வேள்விகள் என்றால் எம் மனதில் நிழற்பட மாக ஓடுவது-யாகசாலைகள். அன்று அரசர்களாலும் மகா பிரபுக்களாலும் மிகப் பொய அளவில் ஏராளமான அந்தணப் பெருமக்கள் முன்னிலையில் மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப் பட்ட யாகசாலைகளில் சமஸ்கிருத மந்திர ஒலி கள் எங்கெங்கும் வியாபிக்க நாதஸ்வர மேளங்கள் முழங்க

இராஜ சூய யாகம் உட்பட மிகப் பெரிய யாகங்கள் எல்லாம் நடத்தப்பட்டது நினைவுக்கு வரும். ஆனால்,மேல்மருவத்தூரில் இன்று வெள்ளிக் கிழமை நடைபெறவிருக்கும் கலச விளக்கு, வேள்விப் பூசைகள் ஏனையயாக விதிகளுக்கு அப்பாற்பட்டவை! இவ் வேள்விகள் சாதி, சமய, மொழி, இனம் என்ற வேறுபாடு மட்டுமல்ல ஆகம விதிகளுக்குக் கூட அப்பாற்பட்டதாகும். அந்தணப் பெருமக்கள் இல்லாமல் யாகமா? தர்ப்பை இல்லாமல் யாகமா? இத்தகைய யாகங்களை இறைவன் ஏற்றுக்கொள்வானா? அதற்கு பலன் உண்டா?- எத்தனை எத்தனை கேள்விகள் நம் மனதில் எழுகின்றன! இந்த அற்புதமான வேள்வியைப் பற்றி நாம் அறிய வேண்டாமா?

இன்று எமக்குத் தேவை ஆன்மிகம் வேள்விப் பூசைகளும். மனிதனை ஆட்டிப் படைக்கும் இந்த ஆன்மாவுக்கு அமைதியைக் கொடுக்கிறது தெய்வீகமான இந்த வேள்விகள். எமது புறத் தோற்றத்தை ஆகம விதிகள் கட்டுப்படுத்துகின்றன. ஆனால் அகத்தில் கட்டுப்பாடு வேண்டுமல்லவா? வழிபாடு என்பது ஒழுங்காக அமைந்தால் மனித குலம் மேன்மையடையும். அது வழி தவறும் போதுதான் அழிவுகளும் ஏற்படுகின்றன. எமது மனதை ஆறுதல்படுத்த உதவும் அற்புதமான இந்த வேள்வியை யார் நடத்துகிறார்கள்? முலகர்த்தா யார்? புட்டபர்த்தி என்றால் பகவான் பாபா போல, மேல் மருவத்தூர் என்றால் ஆதிபராசக்தி சித்தர்பீடம் பங்காரு அடிகளாரும்தான் ஞாபகத்துக்கு வருவார்கள்.

21 சித்தர்களின் ஜீவ சமாதி உள்ள புனித தலம்! சித்தர்களின் நடமாட்டம் அதி கமாக உள்ள தலம். மச்ச புராணத்தில் 108 சக்தி பீடங்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அதில் சித்தவனம் என்ற பீடத்தில் மாதாவாக நான் இருக்கிறேன் என்று அம்பாள் சொன்னதாக கூறப்பட்டிருக்கிறது. அந்த சித்தவனம் தான் இன்றைய மருவூர்! மருவூர் ஆலயம் ஆகம விதிகளுக்கு அப்பாற் பட்டது. கொடி மரம், பலிபீடம், வாகனங்கள் எதுவும் இல்லை. இங்கு நடக்கும் எந்த விழாவும் ஆகம விதிகளுக்கு உட்பட்டவையுமல்ல.

அன்னை ஆதிபராசக்தி என்ன கூறுகிறாளோ அதன்படி நடத்தப்படும் விழாக்கள் தான்! அருள் திரு அடிகளாரை தன்வயப்படுத்தி அருள்வாக்கு முலம் அன்னை வெளிப்படுத்தி வரும் விழா செயற்பாடுகளை மிகக் கவனமாக முன்னெடுத்து நடத்தி வைக்கிறார் எங்கள் அருள்திரு அடிகளார்! சித்தருக்கு உகந்த மாதம் சித்திரை மாதம். அதனால் தான் சித்திரை மாதமென பெயர் பெற்றதோ தெரியவில்லை. இந்த சித்திரை மாதம் மருவத்தூருக்கு மிக அற்புதமான மாதம்! மிகப் பெரிய யாகம் நடைபெறும் ஒரு மாதம்.

என்ன வேறுபாடு இந்த வேள்விகளில்? வேள்விப் பூசை முறைகளை அடிகளார் முலம் சொல்லிச் சொல்லி பயிற்சி கொடுக்கிறாளே அன்னை! செவ்வாடை தொண்டர்களை வைத்து யாக்குண்டம் அமைக்கும் முறை, சக்கரங்கள் வரைகிற முறை, யாக சாலையை அளவெடுத்து அமைக் கும் முறை கலசங்களுக்கு நூல் சுற்றும் முறை எல்லாம் அருள் வாக்கில் சொல்லிக் கொடுத்தவையே அல்லாமல் எந்த புத்தகங்களிலும் இருந்து படிப்பித்தவையல்ல. வேத வேள்விகள்- வேதம் படித்த அந்தணப் பெருமக்களால் நடத்தப்படும். ரிக் வேத மந்திரங்கள் முலம் வேள்வி நடத்தப்படும். ஆனால், சித்தர் பீடத்தில் பயிற்சி பெற்ற தொண்டர்களால் மட்டும் நடத்தப்படுகிறது.

அன்னையின் 108, 1008 மந்திரங்களின் துணையால் நடத்தப்படுகிறது. இந்த மந்திரங்கள் தமிழில் அன்னையால் சொல்லச் சொல்ல எழுதப்பட்வை. மந்திரங்களின் இரு பக்கம் `ஓம்’ ஒலிக்கிறது. `ஓம்’ என் பது மந்திரங்களின் காப்பு. எல்லா மந்திரங்களிலும் ஓம் வடிவத்தில் இருக்கும் அன்னை ஒலி வடிவில் கவசமாக ஒலிக்கிறாள். கருவறை வாசல் வரை செல்லும் பெண்களை `நில் அங்கே’ என்று சொல்வதை மாற்றி `கருவ றைக்குள் செல்’ என மாற்றியவள் மருவூர் அன்னை அல்லாமல் வேறு யார்? வேத வேள்விகளில் தர்ப்பை ?க்கிய இடம் பெறுகிறது. ஆனால்,சித்தர் பீடத்தில் தர்ப்பை இடம்பெறுவதில்லை.

சித்தர் பீட வேள்விகளில் அளிக்கப்படும் ஆவுதிகள் அனைத்தும் அன்னை ஆதிபராசக்தியின் மந்திரங்களை சொல்லி நேரடி யாக அளிக்கப்படுகிறது. அன்னையின் வழிகாட்டலின் படி வேள்விகள் ஆரம்பமாகும் முன்பு பூமி பூஜை, சுற்று பூஜை, செய்து குருபூஜை, விநாயகர் பூஜை, பஞ்சபூத வழிபாடு 108 போற்றி சங்கல்பம் கூறி வேள்வி தொடங்கும். இந்த வேள்விகளை இப்படித்தான் செய்ய வேண்டும் என்பது பராசக்தியின் வாக்கு.

சக்கரங்கள் வரைவது, கலசங்களை வைப்பது எல்லாமே அவள் கூறுவது போலவே செய்யப்படுகிறது. ஒரு நூலிழை பிழைத்தாலும் அது அன்னைக்கு தெரிந்து அடிகளாராலும் சாரி செய்யப்படும். சதுரம், சாய் சதுரம், வட்டம், அறுகோணம், ஐங்கோணம், முக்கோணம் சூரிய யாக குண்டங்கள், தாமரை வடிவம், பஞ்சபூச வடிவம், நட்சத்திர, சூல வடிவங்கள், ஒற்றை நாகம், இரட்டை நாகமென அற்புதமான யாக குண்டங்கள் கத்தி முனையில் நடப்பது போல மிகத் துல்லியமான முறையில் அமைக்கப்படுகிறது. எங்கெங்கு எந்தெந்த குண்டங்கள் அமைய வேண்டும் என்பது கூட அன்னை சொல்லிச் சொல்லி அமைத்ததே! இந்த வேள்விப் பூஜைகளால் தெய்வ சக்திகள் திருப்தியடைகின்றன. அசுர சக்திகள், தீய சக்திகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. கோள்களின் சுழற்சியால் ஏற்படும் தீய விளைவுகளின் பாதிப்பை தடுக்கிறது.

நாட்டின் நலன் பேணப் படுகிறது. குடும்ப நலம் காக்கப்படுகிறது. இந்த ஆண்டில் சித்திரைப் பௌர்ணமி விழா மிகச் சிறப்பான பலனை இலங்கை மக்களுக்கு தரும் என எதிர்பார்க்கலாம். இம்முறை திரிசூல யாக குண்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எமது நாட்டு நலம் வேண்டி, திரிசூல யாகம் எம் நாட்டு சக்திகளால் செய்யப்படுகிறது. அது மட்டுமல்ல, அன்னை ஆதிபராசக்தியின் நல்ல செய்தி ஒன்றும் எமக்கு கிடைத்துள்ளது. அண்டமெல்லாம் அரசாட்சி செய்யும் அற்புத தெய்வம்-எங்கள் அன்னை ஆதிபரா சக்தி அடிகளாரை அருள் நிலைக்கு கொண்டு வந்து கூறிய மகிழ்ச்சியான செய்திகளை மருவூர் மண்ணில் அன்னையின் அருள் வாக்காக அடிகளார் முலம் சில இலங்கை சக்திகள் கேட்டு பூரித்துப் போனார்கள். (அவர்களில் நானும் ஒருத்தி என்பதில் பெருமைப்படுகிறேன்) எமது நாட்டில் சாந்தி சமாதானம் நிலவும் நாள் வெகுதூரத்தில் இல்லை. இலங்கை வாழ் மக்கள் சகோதர உணர் வோடு சாதி, மத, மொழி வேறுபாடின்றிஒற்றுமையுடன் வாழ இந்த யாகம் வழி சமைக்கும்.

அழகாபுரி என ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த அழகிய இலங்கை திருநாட்டை அன்னை ஆதிபராசக்தி தன் கரங்களில் மீண்டும் ஏற்றுக் கொள்ளும் அற்புதத் திருநாள் விரைவில் வர இருக்கிறது என்பது ஒரு நல்ல செய்தி. ஆம்! அன்னை ஆதிபராசக்தி அடிகளார் முலமாக அருள்வாக்கில் கூறியிருக்கும் ஓர் இனிய செய்தி என்ன தெரியுமா? இலங்கையின் தலைநகரில் சக்தி பீடம் அமையப் போகிறது. அன்னை ஆதிபராசக்தியே முன்னின்று கும்பாபிஷேகம் நடத்தி அந்தப் பீடத்தில் வந்து அமர உள்ளாள். அடிகளார் முலம் அருள்வாக்கில் கூறிய இந்த அற்புத நிகழ்வு என்று நடக்கும்? எங்களுக்கும் ஒரு சக்தி பீடம் விரைவில் அமையத்தான் போகிறது. எங்கள் அன்னையின் பாதம் இலங்கை மண்ணில் பதிந்து எமது நாடு புனிதமடையத்தான் போகிறது. எமது நாட்டின் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழத்தான் போகிறார்கள்.

எமது நாடு மீண்டும் வளம் கொழிக்கும் நாடாக மாறத்தான் போகிறது. இது அம்மாவின் அருள் வாக்கு. திரிசூல யாகம் அதற்கு வழிசமைக்கும் என்பதும் செவ்வாடைச் சக்திகளின் நம்பிக்கை! அன்னையின் பாதம் படும் நாள் விரைவில் வர வேண்டும் என எல்லாம் வல்ல எம் பெருமாட்டியை மனதார தொழுவோமாக! சீரும் பேறும் தரும் பௌர்ணமி மருவூரின் சித்திரைப் பௌர் ணமி! இந்த சித்திரை பௌர்ணமி எமது நாட்டுக்கு சீரும் பேறும் நிச்சயமாகத் தரும்!

நன்றி

வீரகேசரி

08-05-09

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here