ஆயுளை நீடித்துக்கொடுத்த அன்னை ஆதிபராசக்தி

0
619

செத்தவரை எழுப்பிய அருள்திரு பங்காருஅம்மா
சக்தி பாலசுப்பிரமணியம் அம்மாவின் பக்தா். மத்திய அரசில் உயா் பதவி வகித்தவா். ஆலயத்தில் நடக்கும் எல்லா விழாக்களிலும்கலந்து கொண்டு தொண்டு செய்வார். வேப்பேரி மன்றத்தின் உறுப்பினரும் ஆவார். ஆலயத்திற்கு வந்தாலும் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் தரிசனம் பெறாமல் திரும்பமாட்டார். அவருக்கு வயது 54.
04.01.1998 அன்று வேப்பேரி மன்றத்துக்கு வந்து எப்படியாவது
மேல் மருவத்தூா் போக வேண்டும்
என்று மன்றத் தலைவரைக் கேட்டார். மன்றத் தலைவா் இவரது மைத்துனராவார். இவரைத் தனியாக அனுப்ப மன்றத் தலைவருக்கு மனமில்லை. ஆகையால் இவரது இரண்டு மகன்களையும் கூட அனுப்பி வைத்தார். அன்று மாலை 4.00 மணிக்குப் புறப்பட்டு இரவு சித்தா் பீடத்திற்கு வந்தார்கள். பங்காரு அம்மா அவர்கள்வீட்டிற்குச் சென்று விட்டதால் அவரது வீட்டில் இரவு 8.30 மணிக்குத் தான் பங்காருஅம்மா அவர்களை தரிசிக்க முடிந்தது.
ஆன்மீக விசயங்களெல்லாம் பேசிவிட்டு இரவு 9.15 ற்கு அருள்திரு பங்காரு அம்மா அவர்கள் விடை கொடுத்து அனுப்பினார். அப்போது பங்காரு அம்மா அவா்கள் இளைய மகனை அழைத்து மாமாவின் கால்களை மிதி என்றார்கள். அவ்வாறே அவரது இடது காலை மிதித்தான்.
அவருக்கு இரத்த ஓட்டம் குறைகிறது. “அடுத்த காலையும் மிதி” என்று பங்காரு அம்மா கூறியபடி வலது காலையும் மிதித்தான். அப்போது எதிர்பாராத விதமாக சக்தி பாலசுப்பிரமணியம் திடீரென்று மயங்கி விழுந்தார். மூத்த மகன் ஓடி வந்து அவரைக் கையால் அணைத்து தனது மடியின் மேல் படுக்க வைத்தார்.
பங்காருஅம்மா அவா்கள் “தண்ணீா் தெளியுங்கள். நான் தான் சொன்னேனல்லே” என்று கூறவும் இவரது தம்பி தண்ணீா் தெளித்தார். அதுவரை மயக்க நிலையில் இருந்தவா் திடீரென ஒரு விதமாகத் திமிறிக்
கொண்டு ஓலமிட்டபடி சாய்ந்தார்.
தலை சாய்ந்துவிட்டது. வாய் கோணி நுரை தள்ளியது. கண்கள் செருகின, மலம், சிறுநீா் வெளியேறின. உயிர் பிரிந்துவிட்டது. இரு மகன்களும் பங்காருஅம்மாவைப் பார்த்துக் கதறினார்கள்.
அருள்திரு பங்காருஅம்மா அவா்கள் கையிலே ஒரு செம்பிலே தண்ணீா் வைத்துக்கொண்டுநிற்கிறார்கள்.
அடுத்து மகன்களைப் பார்த்து “என்ன? உங்கள் மாமா போய்விட்டார் என்று பார்த்தாயா? நான் விடமாட்டேன்” என்றார். அடுத்து பரம்பொருளான பங்காரு அம்மா அவா்கள் உயிர் நீத்தவா் அருகில் வந்து தன் கையால் அவா் வாயில் தண்ணீா் ஊற்றி விட்டு நிமிர்ந்தார்கள். அடுத்த நொடியில் இறந்தவா் உயிர் பெற்று எழுந்து பங்காருஅம்மாவின் பாதங்களில் “அம்மா” என்று கதறிக்கொண்டு விழுந்தார்.
திருமதி அம்மா அவர்களின் பதறியது
இங்கே எழுந்த அலறலும், சத்தமும் கேட்டு வீட்டின் உள்ளே இருந்த திருமதி அம்மா வேகமாக வந்து பார்த்து “என்ன நடந்தது?” என்று விசாரித்தார்கள்.
அங்கு நிலவிய சூழ்நிலையை
உணா்ந்து டாக்டரை அழைத்து பரிசோதனை செய்யச் சொன்னார்.
அவா் சக்தி பாலசுப்பிரமணியம் உடலில் ரத்த அழுத்தமும், நாடித் துடிப்பும் எல்லாம் சரியாக இருப்பதாகச் சொன்னார்.
அப்போது பங்காரு அம்மா அவா்கள் சொன்னார்கள் “இன்றோடு உனக்கு எல்லாம் முடிஞ்சு போச்சு! இன்றிலிருந்து உனக்குப் புது வாழ்கை தான்!
நீ இதுவரை செய்து வந்த
தொண்டெல்லாம் அம்மா மறக்கல! உனக்கு இது மறுபிறவி” என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவா் செய்த தொண்டின் சிறப்பினை உணா்த்த இறந்த சக்தி பாலசுப்பிரமணியனின் உயிரை மீட்டுத் தந்துள்ளார். தொண்டின் பெருமையை நாம் எல்லாம் புரிந்து கொண்டு பங்காருஅம்மா அவர்கள் சொல்லிய தொண்டுகளைச் செய்து பங்காருஅம்மாவின் அருளைப் பெறுவோமாக!
தொடரும்.