என் மண்ணை மிதித்தாய் என்பதற்காக உயிர் பிச்சை கொடுத்தேன் உத்தரவு

0
1694

தென் மாவட்டைத்தைச் சேர்ந்த மில் அதிபர் ஒருவர் பெரிய பணக்காரர் சென்னைக்குக் காரில் வந்து கொண்டிருந்தவர் ஏதோ அம்மன் வாக்கு சொல்கிறதாமே — எல்லோரும் பிரமாதமாகச் சொல்கிறார்களே நாமும் தான் கேட்டுப் பார்க்கலாமே என்றென்னி அருள்வாக்குக் கேட்கப் போனார் அவர் அதிர்ஷ்டம் அன்று அருள்வாக்கு கிடைத்தது,

அம்மா சொன்னாளாம் மகனே உன் வலது நுரையீரலில் புற்றுநோய் வர ஆரம்பித்துள்ளது என் மண்ணை மிதித்தாய் உன் உயிரைக் காப்பாற்றுகிறேன் ஆனாலும் 11 மாதம் உன் ஊழ்வினையை அனுபவித்துக் கழிக்க வேண்டி உள்ளதுஉன் ஊழ் வினை கழிந்தப்பின் உன் உயிரைக் காப்பாற்றித் தருகிறேன் உத்தரவு என்றாள்,

அந்த தொழிலதிபருக்கு அது வரை தனது உடம்பு நன்றாகவே இருப்பதாக நினைப்பு, அம்மன் சொல்கிறதே என்பதால் சென்னை சென்றவர் அங்கே மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்தார் ஆமாம் உங்களுக்கு நுரையீரலில் புற்று நோய் இது ஆரம்பம் என்றார்கள் டாக்டர்கள்,

சென்னையிலேயே தங்கிக் கொண்டு சிகிச்சை பெற ஆரம்பித்தார் நாளுக்கு நாள் நோய் அதிகரித்ததே தவிரக்குறைந்தபாடில்லை இப்படி 10 மாதங்கள் பாவம் அவதிப்பட்டார்,

11ஆம் மாதம் நோய் முற்றியது டாக்டர்கள் நம்பிக்கை இழந்தனர் குடும்பத்தார் நம்பிக்கை இழந்தனர் ஏன் அந்த அன்பரே நம்பிக்கை இழந்தார்,

கடைசியில் அந்த தொழில் அதிபருக்கு மருத்துவம் பார்த்த தலைமை மருத்துவர் கனவில் அம்மா தோன்றி மகனே அவனுடைய இரத்தத்தைச் சோதித்து பார் என்று சொல்லி மறைந்தாள்,

டாக்டர் அவ்வாறே இரத்தத்தைச் சோதித்துப் பார்த்தார் சட்டென்று பொறி தட்டியது போல சிகிச்சையில் ஏற்பட்ட குறைபாடு என்ன என்று தெரிந்தது, புது ரத்தம் பாய்ச்சப்பட்டது ஆச்சரியப்படும் விதத்தில் குணமடைந்தார்,

புற்றுநோயிலிருந்து மீண்ட மகிழ்ச்சியில் அம்மாவிடம் வந்தார் தாயே உன்கருணையால் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறேன்,

இதோ Blank cheque எவ்வளவு தொகை கொடு என்கிறாயோ அவ்வளவு தொகையும் இந்த ஆலயத்திற்கு எழுதிக் கொடுக்கிறேன் சொல்லம்மா என்றார்,

புன்முறுவலோடு அம்மா சொன்னாளாம்

மகனே செல்வத்திற்குத் தலைவியான மகாலெட்சுமியையே படைத்தவள் நான் எனக்கு நீ Blank cheque கொடுக்கிறாயா? ஏதோ என் மண்ணை மிதித்தாய் என்பதற்காக உயிர் பிச்சை கொடுத்தேன் உத்தரவு என்று கூறி அனுப்பி விட்டாள்