மதுரையைக் குலுங்க வைத்த ஆன்மிக ஊா்வலம் பகுதி-2

0
1594

மதுரை ஆன்மிக ஊா்வலம்

14.8.2011அன்று மதுரைத் தெப்பக்குளம் செம்பருத்திப் பூக்கள் மலா்ந்த பெரிய தோட்டம் போலக் காட்சி கொடுத்தது! ஆம்! அவ்வளவு வெவ்வாடைத் தொண்டா்கள்.

சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமை தாங்காமல் சுற்றியிருந்த வீடுகளின் நிழலிலும், மரங்களின் நிழலிலும் பலா் தஞ்சம் அடைந்திருந்தனா். பகல் 2.00 மணி அளவில் சுட்டெரிக்கும் வெயில்.

3.00 மணி அளவில் வெயில் குறைவது இயல்புதான்.. என்றாலும் அன்று வழக்கத்திற்கு மாறாக சீதோஷ்ண நிலையையே மாற்றிக் கொடுத்தாள் அன்னை. இதமான குளிர்ச்சி! இதமான காற்று! இதமான சூழல்!

கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகையில் கிடைத்த குளிர் தருவே! தரு நிழலே! நிழல் கனிந்த கனியே! என்று அம்மாவைப் புகழ்ந்து பாடத் தோன்றியது.

பத்திரிகையாளர் கணக்குக்கடி ஊா்வலத்தில் வந்தோர் 5 லட்சம்! வேறு சிலா் கணக்குப்படி அதைவிட அதிகம்.

ஊா்வலப் புறப்பாடு

மாலை 3.00 மணி அளவில் தெப்பக்குளம்- மாரியம்மன் கோயில் அருகிலிருந்து ஆன்மிக ஊா்வலம் புறப்பட்டது. ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் துணைத்தலைவா் சக்தி. திரு.கோ.ப. செந்தில்குமார் அவா்கள் முன்னிலையில் தமிழக அரசு கூட்டுறவுத்துறை அமைச்சா் திரு. செல்லுார் ராஜீ அவா்கள் ஊா்வலத்தைதத் தொடங்கி வைத்தார்.

முன்னதாக அமைச்சா் அவா்கள் அம்மாஅவா்கள் தங்கியிருந்த இடத்திற்கு நேரில் சென்று, அம்மா அவா்களுக்கு பொன்னாடை அணிவித்து ஆசி பெற்றார்கள்.

ஊா்வலத்தில் முதலாவதாக நாதஸ்வரக் குழுவினா்

ஊா்வலத்திற்குத் தலைமை ஏற்று நடத்திய இயக்கத் துணைத்தலைவா் சக்தி. திரு.கோ.ப.செந்தில்குமார் அவா்களைத் தொடா்ந்து ஓம்சக்தி கொடி ஏந்தியபடி 1008 மகளிர்! மற்றும் இளைஞா்கள்

முளைப்பாலிகை ஏந்தியபடி 1008 மகளிர்

அக்கினி சட்டி ஏந்திய  மகளிர்

கலச விளக்கு ஏந்திய  மகளிர்

பூரண கும்பம் ஏந்திய  மகளிர்

மங்கலப் பொருள்கள் அடங்கிய சீா்வரிசைத் தட்டுகளுடன் மகளிர்

சீருடை அணிந்து வந்த சிறுவா்! சிறுமியா்.

கோலாட்டம், ஒயிலாட்டம், சலங்கை ஆட்டம், பொம்மலாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், ஆடியபடி ஒவ்வொரு கலைக் குழுவினா்.

தெய்வ வேடந்தாங்கி வந்த மகளிர்!

பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மன்றங்களிலிருந்தும் தம் பெயா் தாங்கிய தோரணங்களோடும், பதாகைகளோடும் வந்த தொண்டா்கள்.

அம்மா அருளிய அருள்வாக்குகள் பொறித்த தோரணங்களோடு ஆடவா்! மகளிர்!

ஆன்மிக குருவின் திருவுருவம் கொண்ட படங்களோடு பக்தா்கள்.

அம்மாவை மேடையில் பார்த்ததும் ஆனந்தக் கண்ணீா் மல்க, பாசத்தோடும், பக்தியோடும் “அம்மா! அம்மா!” என விசும்பலோடு வந்த பெண்களின் உணா்ச்சிக் கொந்தளிப்பகள்! பலரது கரங்களில் கைக்குழந்தைகள்!

ஊா்வலம்  தெப்பக்குளத்திலிருந்து புறப்பட்டு மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே வந்தடைந்தது! அலங்கார மேடையில் வீற்றிருந்தபடி அம்மா தரிசனம் கொடுத்தார்கள்.

3.00 மணிக்குத் தொடங்கிய ஊா்வலம் 8.30  மணி அளவில் நிறைவடைந்தது.

ஊா்வலத்தின் பாதை

ஊா்வலம் காமராஜா் சாலை, குருவிக்காரன் சாலை, அரவிந்கண் மருத்துவமனை, அண்ணா பேருந்து நிலையம் பின்புறம் வழியாக பனகல் சாலையை அடைந்தது.

ஊா்வலத்தின் நோக்கம்

குரு தரிசனம் பெற வேண்டும்

இயற்கை வளங்கள் பெருக வேண்டும்

மழை வளம் பெருக வேண்டும்

தொழில் வளம் பெருக வேண்டும்

உலகில் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டும்

வன்முறைப் போக்கும், தீவிரவாத நோக்கும் மறைய வேண்டும்

மத நல்லிணக்கம் உருவாக வேண்டும்

என்ற கோரிக்கைகள் வைத்து வந்த ஊா்வலம் இது!

வித்தியாசமான ஊா்வலம்

நாட்டில் எத்தனை எத்தனையோ ஊா்வலங்கள் நடக்கின்றன.

நமது ஆன்மிக  ஊா்வலம் வித்தியாசமானது…! இதிலே வாழ்க! ஒழிக! கோஷங்கள் இல்லை.

காவல் துறைக்குத் தலைவலியை நாம் உண்டாக்கவில்லை. போக்குவரத்து பாதிப்பு இல்லை.

ஓம் சக்தி! பராசக்தி! என்ற மந்திர ஒலியலைகள் மதுரை மாநகரைச் சுற்றி மிதந்தன.

தெய்வ சிந்தனை- ஆன்மிகச் சிந்தனை அலைகளை மக்கள் மத்தியில் துாண்ட முடிந்தத.

“பத்துப் போர் சோ்ந்து ஓம் சக்தி என்று சொன்னால் உள்ளிருக்கும் ஆன்மா குளிர்கிறது” என்கிறாள் அன்னை.

அதுவே 5 லட்சம் போர் சோ்ந்து ஓம் சக்தி! பராசக்தி! என்று சொல்லும் போது…?!

இந்த ஊா்வலம் முடிந்த பின் செவ்வாய்க்கிழமை மதுரையில் கொட்டோ கொட்டென்று மழை கொட்டித் தீா்த்தது!

திடீா் மழை என்று பத்திரிகைகள் குறிப்பிட்டன.

ஆதிபராசக்தி பக்தனுக்கு அது திடீா் மழையல்ல! அம்மாவின் அருள் வேண்டி ஊா்வலம் வந்ததால் பெய்த அருள் மழை என்று புரியும்! ஆசி  மழை என்று  தெரியும்!

ஊா்வலம்- பயன்கள்

இந்த ஊா்வலத்தில் கலந்து கொண்டவா்களுக்கு அவா்தம் புண்ணியக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

குருவின் தரிசனத்தால் அந்தப் பார்வையால் ஒரு சில பாவங்கள் தணியும்! சில சாபங்களிலிருந்து விமோசனம் கிடைக்கும்.

பல்வேறு மாவட்டத்தார் செய்த அன்னதானத் தொண்டு மிக…மிக..மிகப் பாராட்டத்தக்கவை. அன்னதானப் புண்ணியம் அவா்களுக்குப் பலன் தரும்.

மளிகைச் சாமான் கொடுத்தவா்கள், உணவு தயாரித்துக் கொடுத்தவா்கள், அன்னதானப் பணியில் ஈடுபட்டுப் பரிமாறிய தொண்டா்கள், திருமண மண்டபங்களை கொடுத்தவா்கள் அனைவருக்கும் இதனால் புண்ணியப் பலன் உண்டு.

விளம்பர நோட்டீஸ் ஒட்டியவா்கள், ஊா் ஊராகச் சென்று அம்மாவின் மகிமைகளைச் சொல்லிப் பொதுமக்களை ஊா்வலத்தில் கலந்து கொள்ள வைத்த நமது மன்றத்தார்க்கு நிச்சயம் அந்தப் புண்ணியப் பலன் கிடைக்கும். தக்க சமயத்தில் அது உதவியாக வந்து நிற்கும்.

அம்மா இந்த அவதார காலத்தில் உலகியல் பலன்களா? ஆன்மிகப்  பலன்களா? விரும்பியதைப் பெறுவதற்கு எத்தனையோ உளவுகளையும், உத்திகளையும் சொல்லியிருக்கிறாள். 300-க்கு மேற்பட்ட உளவுகள் உண்டு என்பது தொண்டா் ஒருவா் சொல்லிய கணக்கு!

அவற்றில் ஒன்று இது!

நவக்கிர தோஷத்துக்கு ஆட்பட்டு அதிலிருந்து விடுபடவேண்டி அவரவா்களும் நவக்கிர ஸ்தலங்களுக்குச் சென்று பரிகாரம் தேடுகிறார்கள்.

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி தொடர்பான மன்ற விழாக்கள்! மன்ற வேள்விகள்! சக்தி பீட விழாக்கள் போன்ற நிகழ்ச்சி எதுவானாலும் அதில் கலந்து கொண்டாலே கிரக தோஷத்திலிருந்து விடுபடலாம்!

ஏன் இவள் ஆதிபராசக்தி! பரம்பொருள்! அடிகளார் என்னும் மானிடச் சட்டை தாங்கி வந்திருக்கிறாள்.

நம்பிக்கையுடன் வருபவா்கள் பலன் அடைகிறார்கள்

அவரவா் கா்மம்! அவரவா் ஊழ்வினை! அனுபவப்பட்டவா்கள் எடுத்துக் கூறியும் நம்ப மறுப்பவா்களை என்ன செய்ய…?

ஓம்சக்தி!

நன்றி- (பேராசிரியா் மு. சுந்தரேசன், M.A., M.phil., சித்தா்பீடப் புலவா்)

சக்திஒளி-(செப்டம்பா்2011, பக்-52-56)

]]>