அன்றுதான் நான் முதல் முதல் மேல்மருவத்தூர் வந்தேன். ஓம் சக்தி மேடையருகே நின்றபடி இருந்தேன்.

அம்மா வர்றாங்க! அம்மா வா்றாங்க! எனச் சொல்லியபடி அங்கிருந்த காவலா்களும், தொண்டா்களும், பக்தா்களும் பரபரப்பானார்கள்.

நானும் ஓம்சக்தி மேடையருகே ஓரமாக நின்றபடி அம்மா வருகையை எதிர்பார்த்திருந்தேன்.

அம்மா காரிலிருந்து இறங்கி ஓம்சக்தி மேடையைச் சுற்றி வந்து குனிந்து தொட்டுக் கும்பிட்டுவிட்டுப் புறப்பட்டார்கள். அவ்வாறு கும்பிடும் வேளையில் அம்மாவின் கைகளிலிருந்து புறப்பட்ட ஒரு ஜோதி தரையில் பட்டுத் தெறிக்கிறது. அந்தக் காட்சியைக் கூட்டத்தோடு கூட்டமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த எனக்கு வியப்பு மேலிட்டது.

“எனக்கு உருவம் கிடையாது. அணு, ஜோதி, குழந்தை, பாம்பு, சித்தா், விளக்கின் சுடா் என்பன என் தோற்றங்கள்” என்ற அம்மாவின் அருள்வாக்கு நினைவுக்கு வருகிறது.

அம்மாவின் கைகளிலிருந்து புறப்பட்ட அந்த ஜோதிக் காட்சி இன்னும் என் கண்களில் நிற்கிறது. அதை நினைக்கும் போது மேனி சிலிர்க்கிறது.

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. ஜி. குப்புசாமி, சங்கராபுரம்

அவதார புருஷா் அடிகளார், பக்கம் 64

]]>

1 COMMENT

 1. ஓம் சக்தி ஆதி பரா சக்தி அம்மாவின் அனுக் கிரகததால் எனது வாழ்க்கையில் நடந்த அதிசயங்கள், மற்ற சக்திகளும் தெரிந்து அம்மாவின் அருள் பெற வேண்டி இதை “சக்தி ஒளிக்கு” சமர்ப்பிக்கிறேன்.
  என்னுடன் பிறந்தவர்கள் 4 பேர், அவர்களுக்கு திருமணம் முடிந்து எனக்கு திருமணத்திற்கு பார்த்துக் கொண்டிருந்த நேரம், எந்த இடமும் சரியான முறையில் அமையாமல் எனது வீட்டில் அத்தனை பெரும் மிகவும் வருத்தத்துடன் இருந்த நேரம், “இரண்டாம் தாரமாக தான் நீ போவாய்”, “இந்த வயதிற்கு ஏதோ வருவதை திருமணம் பண்ணிக்கோ” என்பது போன்ற வார்த்தைகளை எனது வீட்டில் அல்லாது மற்றவர்களின் கேலி பேச்சுகளுடன் மிகவும் வேதனை பட்ட நேரம் அது. திருமணம் வேண்டாம் என்று இருந்த எனக்கு இந்த வார்த்தைகள் மிகவும் பாதித்தது. திருமணத்தின் அவசியம் புரிந்த பின் எதுவும் சரியான முறையில் அமையவில்லை என மிகவும் வருந்தினேன்,
  மூன்று வருடங்களுக்கு முன் எனது தாய் உடல் நிலை சரி இல்லாமல் இருந்தார்கள். எங்களால் முடிந்த அத்தனை மருத்துவங்களும் பார்த்தும் சரியாகவில்லை. ஏதோ எதேட்சையாக அந்த சமயம் மேல் மருவத்தூர் அம்மன் கோவிலுக்கு மாலை போட்டு போவதாக எனக்கு மிகவும் தெரிந்த ஒருவர் மூலம் கேள்விப்பட்டு நானும் வருவதாக சொன்னேன். அது எனது முதல் அனுபவம். சரியான விரத முறைகள் கூட தெரியாமல் முதல் முறையாக என் அம்மாவின் உடல் நிலையயை மனதில் கொண்டு “அம்மா நீ தான் எனது அம்மாவிற்கு மருத்துவம் பார்க்க வேண்டும்” என வேண்டி கொண்டு மேல் மருவத்தூர் சென்று ஆதி பரா சக்தி மேல் எனது பாரத்தை இறக்கி வைத்து விட்டு வந்தேன். பிறகு அதை மறந்து அன்றாட வாழ்வில் சென்று கொண்டு இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக எனது அம்மாவ்ரின் உடல் நிலை சரியாக ஆரம்பித்தது. ஆனாலும் சிறுது கஷ்டம் பட்டு தான் இருந்தார்கள். ஒரு நாள் எனது அண்ணாவின் நண்பர் ஒருவர் மூலம் ஜோதிடர் ஒருவர் எனது அம்மாவிருக்கு ஜாதகம் பார்த்து, தீய சத்தியானது எங்கள் வீட்டில் இருக்கப் பட்டிருப்பதாகவும், பூஜை செய்து அதனை எடுத்து விடலாம் என்றும் சொல்லி பூஜையையும் செய்தார். அதற்கு பிறகு அத்தனை ஸ்கேன் எடுத்தும் எனது அம்மாவின் உடம்பில் என்ன பிரச்சனை என தெரியாமல் இருந்த போது அவர் செய்த பூஜை அம்மாவின் உடல் நிலையில் நல்ல மாறுதலை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க ஆரம்பித்தது. அம்மா எழுந்து காபி போடா முடியுமா என நினைத்த எங்களுக்கு ஆறுதல் தரும்படி கொஞ்சம் கொஞ்சமாக சரியாக ஆரம்பித்தது. இன்று நல்ல முறையில் உள்ளார் அம்மாவின் அருள் பார்வையால். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஜோதிடர் பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் சாயலில் இருந்தது தான்.
  இவை அனைத்தும் ஒரு வருடத்தில் நடந்து அடுத்த முறை எனக்கு மாலை போடும் மாதம் வரும் போது தான் என்னை உணர வைத்து, இம்முறை என் அம்பாளுக்கு நன்றி தெரிவிக்க மாலை போட்டு வந்தேன்
  அதனால் எனது திருமணம் நல்ல படியாக நடக்க வேண்டி ஆதி பரா சக்தி அம்மாவிடம் பிர்ரர்தனை பண்ணினேன். எனது அக்காவும் என்னை மேல் மருவத்தூர் போய் வர சொல்லிக் கொண்டே இருந்தாள். ஜோதிடர் சொன்ன படி அனைத்து பரிகாரங்களும் செய்ய ஆரம்பித்து ஆனால் அதற்கு முன்னமே “அம்மா ஜோதிடர் சொன்ன எல்லா பரிகாரங்களும் செய்கிறோம். அதன் பின் உன்னை பார்க்க மேல் மருவத்தூர் வருவேன். உன்னை பார்த்து விட்டு நான் ஏன் வீடு திரும்பும் போது எனக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருக்க வேண்டும், உன்னை தான் நம்பி இருக்கிறேன், நிச்சயம் சக்தி ஒளி மூலம் மற்றவர்களும் தெரிந்து அம்மாவின் அருள் பெற இதனை தெரிவிப்பேன் ” என்று வேண்டிக கொண்டேன். ஜோதிடர் சொன்ன பரிகாரங்கள் செய்தோம். அவர் மூலம் சொல்லப்பட்ட கோவில்கள் எல்லாம் போனோம். மேல் மருவத்தூர் போகவும் தேதி முடிவு செய்து புக் செய்தோம். அனைத்தும் முடியும் தருவாயில் எனது நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவரின் தீரிய முயற்சியால் ஒரு இடம் வந்தது , ஜாதகமும் பொருந்தி இருந்தது. அவர்கள் நாங்கள் மேல் மருவத்தூர் போக முடிவு செய்த நாளில் ஞாயிற்று கிழமை பார்க்க வருவதாக சொல்ல, நாங்கள் மேல் மருவத்தூர் போக இருப்பதால் திங்கள் கிழமை பார்க்கலாம் என்று சொல்லி விட்டோம்.
  அங்க பிரதட்சணம், ஓம் சக்தி தரிசனம், அடிகளார் அவரிகளின் தரிசனம் முடிந்து திங்கட் கிழமை காலை மணி 7 அளவிற்கு வீடு திரும்பினோம், 9 மணிக்கு மேல் மாப்பிள்ளை வீட்டார் வருவதாக சொன்ன சாய்பாபா கோவிலுக்கு சென்று வரன் பார்த்தோம். நல்ல படியாக பேச்சு வார்த்தைகள் நடந்தது.
  மாப்பிள்ளை வீட்டில் எங்களை மிகவும் பிடித்தது போனதால் மேற்கொண்டு வீட்டிருக்கு வந்து பார்க்க அப்பொழுது முடிவு எடுக்கப் பட்டது அடுத்து அடுத்து அனைத்தும் நல்ல படியாக நடந்தது. அம்மாவின் அருளால் எனது வேண்டுதல் படி அம்பாளை தரிசித்து எனது வீட்டிற்கு வரும் முன்னமே எனது வாழ்க்கையை எனக்கு காண்பித்து, திருமணம் மிகவும் நல்ல படியாக நடந்தது.
  என்னை குழந்தையாக பாவித்து அன்பு செய்யும் கணவரையும், நல்ல குடும்பத்தையும் தந்தது, எனக்கு வாழ்க்கை பிச்சை போட்டது என் ஓம் சக்தி ஆதி பரா சக்தியின் கருணை.
  என்னுடன் எனது அம்பாள் என்றும் இருப்பது என் உயிர் அறிந்தது. நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here