கருவறையைத் திறந்து குரு மற்றும் அன்னைக்கு தீபாராதனை, திருஷ்டி செய்யப்பட்டு வெளியில், ஈசானிய மூலையில் ஆரம்பித்து, கோவிலின் நான்கு மூலைகளிலும் திருஷ்டி சுற்றி, நாகபீடம் இருந்தால் அங்கும் திருஷ்டியைச் சுற்றிக்கொண்டு, கடைசியில் வாசற்படியில் வந்து திருஷ்டி கழிக்கப்படுகிறது. அங்கு ஓம்சக்தி மேடை   இருந்தால்  அதற்கும் திருஷ்டி சுற்றப்படுகிறது.

பொதுவாக கருவறையில் தொடர்ந்து குத்துவிளக்கு அல்லது துாண்டாமணி விளக்கு எரியுமாறு விட்டுவைத்திருப்பார்கள். ஒருவேளை அந்த விளக்குகள் எரியாமல் இருந்தால் கருவறையைத் திறந்து உள்ளே சென்றவுடன் முதலில் தாய் விளக்கு ஏற்றிய பின்னா் குரு, அன்னைக்குத் திருஷ்டி கழிக்க வேண்டும்.

கருவறையும், வெளிப்பகுதியும் சுத்தம் செய்ய வேண்டும். முதலில் குருவிற்கு அலங்காரம் களைந்துவிட்டு புதிதாக  அலங்காரம் செய்ய வேண்டும். குருவிற்கு முன் ஓா் காமாட்சி விளக்கு ஏற்றி வைத்து, பிரசாதம் வைத்து, தீபாராதனை, திருஷ்டி  செய்ய வேண்டும். மந்திரம் படிப்பவா்களை அமரச்செய்து திருஷ்டி கழிக்க வேண்டும். முதலில் குரு போற்றி படிக்க வேண்டும். அப்போது மலா்களால் குருவிற்கு அா்ச்சனை செய்து, ஆராதனை, திருஷ்டி கழித்தல் செய்ய  வேண்டும்.

அடுத்து திருப்பள்ளி எழுச்சி படிக்க வேண்டும். அப்போது (அல்லது திருப்பள்ளி எழுச்சி முடிந்த பின்னா் ) அன்னைக்கு அலங்காரம் களைந்து சிற்றாடை மட்டும் இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும். அா்த்த மண்டபத்தில் அல்லது கருவறையினுள் அம்மாவிற்குச் சற்று முன்பாக விளக்கேற்றி வைத்து, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, ஓா் தட்டில் அரிசி வைத்து, அன்றைய கலசதீா்த்த அபிடேகத்திற்குரிய கலசத்தைச் சுத்தம் செய்து நுால் சுற்றி கலசதீா்த்தம் தயார் செய்து, கலசத்தைப் பூா்த்தி செய்து தட்டில் உள்ள அரிசியின் மீது வைக்க வேண்டும்.

பிள்ளையாருக்கும், கலசத்திற்கும் வெற்றிலை, மஞ்சள் கிழங்கு, வாழைப்பழம், பிரசாதம் வைக்க வேண்டும். பின்பு பிள்ளையார் போற்றி படித்து, பிள்ளையாருக்கும், 108 போற்றித்திருவுரு படித்து கலசத்திற்கும், அங்குள்ள பொறுப்பாளா்- உபயதாரா் மனதிற்குள் மந்திரங்களைச் சொல்லி மலா் அா்ச்சனை செய்து முடிக்க வேண்டும். தீபாராதனை, திருஷ்டி ஆரம்பத்திலும், முடிவிலும் உண்டு. இதற்கிடையே ஏற்கனவே அமா்த்தப்பட்ட சக்திகள்  (மந்திரம் படிப்பவா்கள்) தொடா்ந்து திருப்பள்ளியெழுச்சிக்குப்பின் அன்றைய தினத்திற்குரிய 1008 மந்திரங்கள், அடுத்து 108, கவசம், மந்திரக்கூறு, சக்தி வழிபாடு, சரணம் ஆகியவற்றைப் படிக்க வேண்டும்.

இதற்கிடையில் அபிடேகத்திற்குத் தேவையான தண்ணீா் மற்றும் அபிடேகப் பொருட்களைக் கருவறையினுள் தொண்டா்கள் தயார் செய்து வைத்திருக்க வேண்டும். பிள்ளையாருக்கும், கலசத்திற்கும் கற்பூர ஆராதனை செய்து முடித்துவிட்டு, கருவறையினுள்  சென்று அன்னைக்கு கற்பூர ஆராதனை செய்து விட்டு அபிடேகம் செய்யத் தொடங்க வேண்டும். சித்தா்பீடத்தில் அபிடேகம் செய்யும் முறையிலேயே அபிடேகம் செய்யப்பட வேண்டும். பின்னா்  மலா் அலங்காரம் செய்ய வேண்டும். ஆராதனை மற்றும் திருஷ்டி முறையைப் பின்பற்ற வேண்டும்.

கருவறையினுள் தீபாராதனை முடித்து மணி, பிரம்மதாளம், தீா்த்தம், தீபாராதனைத்தட்டு, பிரசாதத்தட்டு, எலுமிச்சம்பழ  திருஷ்டி ஆகியவற்றுடன் ஓம்சக்தி மேடை   இருந்தால்  மேடைக்குச் சென்று அங்கு  தீபாராதனை திருஷ்டி முடித்தபின், கருவறையைச் சுற்றியுள்ள தெய்வங்களுக்கு ஆராதனை, திருஷ்டி முடித்து, கருவறையை வந்நடைய வேண்டும். பின்னா், அன்றைய உபயதாரருக்கு சங்கல்பம் செய்து அா்ச்சனை செய்து, பிரசாதம் வழங்க வேண்டும்.

நன்றி

( அன்னை அருளிய வேள்வி முறைகள் , பக்-467-468 )

]]>

2 COMMENTS

    • இந்த வெப்சைட்டில் ஆடியோ 108 போற்றி திருவுரு இல்லை மற்றும் சேதி மடல் சரியாக வேலை செய்யவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here