ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவா்கள் 5 நாட்கள் ஆன்மிகப் பயணமாக கடந்த மாதம் 19ம் திகதி வியாழக்கிழமை காலை விமானத்தில் மலேசியா பயணமானார்கள். ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்மாவை விமான நிலையத்தில் வரவேற்று வழியனுப்பி வைத்தார்கள்.

மலேசியாவில் உள்ள ஆதிபராசக்தி மன்றங்களின் ஒருங்கிணைப்புத் தலைவா் “ஓம்ஸ்” தியாகராஜன் தலைமையில்அங்குள்ள பக்தா்கள் அம்மா அவா்களுக்குச் சிறப்பான வரவேற்புக் கொடுத்தார்கள்.

தொடர்ந்து மூன்று நாட்கள் செவ்வாடை பக்தர்களின் பொதுச் சந்திப்புக்களையும், பாதபூசைகளையும் அம்மா ஏற்றுக் கொண்டார்கள். அம்மா அவா்களின் வருகையை முன்னிட்டு மலேசியாவில் கிள்ளான் எனும் ஊாரில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் 22ம் திகதி ஞாயிறன்று நடத்திய கலச, விளக்கு, வேள்வி பூசைக்கு ஆசி வழங்கினார்கள். காலையில் வேள்வியைத் தொடர்ந்து நடைபெற்ற மாபெரும் பால்குட ஊா்வலத்தை தனி அருளாசி மேடையில் அமா்ந்து பார்வையிட்டு ஆசி வழங்கினார்கள்.

அன்று மாலை “ அறம் செய்வோம் ஆயிரம் ” எனும் பெயரில் நடைபெற்ற மக்கள் நலப்பணி விழா மேடையில் பல பயனாளிகளுக்கு ஊன்றுகோல்கள், சக்கர நாற்காலிகள், மூக்குக் கண்ணாடிகள், மாணவா்களுக்கு மடிக் கணினிகள், நோட்டுப் புத்தகங்கள் முதலிய மக்கள் நலப்பணிப் பொருட்களை வழங்கினார்கள்.

மேலும் அந்த மேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மலேசிய நாட்டு சுகாதாரத்துறை அமைச்சா் டத்தோ சுப்ரமணியத்திடம் ஆயிரம் பேர் உறுதி அளித்த உடல் உறுப்புத்தானப் பத்திரங்களை வழங்கினார்கள்.

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவா் திருமதி அம்மா அவா்கள் ஆன்மிகப் பேருரை நிகழ்த்தினார்கள். பக்தி, குருபக்தி, தொண்டு பற்றி மிகவும் விரிவாக எடுத்துரைத்தார்கள்.

23.9.2013 காலை செவ்வாடைத் தொண்டா்கள் அம்மா அவா்களுக்கு பாதபூசைகள் செய்து அவா்களது மலேசிய வருகைக்கு நன்றி தெரிவித்து ஆசிபெற்றனா்.

அம்மாவைத் தரிசிக்க அம்மாவின் பக்தா்கள் சிங்கப்பூா், ஆஸ்திரேலியா மற்றும் அருகிலுள்ள நாடுகளிலிருந்தெல்லாம் மலேசியா வந்திருந்து ஆசி பெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆன்மிககுரு அம்மா அவா்களுடன் இயக்கத் துணைத் தலைவா் சக்தி திரு கோ.ப.செந்தில்குமார் மற்றும் இயக்கத்தின் முன்னனிப் பொறுப்பாளா்களும் சென்றிருந்தனா்.

23.9.2013 திங்கள் இரவு 11.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அம்மா அவா்களுக்கு செவ்வாடை பக்தர்கள் திரளாக வந்திருந்துசிறப்பான வரவேற்பளித்து  ஆசிபெற்றனா். அதன்பின் அருள்திரு அம்மா அவா்கள் இரவு சுமார் 1 மணியளவில் மேல்மருவத்துார் திரும்பினார்கள்.

ஓம் சக்தி!

நன்றி (சக்திஒளி-அக்டோபா்13,  பக்-26-27)

]]>

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here