1.  அம்மன் திருவுருவப்படத்திற்கு கற்பூரம் ஏற்றுதல், எலுமிச்சம் பழம் பிழிந்து திருஷ்டி கழித்தல் வேண்டும்.

2.  முன்பு உள்ள அலங்காரத்தைக் களைதல் வேண்டும்.

3. தூய்மையான மஞ்சள் நீர் கொண்டு துணியினால் அன்னையின் படத்தை சுத்தம் செய்தல், வழிபாட்டுக்குரிய பொருட்கள் இடம், முதலியன சுத்தம் செய்தல் வேண்டும்.

4. அன்னையின் படத்திற்கு மஞ்சள், குங்குமப்பொட்டு ஒற்றைப் படையில் வைத்தல் வேண்டும்.

5. மலர் அலங்காரம் செய்தல் வேண்டும்.

6. அன்னையின் ஆசீர்வாதம் பெற்று காமாட்சி விளக்கினை ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு இருப்பின் ஏற்றி வைக்க வேண்டும்.

7. தேங்காய் உடைத்து அம்மனுக்குப் படையல் செய்தல். சுண்டல், சர்க்கரைப்பொங்கல், உப்பில்லாத வெண்பொங்கல், தயிர், நெய், வெல்லம், வாழைப்பழம், வேப்பிலையிட்டு அதற்குரிய பாத்திரத்திலேயே செய்து அதே பாத்திரத்தில் படைக்க வேண்டும். இயன்றவரை பொங்கல் மன்றத்திலேயே செய்தல் வேண்டும்.

8.  வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூ ,மஞ்சள், எலுமிச்சம்பழம் முதலியன படைத்தல் மன்றத்தின் பொருளாதார நிலையைப் பொறுத்தது.

9.  அன்னையின் அலங்காரப் படையல் முடிந்தவுடன் உபயதாரர் கற்பூர ஆரத்தி செய்து முதலில் அன்னையின் அலங்காரத்திற்கு மட்டும் எலுமிச்சம் பிழிந்து திருஷ்டி கழித்தல் வேண்டும்.

11. அன்னையின் படத்திற்கு முன்பு வலது பக்கத்தில் ஆண்களும், இடது பக்கத்தில் பெண்களும் 1008 போற்றிப் படிப்பதற்கு ஒற்றைப்படையில் வரிசையாக இடைவெளி விட்டு உட்காருதல் வேண்டுதல்.

12. உபயதாரர் கற்பூர ஆரத்தியுடன் கூட்டு வழிபாடு செய்பவர்கள் அனைவரையும் வலம் வந்து எலுமிச்சம்பழம் பிழிந்து திருஷ்டி கழித்தல் வேண்டும்.

12. வழிபாடு

1. மூலமந்திரம் படித்தல்

2.   அ. வேண்டுதற்கூறு படித்தல்

ஆ. அடிகளார் 108  போற்றி படித்தல்

3. அ.  1008 போற்றித் திருவுரு – வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் மட்டும்

ஆ. 1008 போற்றி மலர்கள் – செவ்வாய், புதன், வியாழன் மட்டும்

4. 108 போற்றித் திருவுரு ப்டித்தல்

5. சக்தி கவசம் படித்தல்

6. மந்திரக்கூறு படித்தல்

7. சக்தி வழிபாடு படித்தல்

8. சரணம் படித்தல்

9. வாழ்த்து படித்தல்

13. வேண்டுதற்கூறு முடியும் போதும், 1008 போற்றி முடியும் போதும் உபயதாரர் அன்னையின் படத்திற்குக் கற்பூர ஆராதனை செய்தல்.

14.108 போற்றித்திருவுரு படிக்கும்போது தொடர் கற்பூரம் எரிதல், குங்கும அர்ச்சனை செய்பவர்கள் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருத்தல் அவசியம்.

15.உபயதாரர் கற்பூர ஆராதனை செய்தல்.

16உபயதாரர் பொதுமக்களுக்குத் தீபாராதனை காட்டுதல்

17.வழிபாட்டில் கூட்டுவழிபாடு செய்தவர்கள் பாத பூசை செய்யும் முறைப்படி ஆண்களும் , பெண்களும் தனித்தனியாக செய்தல் வேண்டும்.

18. செவ்வாடைத் தொண்டர்கள் , வீபூதி, குங்குமம், பிரசாதம் விநியோகித்தல் வேண்டும்.

19. பெண் தொண்டர்கள் வேப்பிலையும் தீர்த்தமும் விநியோகித்தல் வேண்டும்.

20. உபயதாரருக்கு மாலை அணிவித்து மன்ற மரியாதை செய்து பிரசாதம் வழங்குதல் வேண்டும்.

21.  பொதுமக்களுக்குப் பிரசாதங்கள் வழங்குதல் வேண்டும்.

22. எல்லோரையும் நிற்க வைத்து எலுமிச்சம்பழம் பிழிந்துத் திருஷ்டி கழித்தல் வேண்டும்.

23. கலையுமுன்பு மன்றச் செய்திகள் இருப்பின் பக்தர்களுக்கு அறிவித்தல் வேண்டும்.

ஓம் சக்தி

நன்றி

சக்தி ஒளி 1986 மே

பக்கம் 8-10

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here