சக்தி பச்சையப்பன், குருங்குளம் ஆலையில் பணிபுரிகிறார். சொந்த வேலையாக மேட்டூர் சென்ற அவரிடம் மன்றத்தலைவர் சக்தி ஆர்.ஜெயராமன் மன்றத்தில் உள்ள கலச தீர்த்தத்தையும், மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்திகுச் செய்த அபிஷேகத் தீர்த்தத்தையும் ஒரு பாட்டில் நிறைய ஊற்றிக் கொடுத்து, இதை 32 அடி தண்ணீர் மட்டுமே உள்ள அந்த மேட்டூர் அணையில் மூலமந்திரத்தைச் சொல்லி ஊற்றிவிடு! மற்றதெல்லாம் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்!” என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

எப்படிப்பட்ட சூழ்நிலையில்……?

தண்ணீரைத் திறந்துவிடு; இலட்சக்கணக்கான ஏக்கர் குறுவைப்பயிர் வாடுகிறது என்று தமிழக அரசு மன்றாடுகிறது. முடியாது என கர்நாடக அரசு மறுக்கிறது. பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தலையிட வேண்டும் என்று கோரிக்கை எழுகின்றன.

‘இவர்கள் எப்போது பேசி எப்போது முடிவெடுப்பது? பயிர்கள் வாடுகிறதே….! என்று தஞ்சை விவசாயிகள் கையைப் பிசைகிறார்கள். ஆதிபராசக்தி பக்தர்கள் ஆன்மீக வழியில் நடவடிக்கை எடுக்கிறார்கள்.

சக்தி பச்சையப்பன் கலச நீரைக் கொண்டு போய் மேட்டூர் அணையில் ஊற்றினார். இன்னொருபுறம் சேலம் மாவட்டத்துச் செவ்வாடைத் தொண்டர்கள், கலச நீரை எடுத்துச் சென்று மேட்டூரில் விடுகிறார்கள்.

இன்னோருபுறம் காவிரிப் பிரச்சனை எப்போது தீருமோ…! இப்போது பெய்ய மழை வேண்டும் என்று பிளஸ் டூ படிக்கிற சிறுவன் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களை வேண்டிக் கொண்டு தன் அறையில் அமர்ந்து கொண்டு விளம்பரமில்லாமல் வேள்விப்பூஜை செய்கிறான்.

ஆதிபராசக்தி தொண்டரின் பொதுநல உணர்வுக்கு மெச்சி பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் மழை கொடுத்தார்கள். காவிரியில் நீர்வரத்து அதிகமாயிற்று. பருவமழை பொழிய ஆரம்பித்தது.

மழை வந்ததும் காவிரியில் நீர் பெருகியதும் மேட்டூர் அணை நிரம்பியதும் தெரியும். நாம் செய்த பணிகள் உலக்கிற்குத் தெரியுமா? ‘நீ செய்யும் சிறிய தொண்டிற்கும் அணுகுண்டுக்குள்ள சக்தியுண்டு!’ என்றாளே அன்னை ஆதிபராசக்தி!

காவிரிப் பிரச்சனை, தஞ்சை விவசாயிகள் பிரச்சனை ஆகியவற்றை இதுவரை யாராலும் தீர்க்க முடியவில்லை.

ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தாலும் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களாலும் தான் அவ்வப்போது தீர்க்கப்பட்டு வருகிறது என்பதுதான் நிஜம்!!

உணர்வோர் உணரட்டும்!

ஓம்சக்தி!

சக்தி அமரானந்தம், ராம்நகர், தஞ்சாவூர்.
பக்கம் 138 -139.
மலரும் நினைவுகள் என்னும் நூலிலிருந்து…..