உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும்.

ஆலயத்தை வலம் வரும்போது ஓரளவுதான் காலில் மண் ஒட்டும். ஆலயத்தில் உள்ள மண் முழுவதும் ஒட்டாது.

அதுபோல..
உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும்.

அதிக அளவு மண் ஒட்டவேண்டும் என்பதற்காக ஈரக்கால்களுடன் ஆலயத்தை வலம் வந்தால் மண் ஒட்டாது.

மண்ணில் உள்ள அழுக்கு தான் ஒட்டும்.

போலி வேடத்தாலும், பணத்தாலும்…,
அம்மாவை அடையமுடியாது.

காலில் ஒட்டக்கூடிய மண் போன்றவர்கள்..,
அம்மாவின் வார்த்தையைக் கேட்டு நடக்கும் உண்மையான பக்தர்கள்.

ஈரக்காலில் ஒட்டும் அழுக்கு போன்றவர்கள் கவர்ச்சிக்காக அம்மாவை வழிபடுகிறவர்கள்.”

குறிப்பு:

(ஆரம்பகாலத்தில் ஆலயத்தின் நடைபகுதி மணல்தரையாக இருந்தது.)

அன்னையின் அருள்வாக்கு