அடிகளார் வணக்கம்

  மருவத்தூர் சக்தி மைந்தன் மருவிலா மனம்ப டைத்தோன் திருவருட் சக்தி யாலே தினம்அருள் வாக்க ளிப்போன் அருவமும் உருவும் ஆன ஆதியாம் சுயம்மைத் தன்தாய்க் கருவறை இருந்த போதே கண்டருள் பெற்ற செல்வன். (சக்தி வழிபாடு) சக்தி என்பது சக்தியைத் தருவது பக்தியில் கடுமை சக்தியைப் பணிவது சக்தி வணக்கம் தன்மன உறுதி எக்கதி உறினும் என்றும் விடாதது தாயை வழிபடும் சக்தி படைத்தோர் மாயை விலக, மனிவிருள் அகலச் சேயாய் நின்று தினமும் துதிப்பர். தாயாய் அவளோ தாங்கிட வருவாள். சக்தி உபாசம் தாம்பெற விழைவோர் பக்குவம் பெற்றே பணிந்திட முனைவர். ஓம் சக்தி நன்றி: சக்திஒளி பக் 7 (1982)]]>