மருத்துவத்தில் மருவூராள் மெய்ஞ்ஞானம்

0
599

அருள்மிகு அன்னை ஆதிபரா சக்தியின் கடைக்கண் பார்வையிலே வாழும் நாம். இயற்கையை நம்பி வாழ்ந்த நிலையை மறந்து செயற்கையே கதியென்று வாழும் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். விஞ்ஞானம் என்ற பெயரால் மெய்ஞ்ஞானத்தைச் சிறுகச் சிறுக மறந்து அஞ்ஞான உலகினை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் எனினும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளும் கூடத் தமது கண்டுபிடிப்பைப் பற்றி நிருபர்கள், ‘‘என்ன நினைக்கின்றீர்கள்” என்று கேட்கும்போது, அந்தப் பெருந்தகைகள் தருகின்ற பதில் இறையுணர்வோடு இழைவதாகவே இருந்து வருகின்றது.

நோய்நீக்கும் மருவூராளும், அன்னை ஆதிபராசக்தியின் மகனும்: இருள் உலகிலே மருள் நீக்கி அருள்தனைத் தருகின்ற அன்னை ஆதிபராசக்தி மேல் மருவத்தூரில் குடிகொண்டுள்ளான். மக்கள் துயர் தீர்ப்பதே இந்தச் சித்தாடும் வல்லியின் ஆன்மீகப் பணி. பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களைத் தனது கருவியாகக் கொண்டு அவர் மூலம் பக்தர்களுடன் பேசி ஆருத் துன்பங் களை அன்றாடம் தீர்த்து வைக்கின்றான். இதை நம்மில் பலர் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். உடல் நோய், உள்ள நோய், ஊழ்வினை வழிவந்த நோய் மற்றெந்த நோயாயி னும் இந்த மருவூரான் தவிர்த்து வைக்கிறான். தீராத நோய் எல்லாம் தீர்த்து வைக்கும் இந்தப் பெருமாட்டி இயற்கை மருந்துகளையே அருந்தச் சொல்வதில் வியப்பில்லை.

விஞ்ஞான மருத்துவர்கள்: “WE HAVE DONE OWR BEST” “GOD ONLY SHOULD HELP” “AGED PERSAN” “NOTHING IS IN OUR HANDS”

இவைகள் கைதேர்ந்த மருத்துவர்கள் இங்குமங்குமாக அடிக்கடிச் சொல்லும் சொற்கள், மனித முயற்சிகள் தோல்வி அடையும்போது நாவிலே அசைபோடும் சொற்களே இவை.

நோயாளியின் மனம்: எத்தனைச் சிறப்பு மருத்துவர்களைச் சந்திக்க முடியுமோ அத்தனை பேரையும் அணுகித் தன் உடலைக் காண்பித்த பிறகு,

‘‘இது முதிர்ந்த நிலை”, ‘‘முயற்சியில் முனைகிறோம்”

என்று அவர்கள் சொல்லிய பிறகோ, அல்லது கையில் உள்ள பணமெல்லாம் செலவழித்து ஒழிந்த பிறகோ, வேறு வழியே இல்லை என்று நினைக்கின்ற போதோதான் ஞானம் தோன்றுகின்றது; மூலப் பழம் பொருளான நம் முத்தமிழ்த் தெய்வத்தின் நினைவு பிறக்கின்றது.

‘‘மேல்மருவத்தூர் ஆதிபராசக்தித் தாயின் கோயிலுக்கேனும் போய்ப் பார்ப்போமே, அவளாலும் தீர்த்து வைப்பாளான்னு”, இந்த நிலையில் மருவூர் மண்ணை மிதித்துப் பலனடைந்த பலனடைகின்ற பக்தர்கள் கூட்டம் ஏராளம்.

இந்தக் கேஸ் ‘ரொம்ப ரிஸ்க்” என்று சொல்லப்பட்ட உடனே நர்ஸிங் ஹோமிலிருந்து வீட்டுக்குச் சென்று விடுகின்றனர். சிலநாள் கழித்து விஞ்ஞான மருத்துவம் ஏதுமின்றியே நம் நாயகி தரும் எளிய மருந்து அருந்திய சில நாட்களுக்குப் பின் நலமுடன் நர்ஸிங் ஹோம் வரும்போது, மருத்துவர்கள் கண்டு வியப்படைகின்றனர்.

மருத்துவர்கள் வியப்பு: பல மாநிலங்களிலிருந்து கேள்வி மூலம் அன்னை ஆதிபராசக்தியை அறிந்து இங்கு வந்து பிறவியிலிருந்தே வளர்ந்து வரும் நோய்களுக்கும், பலநாள் முயன்றும் தீராத நெடுங்கால வியாதிகளுக்கும், மருவூரே கதி என்று இத்திருக்கோயில் மண்ணை மிதித்து அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கைக் கேட்டு, அவன் சொல்லும் மருந்தினை உண்டு, நிரந்தரக் குணம் பெறுகின்றனர். இந்தச் செய்திகளைக் கண்டும், கேட்டும் விஞ்ஞான ரீதியிலே விளக்கமுடியாத இந்நிலைவினைத் தெளிவாக மருத்துவ மாமேதைகள் அறிந்திருக்கின்றார்கள். ‘‘அருள் வாக்கிலே அன்பு மொழியிலே ஆற்றும் அறப்பணியே ஓர் மருத்துவம். திருச்சொல் வன்மையே நோய் தீர்க்கும் மருந்து.

பல்துறை சார்ந்த சிறப்பு மருந்துவர்கள் அனைத்துலக அள விலே புகழ் பெற்றவர்கள்கூட, அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கைக் கேட்டு அவன் சொல்லும் மருத்துவ முறையில் பலன் கண்டு இன்றும் வியப்படைந்து வருகின்றனர். ‘‘அறுவை சிகிச்சை செய்தல் மிக அவசியம்” என்ற நிலையில்கூட அவன் தருகின்ற மிகச் சாதாரண இயற்கை மருந்துகள் நோய் நீக்குகின்ற பாங்கு வியப்பிற்குரியது.

கட்டுரையின் நோக்கம்: பட்டமும், மேற்பட்டமும் படித்துச் சிறப்படைந்த நம்மில் சிலர் இன்றுகூட இந்தச் சித்தாடும் வல்லி யின் விந்தையாகவே நமக்குக் கிடைக்கின்ற ஆன்மீக மருத்துவப் பணியினை தெரிந்தும் கூட எள்ளி நகையாடும் நிலைமை மிக வருந்தற்குரியது. தெரிந்த, புரிந்த நாம் கண் கூடாக அறிந்த இந்த உண்மையினை ஏற்றுக்கொள்வதிலே என்ன தவறு?

மருந்துவத்தில் அன்னை ஆதிபராசக்தியின் வாக்கு:
வரம்புடைய விஞ்ஞானத்திலே மாறுதலை ஏற்றுக்கொள்கிறோம். தெய்விகம் தரும் இந்தக் கிடைத்தற்கரிய பலனை நாம் ஏன் நழுவவிட வேண்டும்? இந்த வாய்ப்பைத் தெரிந்து இப்பலன் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே இக்கட்டுரையின் நோக்க மாகும்.

‘மனிதனுடைய கண்டு பிடிப்புக்களே மனித அழிவுக்குக் காரணம்” ‘‘செயற்கை முறையே புதிய நோய்களுக்குப் புகலிடம் தருகின்றது” (அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு) ‘‘மருத்துவனாலும் கண்டுபிடிக்க முடியாத நோய்கள் தோன்றி, தீர்க்க முடியாத நிலையிலே மக்கள் அழிவு மிகுதியாகும்” (அன்னை ஆதிபராசக்தியின் ஆண்டுப் பலன் வாக்கு)

அன்னை ஆதிபராசக்தியின் அருமருந்து: இந்த நிலையில் நோய்களினின்று நிவாரணம் பெற அன்னை ஆதிபராசக்தி சொல்லுகின்ற அரு மருந்துகளை அவன் சொல்லுகின்ற முறையைக் கேட்டு, அணுவும் பிசகாமல், அன்னை ஆதிபராசக்தியைச் சரணடைந்து அப்படியே செய்வது ஒன்றே வழி, சாதி, சமயம், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இன்றி ஆண்டு, பெண் அத்துணைப் பேரும் இந்த ஆன்மீக மருத்துவத்தால் பலன் பெற அன்னையை நாடி அன்றாடம் வருகின்றார்கள்.

மருத்துவ நாயகி: மருத்துவர்கள் அனைவரும் கைவிட்டால் வேறு புகலிடம் ஏது என்றுதானே மக்கள் நினைக்கின்றார்கள். இவ்வாறு நினைப்பவர்கள் யார் தெரியுமா? மருத்துவர்களுக்கெல்லாம் மேலாக மருத்துவ நாயகி ஒருத்தி இருக்கின்றாள் என்பதை அறியாதவர்களே! இந்த மருத்துவ நாயகியின் கடல் போன்ற கருணையால், உயிர்ப் பிச்சை பெற்று இன்றும் உயிர் வாழ்கின்ற பலரை இம் மருவத்தூர் மண்ணில் காணலாம். இவர்கள் அனைவருமே தலை சிறந்த மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள் ஆவார்.

நோய் நீக்கிய படலம்: உதாரணத்திற்கு ஒன்றைக் காணலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என்புருக்கி நோயால் அவதியுற்று, இறுதி நிலையில் நால்வரால் தூக்கிவரப் பெற்றார் ஒருவர். முதுகுத் தண்டைப்பற்றும் அளவுக்குப் பரவிவிட்ட என்புருக்கி நோய் (Carles – Splne). இனித் தீராது என்ற முடிவுடன் முடநீக்கு இயல்துறை, சிறப்பு மருத்துவர்களால் கைவிடப்பட்டவர். மருத்துவர்கள் கைவிட்ட காரணத்தால் நம் மருத்துவ நாயகியை நாடி வந்தனர்.

அன்று அருள்வாக்கு நடை பெற்றுக்கொண்டு இருந்தது. மந்திரிப்பு நடைபெறுகின்றது. அப்போது நால்வராலே தூக்கிவரப் பெற்ற அந்த நோயாளியை அன்னை தன் அருள் நிலையிலே, பரம்பொருள் பங்காரு அம்மாஅவர்கள் உருவிலே மந்திரித்தான். பக்தர்கள் இக்காட்சியை வியப்புடன் பார்த்துக்கொண்டுள்ளனர்.

ஓம் சக்தி

நன்றி:

பக்கம் : 41-43

சக்தி ஒளி விளக்கு – 1 சுடர்-1 1982 .