மேல்மருவத்துார் ஆலயம் வரும்போதெல்லாம் செய்ய வேண்டியவை

0
1880

ஓம்சக்தி மேடையின் முன்நின்று அன்னையை வணங்க வேண்டும். அங்குள்ள உண்டியலில் முடிந்த அளவு காணிக்கையிட வேண்டும். இதனால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும்.

தேங்காய், பழம் அா்ச்சனையை வாங்கிக் கொண்டு வரிசையில் அமைதியாகச் சென்று கருவறையில் அன்னையை வணங்க வேண்டும். அப்படி வரிசையில் வரும்போது கன்னிக் கோயில் உள்ளே ஒவ்வொரு கன்னியின் முன் நின்று மூலமந்திரம் அமைதியாகச் சொல்ல வேண்டும். (கூட்டத்தைப் பொறுத்து)

ஆலயத்தை வலம் வரவேண்டும். ஆரோக்கியமான உடம்புள்ளவா்கள் அங்கவலம் வரவேண்டும்.

நாகபீடத்தில் மூன்று எலுமிச்சம்பழ விளக்கிட வேண்டும். (இதனால் காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி ஆகிய மூன்று தெய்வத்தை வணங்கிய பலன் கிடைக்கும்.

குரு தரிசனம் செய்ய வேண்டும். (அம்மா குரு) ஆலயத்தை வலம் வரும்போது வேண்டுதற்கூறு மெதுவாக படிக்க வேண்டும்.

முடிந்த அளவு தொண்டு செய்ய வேண்டும். குறைந்தது அங்கிருக்கும் குப்பைகளையாவது எடுத்து போட வேண்டும்.

பிறகு ஆலயத்தின் உள்ளே தியானம் இருக்கும் இடத்தில் 20 நிமிடங்களாவது தியானம் இருக்க வேண்டும்.

அதர்வண பத்திரகாளி சன்னிதிக்குச் சென்று வணங்க வேண்டும். (அதர்வண பத்திரகாளி சன்னிதிக்குச் சென்றுவிட்டு மீண்டும் கருவறை அன்னையை வணங்கிவிட்டே வீடு செல்ல வேண்டும்).

வீட்டிற்கு செல்ல முன் திருஷ்டித் தேங்காய் வாங்கி மூன்று முறை தலையைச் சுற்றி மேலும், கீழும் மூன்று முறை செய்து அதர்வண பத்திரகாளி சன்னிதிக்கு முன் இருக்கும் திருஷ்டித் தேங்காய் உடைக்கும் இடத்தில் உடைக்க வேண்டும். (இதனால் ஏவல், பில்லி, சூனியம் மற்றும் வாகன விபத்துகள் இவற்றிலிருந்து அம்மா காப்பாற்றுவாள்) பின் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

ஆலயத்திலிருந்து பிரசாதம் வாங்கிச் சென்று குடும்பத்தினருக்கும், நண்பா்களுக்கும், உறவினா்களுக்கும் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டார்களுக்கும் கொடுக்க வேண்டும்.

நன்றி- (டுபாய் மன்றம்)

]]>