இரண்டு நாள் கழித்து……..

மேலே சொன்ன அடையாளம் கொண்ட அவர் வழக்கம்போல பிச்சை எடுக்கச் ச்ந்நிதித் தெருவுக்கு வந்து இருக்கிறார். ‘நான் விசாரித்துக் கொள்கிறேன் ‘ என்று சொன்ன அன்பர் வீட்டின் முன்னால் போய் நிற்கிறார். வழக்கம்போல வாய் பேசாமல் நிற்கிறார்.

வீட்டுக்காரர் விசாரிக்கிறார். “ என்னய்யா ! வாய் பேசாம நிக்கிறே முந்தா நாள் இந்த ஊருக்கு வந்தியா ?”

யாராவது இப்படி பேசினால் மட்டும் பதில் பேசும் அந்தப் பிச்சைக்காரர் சொல்கிறார் , “ நான் முந்தாநாள் இந்த ஊருக்கு வரவே இல்லையே ! “

“அப்படியா ? முந்தாநாள் காலையிலே நீ அந்த ஓம் சக்தி சார் வீட்டுக்கு வ்ந்தே…அவங்க வேறு இடம் பாருன்னு சொன்னாங்களாம்… நீ வேற எடம் பார்க்க விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டுப் போய்விட்டாய் என்று அந்த சார் சொல்லுகிறார். என்னய்யா ! நீ வேதாந்தம் எல்லாம் பேசுகிறாய் ! “ என்று அந்த அன்பர் கேட்கிறார்.

“ நான் முந்தா நாள் இந்த ஊருக்கு வரவே இல்லையே ! நான் இந்த ஊருக்கு  வந்து ஒரு வாரம் ஆச்சே “ என்றார் அந்தப் பிச்சைக்காரர்.

அப்படியா…சரி ! சரி ! என்று அவருக்கு ஏதோ தந்துவிட்டு அவரை அனுப்பி விடுகிறார்.

எளிதில் நம்பாத அந்த நண்பர் இன்னும் பலவகைகளில் நன்கு விசாரித்தார். அந்த ஆள் இரண்டு நாட்களுக்குமுன் வரவே இல்லை என்று உறுதி செய்து கொண்டார்.

அந்த ‘ ஓம் சக்தி ‘ எழுதிக் கொண்டு இருந்தவரைப் பார்த்தார். “சக்தி ! நான் அந்த ஆளை விசாரித்தேன். அந்த ஆள் முந்தா நாள் உங்க வீட்டுப் பக்கம் வரவே இல்லையாம்.இந்த ஊர்ப்பக்கம் வந்தே ஒரு வாரம் ஆச்சாம்.

ஏற்கனவே தவித்துக் கொண்டிருந்த அந்த அன்பருக்கு மேலும் தவிப்பு அதிகம் ஆகியது.

வந்தவரை விட்டுவிட்டோமே ! என்ற தவிப்பு. வந்தவர் யாராக இருப்பார் என்ற தவிப்பு. இன்னொரு முறை வருவாரோ என்ற தவிப்பு. இன்னொரு முறை வந்தாலும் இப்படி ஏமாந்து போய்விடுவோமோ என்று தவிப்பு. ஏமாறாமல் நாம் இருப்போமா என்ற தவிப்பு. வந்தவர் அப்படியே இன்னொரு முறை வந்தாலும் ‘ நம்மைத் தவிக்க விடாமல் இருப்பாரோ என்ற தவிப்பு ‘

என்ன தவிப்பு இருந்தால் என்ன ? வந்தவர் வந்தார் என்பது உண்மைதான். வந்தவர் ‘வேறு இடம் பார்க்க விருப்பம் இல்லை ‘ என்று சொன்னது சொன்னதுதான்.போன சந்தர்ப்பம் போனது போனதுதான். இப்படிச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டது விட்டதுதான். இன்று வரை ஏங்குகின்ற தவிப்பு தவிப்புதான்.

அவர் என்ன சொன்னார் ? “ வேறு இடம் பார்க்க விருப்பம் இல்லை “  வேத வாக்கியம் போல ‘நச்’ என்று இருக்கிறதே ! நானே பிரம்மம் என்னும் உபநிடதங்களின் மகா வாக்கியம் போல நறுக என்று இருக்கிறதே !

புதுக் கவிதைகளில் நல்ல ஒரு கவிதை வரிபோல அல்லவா இருக்கிறது. ‘நள்ளிரவில் சுதந்திரம் பெற்றோம். இன்னம் விடியவே இல்லை ‘ என்று சுருக்கமான ஒரு புதுக்கவிதை வரிகள் உண்டு. அந்தக் கவிதைக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.அதையெல்லாம் இங்கே எழுதப் போவதில்லை. ஆனால்……

“வேறு இடம் பார்க்க விருப்பம் இல்லை “ என்ற வரிகள் இலக்கிய வரிகளைத் தாண்டி நம் சிந்தனைக் கலக்கிய வரிகள் அல்லவா ? அந்த வார்த்தைகளை வீசி விட்டு மறைந்து விட்ட மகா சக்தி எது ?

‘ஓம் சக்தி ‘ என்று தினந்தோறும் எழுதுவதில் மகிழ்ந்து போய், காட்சி கொடுத்துக் கருத்தும் கொடுத்தவள் மருவத்தூர் மகா சக்தி அருள் அரசி அல்லாமல் வேறு யாராக இருக்க முடியும் ?

‘வேறு இடம் பார்க்க விருப்பம் இல்லை “ என்கின்ற அருள் வார்த்தைகள் எப்படிப்பட்ட வார்த்தைகள் ? எப்பேர்ப்பட்ட வார்த்தைகள்!

‘நான் பிச்சை கேட்கவா வந்தேன் ? ‘என்னையே எப்போதும் நினைந்து எப்போது நான் வருவேன் என்று நீ ஏங்குகிற ஏக்கத்தைப் போக்க நீ வசிக்கும் இடம் தேடி வந்தேன். அதனால் ‘வேறு இடம் பார்க்க விருப்பம் இல்லை “ என்று அர்த்தம்.

‘நான் நினைத்தால் எங்கும் வருவேன் , எப்போதும் வருவேன். அப்படித்தான் உன் வீட்டு வாசல்வரை வந்தேன். வேறு இடம் பார்க்க விருப்பம் இல்லை “ என்று அர்த்தம்.

அது மட்டுமா ? அந்தப் பக்தனுக்குப் மட்டுமா அந்த மகா வாக்கிய உபதேசம் ? “வேறு இடம் பார்க்க விருப்பம் இல்லை “ அர்த்தம் இருக்க முடியாது.

அண்டி வரும் பக்தர்களின் அல்லல்களைப் போக்க அருள்வாக்கு அளிக்க மேல்மருவத்தூரில்தான் வந்திருக்கிறேன். மேல்மருவத்தூர் தவிர வேறு இடம் பார்க்க விருப்பம் இல்லை என்று அர்த்தம்.

அடிகளார் என்னும் திருமேனியில் இடம் பிடித்து என் ஆத்மாவைக் கொண்டு உலகத்தைக் காக்க வந்திருக்கிறேன். அகில உலகத்திலும் தேடிப் பார்த்தேன். நான் இருக்கவும் அடிகளாரிடம் இடம் பிடித்தேன். வேறு இடம் பார்க்க விருப்பம் இல்லை என்று அன்னை ஆதிபராசக்தியே சொல்வதாக அர்த்தம்.

நன்றி சக்தி.பேராசிரியர் த.சோமசுந்தரம்

சக்தி ஒளி பக்கம்-54 , ஏப்ரல் 2009

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here