச் செயலற்றுப் போய் விடுகின்றன. சில விநாடிகளிலேயே உயிர் பிரிக்கப்படுகின்றது. எனவே தான் மின் அதிர்ச்சி ஏற்பட்டவுடன் மயக்கம் ஏற்பட்டு உடல் உணர்வற்றதாகின்றது. சத்தி இல்லாத சிவம் சவமாகின்றது. உயிர் இனங்களுக்கு மின் அதிர்ச்சி ஏற்பட்டவுடன் வெளியாகத்திற்கு எந்தவிதச் சேதமுமின்றி உயிர் இழக்க நேரிடுகின்றது. ஒவ்வொருவருக்கும் ஏற்படும் மின் அதிர்ச்சியினால் உயிர் உடன், போவதும் அல்லது அதிர்ச்சியிலிருந்து மீள்வதும் அவரவருடைய உடலின் மின் தடைத் திறனைப் பொறுத்துள்ளது. ஆண்களுக்கு, மின்ஓட்டத்தின் அளவு மில்லி ஆம்பியரில் (1-1000ல்)

1. 1-5

2. 1-5 முதல் 3-5 வரை

3. 3-5 முதல் 4-5 வரை

4. 4-5 முதல் 6 வரை

5. 6 முதல் 8 வரை

6. 8 முதல் 12 வரை

7. 12 முதல் 15 வரை

7. 15க்கு மேல்

15 மில்லி ஆம்பியருக்குமேல் மின்சத்தி இருதய மூலம் பாயும்போதுதான் உடனே உயிர்போய் விடுகின்ற வாய்ப்பு ஏற்படுகின்றது. இந்நியர் உயிர் இழக்க 15 முதல் 20 வரையும் அமெரிக்கர் 20 முதல் 25 வரையும், இரஷியர்கள் 25 முதல் 30 வரையும் மில்லி ஆம்பியர் மின்னோட்டம் தேவைப்படுகின்றது!

மின் சத்தியைத் தொட்டவுடன் உடனே கையை எடுத்துவிட்டால் அதிர்ச்சியை மட்டும் உணர்கின்றோம். ஆனால் கையால் பிடித்துவிட்டாலோ அல்லது மின் சாதனங்கள் மீது அதிக நேரம் தொடர்பு கொண்டு விட்டாலோ எடுக்க முடியாத நிலையில் தசைகள் சுருங்கி அதிக மின்னோட்டம் பாய ஏதுவாகி மின் அதிர்ச்சிக்குப் பலியாகின்றோம். ஆனால் உயர் மின் அழுத்தத்தை (11000 வோல்ட்) மிக அருகில் சென்று தொடு முன்னரே மின்சத்தி நம்மீது தாவி தாக்குகின்றது. தீப்பிழம்பாக தாக்குவதால் தீக்காயங்களே ஏற்படுகின்றன. உயிருக்கு அதிக ஆபத்து இல்லை. இவ்விதம் நடப்பதைத் தான் உயர்மின் அழுத்தத்தின் இத்தடை அதிகமாக இருக்கின்றது. பெண்களுக்கு இத்தடை குறைவாகவும் குழந்தைகளுக்கு மிகக் குறைவாகவும் இருக்கின்றது. ஆனால் மின்னோட்டம் செலுத்தப்படும்போது மின்னோட்டம் செலுத்தப்படும் போது மின்னோட்டம் அதிகரிக்க இத்தடைத் திறன் குறைகின்றது. ஆபத்து அதிகரிக்கின்றது. எனவேதான் மின்சத்தியுடன் நேரிடையாக தொடர்புடையவர்களை உடனே அத்தொடர்பிலிருந்து நீக்காவிடில் உயிர் போய் விடுகின்றது. எந்தவித முயற்சியினாலும் மறுபடி உயிர்ப் பிழைக்கச் செய்ய முடிவதில்லை.

மின் சத்தியை ஒருவர் உடலில் பாய்ச்சினால் என்ன என்ன உணர்வுகள் ஏற்படுகின்றன என்பதைத்தான் பார்ப்போமே! அதாவது இருகைகளில் மின் கடத்திகளைப் பிடிக்கச் செய்து குறைந்த மின் அழுத்தத்தில் சிறிய அளவிலிருந்து மின்னோட்டத்தை இருதய மூலம் செலுத்திச் சோதனையிட்டபோது நடந்ததைக் கீழே காண்போம்.

உடலில் ஏற்பட்ட உணர்வுகள்

கையின் விரல் பிடிகளில் மின்னோட்டம் உணரப்படுதல்

கை மணிக்கட்டுவரை ஒருவித உணர்வுகள்

முழங்கைவரை அயர்ந்துபோன உணர்வு, கை நடுங்குதல், முதன் முதலாக வலியை உணர்தல்

மரத்துப்போதல், தசைகள் முன்கை வரை சுருங்குதல்

கை முழுவதும் விறைத்தல் மரத்துப்போகுதல் பிடியை தளர்த்த முடியாமை

கைப்பிடிமுதல் தோள்பட்டைவரை விறைத்துப் போதல்

கைகளில் உள்ள மின் கடத்திகளை விட இயலாமை. 15 விநாடிகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமை

கைப்பிடியை விடமுடியாமை, வலி பொறுக்க முடியாமை, கதறல் மின்னோட்டம் உடனே நிறுத்தப்படல்.

அருகில் சென்றால் தூக்கி எறியப்படுவதாகக் கூறுகின்றோம். எனவேதான் சாதாரணமாக மத்திய, குறைமின் அழுத்தங்களில் மின் விபத்தில் மிகவும் அதிகமாக உயிர்ச்சேதமேற்படுகின்றன. உயிர் பிரிந்தபின் உடலின் மின் தடைத்திறன் மிகவும் அதிகமாக உயர்ந்து விடுகின்றது. எனவே மின் உருக்கி (பியூஸ்) உருகுவதில்லை. ஆனால் இறந்தவரைத் தொட்டால் தொடுபவருக்கு ஆபத்து ஏற்படுகின்றது. சாதனங்கள் செயல்பட வேண்டியிருப்பதால் ஒரு ஆம்பியர் மின் உருக்கிகளுக்கு குறைவாகப் போட இயலாது. அவற்றிற்கு அதிக மின்னோட்டம் தேவைப்படுகின்றன. நமது உயிர்போகவோ 20 மில்லி ஆம்பியர் போதுமானதே.

மின் சத்தியோடு அன்னை ஆதிபராசத்தியின் சித்தாடலும் இயற்கையோடு அன்னையின் திருவிளையாடல்களையும் அடுத்துக் காணலாம். ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 2 (1982) பக்கம்: 19-21

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here