அன்னையிடமே ஆகுதிகள் நமது வேள்வி, அக்னியை வேண்டி வணங்கும் அக்கினி வேள்வி அல்ல. கதிரவனுக்கும், சந்திரனுக்கும், அக்கினிக்கும் ஒளியும், வெப்பமும் கொடுத்தவள் ஆதிபராசக்தி. “ஓம் அனலாக ஆனாய் போறி ஓம்”  என்ற மந்திர வரி இதை உணர்த்தும். அந்த அன்னையை அக்கினி வடிவில் யாக குண்டத்தில் ஆவாகனம் செய்து ஆகுதிப் பொருட்களை நேரில் அன்னையிடமே அர்ப்பணித்து வணங்கும் முறையை உடையது நமது ஆதிபராசக்தி வேள்வி. யாக குண்டத்தில் ஆதிபராசக்தி இங்கு யாக குண்டத்தில் நிற்பது அக்னி தேவன் அல்ல. அனலாக, அக்கினியாக இருக்கும் ஆதிபராசக்தி அன்னை தான் யாக குண்டத்திலே வரவழைக்கப்படுகிறாள். அன்னை பிரபஞ்ச நாயகி. எங்கும் நீக்கமற நிறைந்தவள். யாக குண்டம் பிரபஞ்சத்துக்கு அடையாளம். எனவே மந்திரங்களைச் சொல்லி ஆவாகனம் செய்கிறபோது அன்னை யாககுண்டத்தில் எழுந்தருளி நிற்கிறாள். அன்னையின் திருவுருவத்தை அக்னி ஜ்வாலையிலே, யாக குண்டத்தில், பல தொண்டர்கள் கண்டு தரிசித்துள்ளார்கள் என்பதுவே இதற்கு ஆதாரம். உலக நன்மைக்காக உலக நன்மைக்காகவும் இயற்கையை எப்போதும் மாறுபாடில்லாமல் இயல்பாக இயங்க வைப்பதற்காகவும் அருள்திரு அம்மா அவர்களால் இந்தச் சித்ரா பெளர்ணமி வேள்வி செய்யப்பட்டது. காவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாத போதும் மழை பொழிய வைத்துத் தஞ்சையைத் தழைய வைத்து நெல்லும், கரும்பும் விளைய வைத்ததும் ஒரு சித்திரைப் பெளர்ணமி வேள்வி தான் என்பதை தஞ்சை மாவட்ட பக்தர்கள் இன்றும் நன்றியோடு கூறுகின்றார்கள். தனி மனிதனுக்கு யாக குண்டத்தில் எழுகின்ற புகையை சுவாசிப்பவர்களுக்கு நுரையீரல் நோய்கள் குணமாகின்றன. வேள்வியில் படிக்கப்படும் மந்திரங்களின் ஒலி மகத்தானது. அந்த மந்திரங்கள் யாகம் செய்பவர்களின் உடலில் பட்டு ஆன்மிக அதிர்வுகளை மந்திர ஒலிகள் உண்டாக்குகின்றன. இதனால் தான் வேள்வி நடக்கும் பொழுது அமைதியாக அந்த மந்திர ஒலிகளைக் கேட்க வேண்டும் என்று அம்மா ஆரம்பகாலத்தில் சொல்லிக் கொடுத்தார்கள். “யாக சாலைக்கு வெளியே இருந்து மந்திர ஒலிகளைக் கேட்பவர்களுக்கும் நான் பலனைக் கொடுக்கிறேன்” என்று ஒருமுறை அன்னை அருள்வாக்கில் சொன்னது பக்தர்கள் மீது அன்னை கொண்ட கருணையைக் காட்டுகிறது. சாம்பலிலும் சக்தி யாக குண்ட சாம்பலை எடுத்துப் போய்க் கரைத்து வீட்டிலே உள்ளும், புறமும் தெளிப்பதும், குடும்பத்தினர் மீது தெளித்துக் கொள்வதும்ம் குடும்ப சுபிட்சத்தைக் கொடுக்கும். வீட்டில் உள்ள தீய சக்திகளை வெளியேற்றும். புனிதமான யாக குண்ட செங்கல்லை எடுத்துச் சென்று பூஜை அறையிலே வைத்து தீபாராதனை காட்டினால் சீக்கிரம் புதிய வீடு கட்டும் வாய்ப்பு ஏற்படும் என்று 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு வேள்வியின் போது அன்னை சொன்னாள். இன்று அது ஒரு அனுபவ உண்மையாகிப் போனது. தேவாமிர்தமும் தீர்த்தமும் கலச தீர்த்தத்தின் பயனோ அற்புதத்திலும் அற்புதம் ஆகும். அதனால் நோய் நீக்கம் பெற்றவர்கள் ஏராளம். வீட்டில் தெளித்துத் தீய சக்திகளை ஒட்டியவர்கள் ஏராளம். போய்விடும் என்று வைத்தியர்களால் கைவிடப்பட்ட பலர் கலசத் தீர்த்தம் பட்டதும் மீண்டு வந்த வியத்தகு நிகழ்ச்சிகளும் இங்கே உண்டு. ஒளியும் துடிப்பும் உயிர்ப்பு நூலில் உயிர்ப்பு நூல் வேள்வியின் இதயத் துடிப்பு நூல். வேள்வி நடைபெறும் போது உயிர்ப்பு நூலைத் தொட்ட சிலர் அந்த உயிர்ப்பு நூலில் இதயத் துடிப்பை உணர்ந்தார்கள். உயிர்ப்பு நூலின் வழியாக ஒளி சென்று கலசங்களையும் விளக்குகளையும் அடைவதைப் பார்த்து சிலர் அதிசயித்து நின்றார்கள். உயிர் வாழ அருளாணை ஆடவர்களும், திருமணமாகாத கன்னிப் பெண்களும் உயிர்ப்பு நூலை வலது மணிக்கட்டிலும், திருமணமான சுமங்கலிகள் உயிர்ப்பு நூலைத் தங்கள் திருமாங்கல்யத்திலும் கட்டிக் கொண்டதால் பெற்ற பாதுகாப்புப் பலன்கள் பலப்பல. உயிர் நீட்டும் உயிர்ப்பு நூல் ஒருவனுக்கு உயிர் இருக்கிறதா என்று பார்க்க மணிக்கட்டின் அருகில் அவனது நாடியைப் பார்க்கிறோம். ஒருவருக்கு நாடித் துடிப்பு உள்ளவரைக்கும் உடலில் உயிர் இருக்கும். அந்த நாடித் துடிப்பை நீட்டிப்பதற்காக அதாவது வாழ்நாளை நீட்டிப்பதற்காக உயிர்நாடி துடிக்கும் மணிக்கட்டில் உயிர்ப்பு நூலை அருள்திரு அம்மா அவர்கள் கட்டிக் கொள்ளச் சொன்னார்கள் என்றே நாம் நினைக்கிறோம். ஒரு பெண் சுமங்கலியா என்று தெரிந்து கொள்ள அவளது கழுத்தில் தாலி உள்ளதா என்று கழுத்தைப் பார்க்கிறார்கள். கணவன் உயிருள்ள வரை கழுத்தில் தாலியும் இருக்கும்.  அவன் உயிர் வாழும் காலத்தை நீட்டிக்க- அதாவது அவள் சுமங்கலியாக வாழும் காலத்தை நீட்டிக்க அவன் கட்டிய தாலியிலே உயிர்ப்பு நூலைக் கட்டி வேண்டுவது நம் பக்தர்கள் வழக்கம். யாகம் செய்யும் வாய்ப்பு பிரும்மாண்டமான வேள்விச் சாலையைத் தனிப்பட்டவர்கள் பெரும் பொருட்செலவில் அமைப்பதும் யாக குண்டங்கள் கட்டுவதும் இயலாத காரியம் ஆகும். ஆனால் அருள்திரு அம்மா அவர்கள் பார்த்தவர் வியக்கும் பிரும்மாண்டமான வேள்விச் சாலையை அமைத்து மக்களுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவிதமான யாக குண்டங்களை அமைத்தார்கள். பக்தர் பலர் அமர்ந்து யாகம் செய்யும் நல் வாய்ப்பு இந்த வேள்வி மூலம் கிடைத்தது. அர்ச்சனை செய்து அன்னையை அடைதல் nஇதைப்போலத்தான் வேள்வியில் வைக்கப்பட்ட கலசங்களும் விளக்குகளும் மகளிர் அர்ச்சனை செய்யும் வாய்ப்பும், அன்னையாக உருமாறியுள்ள கலச விளக்குகளைத் தங்கள் இல்லத்துக்கு எடுத்துச் சென்று வழிபாடு செய்யும் வாய்ப்பும், அதன் மூலம் கலச விளக்கு வடிவில் அன்னையைத் தங்கள் இல்லத்தில் எழுந்தருளச் செய்து வணங்கும் வாய்ப்பும் இந்த வேள்வியில் பக்தர்களுக்குக் கிடைத்தன. ஊழ்வினை குறைக்க உதவும் வேள்வி நூற்றுக்கணக்கான வேள்விக்குழுத் தொண்டர்கள் வேள்விப் பணி செய்வதற்கும், அதனால் அவர்களுடைய ஊழ்வினைத் துன்பம் தணிவதற்கும் இந்த வேள்வி காரணமாக அமைகிறது. அனைத்தும் பயன் அனைத்தும் சிறப்பு வாழைமரத்தின் வேர்க்கிழங்கிலிருந்து உச்சிக் குருத்து இலைவரை தண்டு, இலை, பட்டை, பூ, காய், பழம், பட்டைச்சாறு அனைத்தும் பயன்படுத்துவது போல வேள்வியில் பயன்படுத்தும் பயன்படுத்தும் கலசம், விளக்கு, உயிர்ப்புநூல், தீர்த்தம், யாகம் கட்ட உபயோகித்த செங்கல், கேட்கும் மந்திரங்கள் அனைத்துமே பக்தர்களுக்கும், தனிப்பட்ட மக்களுக்கும் தொண்டர்களுக்கும் பயன்பாடு உடையதாகவும்,  சிறப்புக்களைக் கொடுப்பதாகவும் இருக்கின்றன. ஓம் சக்தி நன்றி சக்தி ஒளி அக்டோபர் 2011 பக்கம் 44-46.    ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here