பரம்பொருள் பங்காருஅம்மாஅவர்களிடம்
சரணடைந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று.
பரம்பொருள் பங்காருஅம்மா
அவர்கள் பல சந்தர்ப்பங்களில்
எங்கள் குடும்பத்தில் பல அற்புதங்கள் புரிந்துள்ளார்கள்.அவற்றில் ஒன்று 2014 ஆகஸ்ட்மாதத்தில் நடந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
2014 மே மாதத்தில் முதல்
முதலாக எனக்கு நெஞ்சில் வலி ஏற்பட்டது.அன்னை ஆதிபராசக்தியின் ஆன்மிகப் பணியில் முழுமையாக ஈடுபட்டதால் அதனை நான்
பெரிதாகப் பொருட்படுத்த முடியவில்லை.
பத்து நிமிடம் நடந்து சென்றவுடன் மீண்டும் வலிஏற்பட்டது.குடும்பத்தினரின் வேண்டுதலுக்கு அமைய
1.7.2014 அன்று எனது மருத்துவரை
அணுகிய போது உடனடியாக
இசிஜி எடுக்க பரிந்துரை
செய்யப்பட்டு மருத்துவமனைக்கு
அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது.
எனது வீட்டிற்கு அருகாமையில்
உள்ள நார்விக்பார்க்மருத்துவமனையில் இருந்து 12.7.2014 அன்று வரும்படி கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.
குறித்த தினம் சென்ற போது வேண்டிய பரிசோதனைகள் எடுக்கப்பட்டு இரண்டு வாரங்களில் அழைப்பு வரும் என்று சொல்லி அனுப்பினார்கள்.அவர்கள் கூறியபடி 2.8.2014 அன்று வருமாறு அழைப்பு வந்தது.
இவ்வாறு இருக்கையில் 12.7.2014 பௌர்ணமி பூசையிலும், 30.7.2014 ஆடிப்பூரக் கஞ்சி வார்ப்பு மற்றும்
பால் ஊற்றும் நிகழ்வுகளில்
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் என்னை முழுமையாகப் பங்கேற்கும் வாய்ப்பினைக் கொடுத்திருந்தார்கள்.
2.8.2014 இல் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்யும் போது மூச்சு விடக் கடுமையாக இருந்தபடியால், உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டது.
5.8.2014 அன்று ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடந்து கொண்டிருந்த போது மேல்மருவத்தூர் கருவறையை நினைந்து மூலமந்திரம் சொல்லிக் கொண்டேயிருந்தேன்.
அதே நாள் 5.8.2014-இல் மேல்மருவத்தூரில் இருந்த எமது மன்ற சக்தி நண்பர் ஒருவர் தகவல் அறிந்து அம்மாவிடம் பாதபூசையில் கேட்டபோது பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் எல்லாவற்றையும் அருகில் வந்து மிகக் கூர்மையாகக் கேட்டு விட்டு மௌனமாக இருந்து தனது நெஞ்சில் மூன்று தடவை பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் தொட்டு விட்டு, “நீ போ ! எல்லாம் சரி வரும் ” என்று அம்மா கூறியதாக எமக்குத் தெரிவிக்கப்பட்டது.
அன்று பரிசோதனை முடிவு வந்தபோது உடனடியாக பைபாஸ் எனும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.அன்று இரவு
11.45 மணியளவில் எனது நிலை பற்றி மருத்துவர்கள் கலந்துரையாடிய பின்பு மறுநாள் காலை 6.8.2014 இன்னொரு பரிசோதனை செய்யப்போவதாகக் கோரி ஒரு பத்திரத்தில் கையொப்பம் இடுமாறு மருத்துவர் ஒருவரும் தாதி ஒருவரும் வந்து வாங்கிச் சென்றனர்.
6.8.2014 அன்று காலை ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு பரிசோதனை முடிவைப் பார்க்கலாம் என்று கூறப்பட்டது.நான் கருவறையில் நிற்பது போன்ற உணர்வுடன் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களை முழுமையாக வேண்டி கண்களை மூடிக்கொண்டு மூலமந்திரத்தையே
அது நடைபெற்ற ஒன்றரை மணி
நேரமும் சொல்லிக் கொண்டே
இருந்தேன்.
கழுத்தில் அன்னை ஆதிபராசக்தியின் உருவம் தாங்கிய டாலர் அணிந்திருந்தேன்
தலையணை உறைக்குள்
பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் தீபத்தட்டுடன் நிற்கும் ஆடி மாத சக்திஒளி புத்தகம் வைத்திருந்தேன்.
என்னே ஒரு ஆச்சரியம்! அன்று
மாலை பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் மருத்துவர்கள் சொன்னார்கள்
.ஒரு நாடி அடைப்பு எடுக்கப்பட்டு
விட்டது ‘என்றும்,மற்ற நாடிகளில்
பாதிப்பு இல்லை என்றும் நாளை 7.8.2014 அன்று மாலை வீட்டிற்குப் போகலாம் ‘என மருத்துவர்கள் சொன்னதும் எவராலும் நம்ப முடியவில்லை.
பரம்பொருள் பங்காருஅம்மா
அவர்கள் எனது வலியை தனது
நெஞ்சிலே வாங்கி அறுவை
சிகிச்சை இல்லாமல் என்னைக்
காத்து உள்ளார்கள்.முலமந்திரத்தின் மகிமையை என்னவென்று கூறுவது ?!
2014 ம் ஆண்டு தைப்பூச ஜோதிக்கு மேல்மருவத்தூர் வந்த நான்
பாதபூசை செய்து பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம்
கேட்டபோது “சித்திரைப்
பௌர்ணமி திரிசூல வேள்விசெய்.
பிரச்சனை எல்லாம் தீரும் “என்றார்கள்
பரம்பொருள் பங்காருஅம்மா
அவர்களின் சொல்படி எனது
மனைவி 14.5.2014 அன்று
நடைபெற்ற சித்திரைப்
பௌர்ணமி வேள்வியில்
கலந்து வேள்வி செய்யப்பட்டது.
அதன் மகிமையைத் தற்போது
தான் உணர்கிறேன் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் வேள்வி
பூசை ஏன் செய்வித்தார்கள் என்று.
வருமுன் காப்பதே பரம்பொருள்அம்மா அவர்களின் திருவருள். பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் ஒன்றைச் செய்ய சொன்னால் அதற்குப் பல காரணங்கள் உண்டு என்பது எனது சிற்றறிவுக்கு முதலில் புரியாமல் போய்விட்டது.
2012 இல் நான் பாதபூசையில் கேட்டபோது, பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் கூறிய அருள்வாக்கு, “நீ என் தொண்டை செய் ;உன்னைக் காப்பது என் பொறுப்பு. “அதன் பலனை 2014 ஆவணி மாதம் பெற்றுக் கொண்டேன்.
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களை முழுமையாக எண்ணி அவர்களிடம் சரணடையுங்கள்! நிச்சியம் நம்மைக் காப்பாற்ற ஓடிவருவார்கள்.
அன்னை ஆதிபராசக்தியால் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது.அன்னை ஆதிபராசக்தியிடம் பெற முடியாததை எங்கும் பெறவும் முடியாது.இதனை நாம் புரிந்து கொண்டால் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின்
எப்போதும் நமக்குத் துணையாக இருப்பார்கள்.இது என் அனுபவம் !
ஓம்சக்தி !
சக்தி T.கேசவன்
ஹாரோ மன்றம், லண்டன்.
பக்கம் (22-23).
சக்திஒளி -ஜீன் 2015.