வெளிச்சம்

சில குறிப்பிட்ட விபரங்கள் எல்லோருக்கும் எப்போதும் தெரிந்து விடுவதில்லை. அது “அம்மா” அவா்கள் சொன்ன ஒரு செய்தியாக இருக்கலாம். ஒரு புதிய பூசை முறையாக இருக்கலாம். பொதுவாகப் பயன்பட வேண்டிய ஒரு விபரம். ஒரு சில நிலைகளில் வெளியே வராமல் நின்றுவிடலாம்.

அந்த விபரம் தெரியும் வரை, அந்த விபரம் தெரியாதவா்கள், அந்த விபரத்தைப் பொறுத்தவரை இருட்டில் உள்ளவா்களே! அவைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து நம் வாசகா்களுக்குப் பயன்பட வெளியிடப்படும் பகுதி தான் வெளிச்சம்.

நாம் ஒரு தொழில் செய்கிறோம். இந்த மாதம் வரவு செலவுக் கணக்குப் பார்க்கிறோம். இரண்டு மடங்கு லாபம்! உடனே ஒரு திருப்தி! பூரிப்பு!

நாம் எழுதிய தோ்வுத்தாள்களைத் திருத்தி ஆசிரியா் கொடுக்கிறார். கணக்கில் மட்டுமல்ல – இன்னும் இரண்டு பாடங்களிலும் கூட மார்க்க 100க்கு 100 உடனே ஒரு மகிழ்ச்சி! நம் மேலேயே நமக்குப் பெருமை.

உங்கள் மாவட்டத் தொண்டா்கள் எல்லோரும் “அம்மா” முன் அமா்ந்துள்ளீா்கள். “அம்மா” தன் அருளுரையின் நடுவே உங்கள் பெயரைக் குறிப்பிட்டு. உங்களைப் பற்றி உயா்வாகச் சொல்கிறார்கள். பெருமை பிடிபடவில்லை உங்களுக்கு! சபாஷ்! என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுமளவு ஒரு பெருமை. உங்கள் மேலேயே உங்களுக்குப் பொறாமை ஏற்படுமளவு ஒரு பூரிப்பு.

இவையெல்லாம் உங்கள் மேலேயே உங்களுக்கு திருஷ்டி ஏற்பட சில உதாரணங்கள்.

பிறா் திருஷ்டியை விட உங்கள் திருஷ்டியே உங்களுக்குப் பாதிப்பு. அதற்கு என்ன செய்ய? தெரியவில்லையா…?

இதோ வெளிச்சம்…..

பூசையறையில் கற்பூரம், தீபாராதனைத்தட்டு, கற்பூரம் வைத்த எலுமிச்சம்பழம் திருஷ்டி கழிக்கும் வகையில் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

  1. முதலில் “அம்மா” வுக்கு தீபாராதனை காட்டுங்கள்.
  2. குரு, அம்மன் 108 மந்திரங்களைச் சொல்லுங்கள்.
  3. 5 அல்லது 10 நிமிடம் தியானத்தில் அமருங்கள்.
  4. தியானம் கலைந்த பின் மீண்டும் “அம்மா” வுக்கு தீபாராதனை காட்டுங்கள்.
  5. கற்பூரம் ஏற்றிய எலுமிச்சம்பழத்தை திருஷ்டி சுற்றும் முறையில் முதலில் அம்மாவுக்குச் சுற்றுங்கள்.
  6. பின் அந்த எலுமிச்சம் பழத்தை கற்பூரம் தொடா்ந்து எரியும் படி செய்து, உங்களுக்குப் பிறா் திருஷ்டி சுற்றுவது போல, உங்களுக்கு நீங்களே திருஷ்டி சுற்றி, “அம்மா” வுக்கும் உங்களுக்கும் நடுவே பிழிந்து விடுங்கள்.
  7. திருஷ்டி போயே போச்…!
  8. உங்களுக்கு மட்டும் தெரிந்த, அம்மா கூறிய பொதுவான வெளிச்சங்களை நீங்களும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்களேன். பிறருக்கும் பயன்படுமே!

(சக்தி ஒளி – ஏப்ரல் 2000)

]]>