எங்கள் குடும்பத்தில் எப்போதும் பணம் பற்றாக்குறையாகவே இருக்கும். பிள்ளைகளுக்கும், பள்ளிக் கட்டணம் கூட வட்டிக்கு வாங்கிக் கட்டுகிற நிலை! போனஸ், கடன் என என் கணவருக்கு எவ்வளவு வந்தாலும் வட்டி கட்டவே சரியாக இருக்கும்.

சுசீலா என்ற சக்திதான் எனக்கு ஒரு வழி சொல்லிக் கொடுத்தார்.

“அம்மாவின் திருவடிப்படம் வைத்து, அந்தப் பாதத்திற்குக் காசு வைத்துத் தியானம் செய்” என்று சொல்லித் தந்தார்.

என்னால் அந்தப் பாதங்கட்கு காசு வைத்துப் பூசை செய்ய முடியவில்லை. காசு இல்லாத சூழ்நிலை.

திருவடிப்படம் ஒன்று சின்னதாக லேமினேஷன் செய்தது. அதை வாங்கி அப்படியே பூசை அறையில் வைத்துச் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பால், தயிர், சந்தனம், பன்னீா் வைத்து அபிடேகம் செய்வேன்.

என்னால் முடிந்த பத்துப் பைசா நாணயங்கள் இரண்டை வைத்துக் குரு 108 போற்றி சொல்லிப் பூக்களால் அர்ச்சனை செய்வேன். அப்போது என்னிடம் அம்மாவின் திருவடிப் போற்றி இல்லை.

அந்தக் காசை அம்மாவின் பிறந்த நாளன்று காணிக்கையாகச் செலுத்துவேன். அப்போதெல்லாம் எங்களால் அம்மாவிற்குப் பாதபூஜை செய்ய முடியவில்லையே என்று கவலையாக இருக்கும்.

அப்போது எங்கள் வீட்டில் எல்லா விசேஷங்களுக்கும் அம்மாவிடம் வந்து பாதபூஜை செய்ய முடியவில்லையே என்று கவலையாக இருக்கும்.

இப்போது எங்கள் வீட்டில் எல்லா விசேஷங்களுக்கும் அம்மாவிடம் வந்து பாதபூஜை செய்யும் அளவுக்கு எங்கள் நிலையை அம்மா உயா்ந்த்தியுள்ளார்கள்.

இந்த அளவு நாங்கள் உயரக் காரணமாய் இருந்தது அம்மாவின் திருவடிப் பூஜை!

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. மீனாட்சி பாலசுப்ரமணியன், விழுப்புரம்

அவதார புருஷா் அடிகளார், பாகம் 13 (பக்கம் 56)

 ]]>

1 COMMENT

  1. வாசித்தேன், அற்புதமான விடயம் . நன்றி சக்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here